உள்ளடக்கத்துக்குச் செல்

பேட்ரிக் ரசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேட்ரிக் ரசல் 1794இல், வில்லியம் டேனியல் வரைந்தது

பேட்ரிக் ரசல் (6 பிப்ரவரி 1727, எடின்பர்க் - சூலை 2 1805, இலண்டன்) [1] ஒரு ஸ்காட்லாந்து நாட்டு அறுவை மருத்துவரும் இயற்கையியலரும் ஆவார். இந்தியாவில் பணிபுரிந்தபோது பல இந்தியப் பாம்புகளைப் பற்றி ஆராய்ந்த இவர், இந்தியப் பாம்பியலின் தந்தை என்று கருதப்படுகிறார். கண்ணாடி விரியன் பாம்பின் ஆங்கிலப் பெயரும் விலங்கியல் பெயரும் ரசலின் பெயர் கொண்டு சூட்டப்பட்டுள்ளன.[2]

பணி

[தொகு]

அவரது பணிக்காலத்தை இரு கட்டங்களாகப் பிரிக்கலாம்: முதல் கட்டம் [1750 - 1771]: சிரியாவிலுள்ள அலெப்போவில் அவர் பணியாற்றிய காலம். இரண்டு [1781 - 1791]: தென்னிந்தியாவில் பணியாற்றிய காலம்.

தென்னிந்தியாவில்

[தொகு]

1781 இல் விசாகப்பட்டினத்திற்கு வந்த பேட்ரிக், சோழமண்டலக்கரைப் பகுதியில் உள்ள தாவரங்கள், மீன்கள், பாம்புகளைப் பற்றி பயின்றார். பாம்புகளைப் பற்றிய முறையான அறிவு இல்லாதது குறித்தும் பாம்புக் கடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவர் கவலை கொண்டிருந்தார். ஒவ்வொரு பாம்பின் பழக்கம், அவை பற்றிய பொதுக் கருத்துகள் மற்றும் அவற்றின் உள்ளூர் பெயர்கள் ஆகிய தகவல்களைச் சேகரித்தார். ஒரு பாம்பு நச்சுத்தன்மை கொண்டதா என்பதை அறிய அவர் சோதனைகள் செய்தார். லின்னேயசின் முறையைப் பயன்படுத்தி முதலில் சேகரித்த 43 பாம்புகளை ஆய்வு செய்து மூன்று பேரினத் தொகுதிகளை இனங்கண்டார்[3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Desmond, Ray: Dictionary Of British And Irish Botantists And Horticulturalists. Taylor & Francis, 1994, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85066-843-3, p. 2605.
  2. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. ("Russell, P.", pp. 229-230).
  3. https://cmj.sljol.info/articles/10.4038/cmj.v46i2.6488/galley/5084/download/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்ரிக்_ரசல்&oldid=3539483" இலிருந்து மீள்விக்கப்பட்டது