உள்ளடக்கத்துக்குச் செல்

பேவேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேவேவ்

பேவேவ் (payWave) என்பது விசா நிறுவனத்தினால் தனியாக வெளியிடப்பட்டிருக்கும் ஒரு கடன் அட்டையாகும். இவ்வட்டை மற்ற கடன் அட்டையைப் போன்றே பயன்படுத்த முடியும் என்றாலும், இவ்வட்டையைக் கண்ணுக்குப் புலப்படாத அகச்சிவப்பு நுண்ணலைகள் தொடர்பாலும் பயன்படுத்த முடியும். இவ்வட்டையைத் தடவியோ (தடவி இழுத்தோ swiping ) அல்லது செருகியோ(insert) பயன்படுத்துவது மட்டும் அல்லாமல் (அகச்சிவப்புக் கதிர் வழி) அட்டையில் உள்ள குறிப்பை உணரும் அல்லது படிக்கும் கருவிமுன் அசைப்பதன் முலம் பணப் பரிமாற்றத்தைப் பாதுகாப்பாகச் செய்யமுடியும்.

வேலை செய்யும்விதம்

[தொகு]

இவ்வட்டையில் ஒர் அலைவழிப்படுத்தி(antenna) மற்றும் ஒரு தொகுசுற்று (processor) உள்ளிடாகப் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வட்டையை வாசிப்புக்கருவி முன் அசைப்பதன் மூலம், ஒர் தொடுதல்லில்லா தொடர்பு (contactless communication) அட்டைக்கும் வாசிப்புக்கருவிக்கும் ஏற்படுத்தப்பட்டு பணப்பரிமாற்றம் நடைபெறுகின்றது. இதன் மூலம் நடைபெறும் பரிமாற்றங்களுக்கு வாடிக்கையாளரின் கையொப்பம் கோரப்படுவதிலை. பணப்பரிமாற்றங்களைச் செய்ய எடுக்கும் நேரத்தை குறைப்பதே இதன் நோக்கம் ஆகும். விசா நிறுவனம் அதிக அளவாக 50 டொலர் வரையிலான பண பரிமாற்றத்தை மட்டுமே பாதுகாப்புக்காரணங்களுக்காக அனுமதிக்கின்றது. கனடாவில் இவ்வகை அட்டையை ராயல் வங்கி, டொரன்டோ டொமினியன் வங்கி, ஸ்கோட்ரியா வங்கி போன்றவை மக்களுக்கு வழங்கிவருகின்றன.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேவேவ்&oldid=3222814" இலிருந்து மீள்விக்கப்பட்டது