பையோன்
பையோன் அல்லது பை மேசன் எனப்படுவது துகள் இயற்பியலில் குறிப்பிடப்படும் ஒரு துகளாகும். இது கிரேக்க எழுத்தான பை (π) இனால் குறிக்கப்படுவதுடன் π0, π +, மற்றும் π− ஆகிய மூன்று துணை அணுத் துகள்களில் ஏதாவது ஒன்றாகும். ஒவ்வொரு பையோனும் ஒரு குவார்க்கையும் ஒரு எதிர் குவார்க்கையும் கொண்டுள்ளபடியால் இது ஒரு மேசான் ஆகும். பையோன்கள் மிகவும் இலேசான மேசான்கள் ஆகும். இன்னும் பரந்த அளவில் கூறின் இவற்றை மிகவும் இலேசான ஹாட்ரான்கள் எனலாம். பையோன்கள் நிலையற்றவையாக இருப்பதால், ஏற்றப்பட்ட பையோன்களான π + மற்றும் π- சராசரி வாழ்நாள் 26.033 நானோ வினாடிகளில் (2.6033×10−8 வினாடிகள்) தேய்வடைவதுடன் நடுநிலை பையோன்கள் π0 ஆனவை 85 அடொ வினாடிகளில் (8.5×10−17 வினாடிகள்) தேய்வடைகின்றன.[1] ஏற்றப்பட்ட பையோன்கள் பெரும்பாலும் மீயோன்களாகவும் மீயோன் நியூட்ரினோக்களாகவும் தேய்வடைகின்ற அதேவேளை நடுநிலை பையோன்கள் பொதுவாக காமா கதிர்களாக தேய்வடைகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zyla, P. A. et al. (2020). "Review of Particle Physics". Progress of Theoretical and Experimental Physics 2020 (8): 083C01. doi:10.1093/ptep/ptaa104.