பேண்டி ஆறு
தோற்றம்
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் லூனி ஆற்றின் கிளை நதியாக பேண்டி (Bandi River) உள்ளது, இது ஜோத்பூர் மாவட்டத்தில் இலூனி ஆற்றுடன் இணைகின்றது.[1] பேண்டி ஆற்றினை ஒடிசா மாநிலத்தில் உள்ள பாடி நதியுடன் குழப்பமடையக்கூடாது.
பாம்போத்ராவிற்கு அருகில் காரி மற்றும் மிதாரி நதியின் இணைவுக்குப்பின் இந்த நதிக்கு பேண்டி என்று அழைக்கப்படுகிறது.
இது சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பிறகு, லகார் கிராமத்திற்கு அருகில் இலூனி ஆற்றுடன் இணைகிறது.[2] ஹேமாவாஸ் அணை இந்த ஆற்றில் ஹேமாவாஸுக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. பாலி மாவட்ட தலைமையகம் பேண்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இதன் நீர்ப்பிடிப்பு பகுதி சுமார் 1,685 கி.மீ. 2 ஆகும். இது பாலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sandrp (2018-01-31). "Urban Rivers: Bandi, Rajasthan". SANDRP (in ஆங்கிலம்). Retrieved 2021-06-19.
- ↑ "Luni River: Origin, Tributaries, Basin, Dams and Concerns". RajRAS (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-06-19.