பேபாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேபாஸ் மாஸ்டர் கடன் அட்டை நிறுவனத்தினால் பிரத்தோயகமாய் வெளியிடப்பட்டிருக்கும் ஒர் கடன் அட்டையாகும். இது மாஸ்டர் கடன் அட்டையின் போட்டி நிறுவனமான விசா அறிமுகப்படுத்திய பேவேவ் அட்டையைப் போன்றது. இவ்வட்டைமற்ற கடன் அடையைப் போன்றே பயன்படுத்த முடியும் என்றாலும், இவ்வட்டையை இன்ப்ராரெட் எனப்படும் நுன்அலை மூலமாகவும் பயன்படுத்த முடியும். இவ்வட்டையைத் தேய்த்தோ(swiping ) அல்லது செருகியோ(insert) அல்லமல் அட்டைவாசிப்பு கருவிமுன் அசைப்பதன் முலம் பணப்பரிவர்தணையை பாதுகாப்பாக செய்யமுடியும்.

வேலை செய்யும்விதம்[தொகு]

இவ்வட்டையில் ஒர் அலைவழிப்படுதி(antenna) மற்றும் ஒரு தொகுசுற்று உள்ளிடாகப் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வட்டையை வாசிப்புக்கருவி முன் அசைப்பதன் மூலம், ஒர் தொடுதல்லில்லா தொடர்பு (contactless communication) அட்டைக்கும் வாசிப்புக்கருவிக்கும் ஏற்படுத்தப்பட்டு பணப்பரிவர்தனை நடைபெறுகின்றது. பணப்பரிவர்தனை செய்ய எடுக்கும் நேரத்தை குறைப்பதே இதன் நோக்கம் ஆகும். விசா நிறுவனம் அதிகபட்சமாக 50 டொலர் வரையிலான பண பரிவர்த்தையை மட்டுமே பாதுகாப்புக்காரணங்களுக்காக அனுமதிக்கின்றது. கனடாவில் இவ்வகை அட்டையை பாங்க் ஆப் மொன்றியல் (Bank of Montreal), மக்களுக்கு வழங்கிவருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேபாஸ்&oldid=2757372" இலிருந்து மீள்விக்கப்பட்டது