பேட்ரோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேட்ரோனைட்டு
Patronite
பெரு நாட்டின் மினாசு ராக்ராவில் கிடைத்த பேட்ரோனைட்டு
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுVS4
இனங்காணல்
மோலார் நிறை179.21 கி/மோல்
நிறம்புதிய பரப்புகளில் ஈயம்-சாம்பல், காற்றில் வெளிப்பட்ட பிறகு சாம்பல்-கருப்பு
படிக இயல்புநெடுவரிசை படிகத் திரட்டுகளாகவும் பாரிய வடிவத்திலும் தோன்றுகிறது
படிக அமைப்புஒற்றைச் சரிவச்சு
பிளப்புதனித்துவமான நெடுவரிசை
மோவின் அளவுகோல் வலிமை2
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்கருப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி2.82
பலதிசை வண்ணப்படிகமைவலிமையானது
மேற்கோள்கள்[1][2][3][4]

பேட்ரோனைட்டு (Patrónite) என்பது VS4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். வனேடியத்தின் சல்பைடு கனிமமான இது பொதுவாக V4+(S22−)2 என்ற அயனிகளின் சேர்க்கையாக விவரிக்கப்படுகிறது.[5] கட்டமைப்பு ரீதியாக இக்கனிமம் வனேடியம் மையங்களுக்கு இடையே மாற்று பிணைப்பு மற்றும் பிணைப்பு இல்லாத தொடர்புகளைக் கொண்ட ஒரு "நேரியல்-சங்கிலி" சேர்மமாகும். வனேடியம் எண்முக-ஒருங்கிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளது. இது இந்த உலோகத்திற்கான ஒரு அசாதாரண வடிவவியலாகும்.[6]

பேட்ரோனைட்டு கனிமம் முதன்முதலில் 1906 ஆம் ஆண்டில் பெரு நாட்டின் செரோ டி பாசுகோ மண்டலத்தில் இயூனின் நகருக்கு அருகே உள்ள மினாசு ராக்ரா வனேடியம் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பெருவியன் நாட்டின் உலோகவியலாளரான ஆண்டெனார் ரிசோ பேட்ரன் (1866-1948) நினைவாக கனிமத்திற்கு பேட்ரோனைட்டு என்று பெயரிடப்பட்டது. இந்த கனிமப் படிவுகளை இவரே கண்டுபிடித்தார்.[2][3] பெருவில் காணப்பட்ட நிலக்கீல் எண்ணெய் படிவுகளின் பிளவுகளில் அசுபால்ட்டு என்ற பாறை எண்ணெயின் வழிப்பெறுதி போல பேட்ரோனைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடன் தொடர்புடைய தாதுக்களாக கந்தகம், பிராவோயிட்டு, பைரைட்டு, மினாசுராக்ரைட்டு, இசுடான்லைட்டு, தவோர்னிகைட்டு, குவார்ட்சு மற்றும் வனேடியத்தைக் கொண்டுள்ள பழுப்பு நிலக்கரி [3] ஆகியவை அறியப்படுகின்றன. உருசியாவின் யூரல் மலைத்தொடரின் துருவப்பகுதியிலுள்ள பைகோய் மலைத்தொடரில் பாயும் மத்திய சிலோவா-யாக்கா நதியின் யுசுகினைட்டு பள்ளத்தாக்கு மற்றும் நமீபியாவில் உள்ள சுமேப் சுரங்கத்தில் இருந்தும் பேட்ரோனைட்டு கிடைக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mineralienatlas
  2. 2.0 2.1 2.2 Mindat.org
  3. 3.0 3.1 3.2 Handbook of Mineralogy
  4. Webmineral data
  5. Vaughan, D. J.; Craig, J. R. “Mineral Chemistry of Metal Sulfides" Cambridge University Press, Cambridge: 1978. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-21489-0.
  6. Allmann, R.; Baumann, I.; Kutoglu, A.; Rosch H.; Hellner E. (1964). "Die Kristallstruktur des Patronits V(S2)2 ". Naturwissenschaften 51 (11): 263–264. doi:10.1007/BF00638454. Bibcode: 1964NW.....51..263A. https://archive.org/details/sim_naturwissenschaften_1964_51_11/page/263. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்ரோனைட்டு&oldid=3796723" இலிருந்து மீள்விக்கப்பட்டது