பைலட் (எழுதுகோல் நிறுவனம்)
Appearance
நிறுவுகை | 1918 -"நமிகி மேனுபாக்ச்சரிங் கம்பனி" (ஜப்பான்) |
---|---|
நிறுவனர்(கள்) | ரியோசுகே நமிகி |
தலைமையகம் | தோக்கியோ, ஜப்பான் |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
தொழில்துறை | எழுதுபொருள் நிறுவனம் |
உற்பத்திகள் | எழுதுகோல்கள் |
இணையத்தளம் | www.pilotpen.com |
பைலட் (Pilot Corporation) தோக்கியோவைத் தலைமையகமாக கொண்ட ஓர் ஜப்பானிய எழுதுகோல் நிறுவனமாகும். இதன் துணை நிறுவனங்கள் பிலிப்பீன்ஸ், ஐக்கிய ராஜ்ஜியம், இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்சில் உள்ளன.
வரலாறு
[தொகு]தோக்கியோவிலுள்ள கடற் சார்ந்த வியாபாரக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்த ரியோசுகே நமிகி, 1915ல் மைக்கோலின் கூர்முனை தயாரிக்கும் சிறு தொழிற்சாலையைத் துவங்கினார்[1] . 1918ல் அவரது நண்பர் மசவோ வாதாவுடன் இணைந்து "நமிகி மேனுபாக்ச்சரிங் கம்பனி" என்ற பெயரில் நிறுவினார். பைலட் என்ற குறியில் எழுதுகோல்களை வெளியிட்டார். பின்னர் அந்த நிறுவனத்தின் பெயர் "பைலட் கார்ப்பரேஷன்" என மாற்றப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pilot Pen: History", Pilot website.