பையப்பனஹள்ளி மெட்ரோ நிலையம்
பையப்பனகள்ளி | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நம்ம மெட்ரோ நிலையம் | |||||||||||
பையப்பனகள்ளி மெட்ரோ நுழைவு வாயில் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | பென்னிங்கான கள்ளி | ||||||||||
ஆள்கூறுகள் | 12°59′30″N 77°39′19″E / 12.99166°N 77.65540°E | ||||||||||
இயக்குபவர் | பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்ரேசன் (BMRCL) | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | உள்ளது | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | நிறுத்துமிடமுள்ளது | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | அக்டோபர் 20, 2011 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
பையப்பனகள்ளி மெட்ரோ நிலையம், பெங்களூருவில் உள்ள நம்ம மெட்ரோவின் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் கிழக்கு முனையம் ஆகும்.[1]
மெட்ரோ நிலையத்திலிருந்து, கசுதூரிநகர் வரையிலும் மேம்பால இணைப்பு கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இம்மேம்பாலத்தை கட்டுவதற்கு ஆணையாளர் அனுமதி அளித்துள்ளார்.[2]
ஆரம்பத்தில், நம்ம மெட்ரோவில் கழிவறை வசதிகள் ஏதுமில்லாமல் இருந்தது; பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கும் இந்திராநகர் மெட்ரோ நிலையத்திலும் கழிவறை வசதி 2013-ம் ஆண்டு சூன் 21-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது.[3]
வாகன நிறுத்துமிடம்
[தொகு]பையப்பனகள்ளி நிலையம் சுமார் 2600 சதுர மீட்டர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடத்தைக் கொண்டுள்ளது. இது 2015-ம் ஆண்டு வரை மத்திய வாகன நிறுத்துமிட சேவையாளர் வாயிலாக செயல்படுகிறது.[4] இவ்விடத்தில் சுமார் 100 நான்கு சக்கர வாகனங்களும், 150 இரு சக்கர வாகனங்களும் நிறுத்தமுடியும்.[5]
படக்காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bangalore Metro opens to public at 4pm on Thursday". The Economic Times. 17 October 2011. Retrieved 17 October 2011.
- ↑ "Bangalore Metro to continue work on underground station". Daily News and Analysis. 13 March 2012.
- ↑ "At Metro, wanna pee? Pay Rs 3". Daily News and Analysis. 15 June 2013.
- ↑ "Park car, pay more at metro". The Hindu (Chennai, India). 30 March 2012.
- ↑ "Pay and park at two Metro stations". Times Of India. 31 March 2012.