பொடுதலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொடுதலை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Verbenaceae
பேரினம்: Phyla
இனம்: P. nodiflora
இருசொற் பெயரீடு
Phyla nodiflora
(லி.) கிரீன்

பொடுதலை, பொடுதினை பூஞ்சாதம், பூற்சாதம் (Phyla nodiflora) என்பது ஒரு மூலிகைச் செடியாகும். இது ஈரப்பாங்கான தரையுடன் ஒட்டிப் படர்ந்து வளர்கிறது. இது மருத்துவக் குணங்களுடைய ஒரு மூலிகைச் செடியாகும்.[1]

பெயர்க் காரணம்[தொகு]

இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணையானது பொடுகுத் தொந்தரவைத் தீர்க்கப் பயன்படுவதால் பொடுதலை எனும் பெயரால் அழைக்கப்படுகிறது.

விளக்கம்[தொகு]

பொடுதலையின் தண்டானது சிறிய ரோம வளரிகள் கொண்டதாக இருக்கும். இது சிறிய இலைகளைக் கொண்டது. இலைகளின் விளிம்புகளில் வெட்டுகள் கொண்டதுபோன்ற தோற்றம் கொண்டது. பொடுதலையின் காயானது சிறியதாகவும் திப்பிலிபோன்றும் இருக்கும். தண்டில் உள்ள கணுப்பகுதிகளில்யில் வேர்கள் உருவாகி தரையைப் பற்றிக்கொள்ளும். இதன் மலர்கள் அழகியதாகவும் கருஞ்சிவப்புடன் வெண்ணிறம் கலந்த நிறத்தோடு இருக்கும். இது பலவகையில் சித்த மருத்துவத்திலும், வீட்டுவைத்தியத்திலும் பயன்படுகிறது.[2]

"பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி" என்பது பழமொழி.

குறிப்புகள்[தொகு]

  1. Pharmacopia indica.
  2. டாக்டர் வி. விக்ரம் குமார் (23 சூன் 2018). "‘தலை’ காக்கும் பொடு‘தலை!’". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/general/health/article24231959.ece. பார்த்த நாள்: 27 சூன் 2018. 

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொடுதலை&oldid=3762093" இருந்து மீள்விக்கப்பட்டது