பைரோசு தஸ்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைரோசு தஸ்தூர்
பிறப்பு(1919-09-30)30 செப்டம்பர் 1919
பம்பாய், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு9 மே 2008(2008-05-09) (அகவை 88)
மும்பை
பணிபாடகர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1941–2006

பைரோசு தஸ்தூர் (Firoz Dastur) (30 செப்டம்பர் 1919 - 9 மே 2008) மேலும் பெரோசு தஸ்தூர் என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகரும், இந்திய பாரம்பரிய இசையில் கிரானா கரானாவில் (பாடும் பாணி) குரலிசைக் கலைஞருமாவார்.

தொழில்[தொகு]

1930களில் இந்தியத் திரையுலகில் பணியாற்றிய தஸ்தூர், 'வாடியா மூவிடோன்' தயாரித்த சில படங்களிலும் பிற தயாரிப்புகளிலும் நடித்தார். 1933 ஆம் ஆண்டில், ஜே. பி. ஹெச். வாடியாவின் கீழ் வாடியா மூவிடோன் அதன் முதல் பேசும் திரைப்படத்தை வெளியிட்டபோது, லால்-இ-யமான் என்றப் படத்தில் குழந்தை நடிகராக பாடல்களை பாடினார்.[1] ஆனாலும் இந்திய பாரம்பரிய இசையே இவரது முதல் விருப்பமாக இருந்தது.

இவர் சவாய் கந்தர்வனின் சீடராக இருந்தார். கந்தர்வனின் மற்ற சீடர்களான பீம்சென் ஜோஷி மற்றும் கங்குபாய் ஹங்கல்,[2] ஆகியோருடன் 80களின் பிற்பகுதியில் சவாய் கந்தர்வ இசை விழாவில் பல ஆண்டுகளாக ஒரு வழக்கமான கலைஞராக இருந்தார்.

தஸ்தூரின் இசை அப்துல் கரீம் கானின் பாணிக்கு மிக நெருக்கமாக இருந்தது. இவர் பல மாணவர்களுக்கு இசை கற்றுக் கொடுத்தார்.

இறப்பு[தொகு]

தஸ்தூர் 2008 மே மாதம் மும்பையில் தனது 89 வயதில் சிலகாலம் நோய்வாய்பட்டு இறந்தார்.

நூலியல்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Gulzar; Govind Nihalani; Saibal Chatterjee (2003). Encyclopaedia Of Hindi Cinema. Popular Prakashan. பக். 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7991-066-5. https://books.google.com/books?id=8y8vN9A14nkC&pg=PT70. பார்த்த நாள்: 20 July 2013. 
  2. "Tribute to a Maestro: Sawai Gandharva". ITC Sangeet Research Academy. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரோசு_தஸ்தூர்&oldid=3505978" இலிருந்து மீள்விக்கப்பட்டது