பைராக்சுமாங்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைராக்சுமாங்கைட்டு
Pyroxmangite
Pyroxmangite-261781.jpg
யப்பானில் கிடைத்த பைராக்சுமாங்கைட்டு
பொதுவானாவை
வகைஇனோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுMnSiO3
இனங்காணல்
நிறம்இளஞ் சிவப்பு, சிவப்பு, பழுப்பு
படிக அமைப்புமுச்சாய்வு
இரட்டைப் படிகமுறல்{010} மடிப்பு நிலை, {001}இல் எளிமை
பிளப்பு{110} இல் சரிபிளவு, {110}, (110) ^ (110) = 92° மோசமான பிளவு{010}, {001}
முறிவுசமமற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை5 12 – 6
மிளிர்வுமுத்துப் போல பளபளப்பு
கீற்றுவண்ணம்நிறமற்றது
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும், ஒளி கசியும்
ஒப்படர்த்தி3.8
இரட்டை ஒளிவிலகல்δ=0.018
பிற சிறப்பியல்புகள்உருவவியல்: படிகங்கள், மணிகள்,சிறுமணிகள்
மேற்கோள்கள்[1][2][3]

பைராக்சுமாங்கைட்டு (Pyroxmangite) என்பது MnSiO3.[4]என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ரோடோனைட்டின் உயர் அழுத்த, தாழ்வெப்ப ஈருருவக் கனிமமாகும் [1]. 1913 ஆம் ஆண்டு இக்கனிமம் முதன் முதலில் கண்டறிந்து விவரிக்கப்பட்டது. பைராக்சீன்கள் என்ற கனிமக் குழுவில் இடம்பெற்றிருந்த காரணத்தால் பைராக்சீன் என்ற பெயரைப் பெற்றது. மற்றும் ஒரு மாங்கனீசு உறுப்பினராகவும் கருதப்படுகிறது. மேலும் இது பைராக்சுபெர்ரோயிட்டு தொடரில் பல கனிமங்களாக உருவாகிறது [5] மாங்கனீசு நிறைந்த உருமாற்ற தாதுப் படிவுகளில் பைராக்சுமாங்கைட்டு தோன்றுகிறது. இதனுடன் சிபெசார்ட்டைன், டெப்ராயிட்டு, அல்லிகேன்யைட்டு, ஆசுமானைட்டு, பைரோபேனைட்டு, அலாபேன்டைட்டு, ரோடோனைட்டு மற்றும் ரோடோகுரோசைட்டு போன்ற கனிமங்களும் கலந்து காணப்படுகின்றன [3].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ralph, Jolyon, and Ida Chao. "Pyroxmangite: Pyroxmangite Mineral Information and Data." MinDat.org
  2. Barthelmy, David. "The Mineral Pyroxmangite." minerals.net
  3. 3.0 3.1 "Pyroxmangite" (PDF). Handbook of Mineralogy. II (Silica, Silicates). Chantilly, VA, US: Mineralogical Society of America. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0962209716. http://rruff.geo.arizona.edu/doclib/hom/pyroxmangite.pdf. பார்த்த நாள்: December 5, 2011. 
  4. Pinckney, Linda R, and Charles W Burnham. "High-Temperature crystal structure of pyroxmangite." American Mineralogist 73 (1988): 809–817. GeoScienceWorld. Web. 13 September 2010.
  5. Ford, W.E.; Bradley, W.M. (1913). "Pyroxmangite, a new member of the pyroxene group and its alteration product, skemmatite". American Journal of Science 36: 169–174. doi:10.2475/ajs.s4-36.212.169. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைராக்சுமாங்கைட்டு&oldid=2675107" இருந்து மீள்விக்கப்பட்டது