பேச்சு:2016 வடகிழக்குப் பருவமழைக் காலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

I am sorry to write in English due technical issues. Each year Northeast monsoon occurs and how this article could be notable unless there are notable issues? Are we going to create articles like xxxx வடகிழக்குப் பருவமழைக் காலம்? I suggest to delete rather than having articles like news blogs. --~AntanO4task (பேச்சு) 11:02, 31 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

  • பிரச்சனைகள் இருந்தால்தான் கட்டுரைகள் இருக்க வேண்டும் என்பதில்லை. கலைக்களஞ்சியத்துக்கு தேவையான தகவல்களும், அதற்குரிய மேற்கோள்களும் உள்ளடக்கத்தில் இருந்தால் கட்டுரையாக இருக்க தகுதி இருக்கிறது. அவ்வகையில், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழைக் காலம் குறித்து கட்டுரை எழுதுவதில் என்ன தவறு?
  • இது போன்ற கட்டுரைகளை செய்தி வலைப்பூ எனக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:19, 31 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
பிரச்சனைகள் இருந்தால்தான் கட்டுரைகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை; மாறாக, குறிப்பிடத்தக்கமை (notable) இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. குறிப்பாக, en:WP:NOTLYRICS, ஒரு தரவுத்தளம் அன்று. இக்கட்டுரை கலைக்களஞ்சியத்துக்கு தேவையான தகவலைத் தராமல் தரவினை மட்டுமே தடுகிறது. ஒவ்வொரு வருடமும் வடகிழக்குப் பருவமழைக் காலம் வருகிறது. ஒவ்வொன்றுக்கும் கட்டுரை உருவாக்க விக்கிப்பீடியா தரவுத்தளமா? அதுவும் இது தமிழ்நாட்டுத் தரவினை மட்டும் தருகிறது. தயவு செய்து கலைக்களஞ்சியத்திற்கும் தரவிற்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொண்டு கட்டுரை உருவாக்குவது சிறப்பு. --~AntanO4task (பேச்சு) 03:09, 3 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
  • உங்களின் உரையில் notable issues? என வினவியிருக்கிறீர்கள்.
  • இது ஒரு நடப்பு நிகழ்வுக் கட்டுரை என்பதனை கவனித்திருப்பீர்கள் என நம்புகிறேன். கட்டுரை முழுமையடையாமலேயே வெறும் தரவை மட்டும் கொண்டுள்ள கட்டுரை என ஏன் முடிவு கட்ட வேண்டும்?
  • ஒவ்வொரு ஆண்டும் வரும் அல்லது நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பலவற்றை விக்கி கொண்டுள்ளது. ஆண்டுதோறும் வரக்கூடிய தீபாவளி, பொங்கல் பண்டிகைக்காகவா நான் கட்டுரை எழுதியிருக்கிறேன்?
  • கடிகாரம் குறித்த கட்டுரையை எழுதுபவர் அது குறித்து 100% எழுதினால்தான் விக்கி ஏற்றுக்கொள்ளுமா என்ன? தமிழகம் குறித்த தரவினை என்னால் இட இயலும். இந்தப் பருவக் காற்றால் மழைபெறக்கூடிய இலங்கை மற்றும் ஆந்திர மாநிலம் குறித்து எவரும் எழுதினால் கட்டுரை விரிவுபெறட்டும்!
  • தரவுகளையும் உள்ளடக்கியதுதான் விக்கி என்பது எமக்குத் தெரியும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:06, 3 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
மற்றப் பயனர்களும் பார்வையிட்டு, இந்தக் கட்டுரை விக்கிக்கு தேவையா, தேவையற்றதா என முடிவு செய்யுங்கள். கட்டுரையின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரை அல்ல இது. தமிழகம் சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க கட்டுரைதான் இது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:48, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

en:2016 North Indian Ocean cyclone season என்பதற்கு ஏற்ப (தலைப்பு உட்பட) கட்டுரை எடுதப்படுவது ஏற்றது. en:2015 North Indian Ocean cyclone season என்ற கட்டுரையும் உள்ளது. ஆனால் 2016 வடகிழக்குப் பருவமழைக் காலம் என்பது உள்ளடக்கத்திலும் தலைப்பிலும் தெளிவாற்ற கலைக்களஞ்சியமாய் உள்ளது. அல்லது "2016 கோடைகாலம்" என்ற தலைப்புக்களில் கட்டுரைகள் உருவாகுவதையும் ஏற்க வேண்டிய பிழையான உதாரணமாக இக்கட்டுரை அமையக்கூடாது. இல்லை இப்படித்தான் கட்டுரை இருக்கும் என்றால், தாராளமாக வார்ப்புருவை நீக்கிவிடுங்கள். நன்றி. --~AntanO4task (பேச்சு) 14:24, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

1. கட்டுரையின் அடிப்படை நோக்கத்தை புரிந்துகொள்ளுமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். ஆண்டுதோறும் வரும் வடகிழக்குப் பருவமழைக் காலம், தமிழகத்து மக்களின் வாழ்வை குறிப்பிடத்தக்க அளவில் தீர்மானிக்கக்கூடியது. அரசியல், விலைவாசி, வாழ்வாதாரம் என பலதரப்பட்ட கூறுகள் இக்காலத்தில் பெய்யும் மழையைப் பொறுத்து இங்கு மாறுகின்றன. எனவே இக்காலம் குறித்த தகவல்களை கலைக்களஞ்சியத்திற்காக தொகுக்கிறேன். கால நிலைகளை கவனித்து வருபவர்களுக்கும், சுற்றுச்சூழல் குறித்த ஆர்வலர்களுக்கும் (பயனர்கள்), தமிழக ஊடகவியலாளர்களுக்கும் இக்கட்டுரை மிகவும் பயன்படும். (தமிழக ஊடகங்கள் தமிழ் விக்கிப்பீடியாவை எப்படி பயன்படுத்துகின்றன என்பதனை பல இடங்களில் சுட்டியுள்ளேன்)
2. ஒவ்வொரு ஆண்டின் மழையளவு குறித்த தரவுகளையும், பிற முக்கியத் தகவல்களையும் தனது இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்க்கும்வண்ணம் இந்திய வானிலைத் துறை இடவில்லை. அதாவது 2014 ஆம் ஆண்டிற்குரிய தகவல்களை பார்க்க விரும்பினால் கிடைக்காது. இதையும் கருத்திற்கொண்டே இந்தத் தலைப்பிலான கட்டுரையை கடந்த ஆண்டு முதல் எழுதத் தொடங்கினேன்.
3. எல்லாவற்றிற்கும் ஆங்கிலக் கட்டுரையை ஒப்பிடுவது சரியானதா? அந்தக் கட்டுரையை எழுதுபவர்களின் நோக்கம் வேறு. இந்தியப் பெருங்கடலின் வடபகுதியில் ஏற்படும் அனைத்துப் புயற்சின்னங்கள் குறித்தும் அவர்கள் எழுதுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டிற்கும் எழுதுகிறார்கள். அதேப் போன்று இங்கும் கட்டுரை எழுதுங்கள்; ஏற்போம் என்பது எவ்வகையில் சரியானது?
4. தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் தொடர்பில்லை என எப்படிச் சொல்லப்படுகிறது? இங்குள்ள கட்டுரையில் புயல்கள் பற்றி குறிப்பிட்டதன் நோக்கம், ஏற்பட்டுள்ள புயல்கள் இக்காலத்தில் ஏற்பட்டவை எனக் குறிப்பிடுதலே. பொதுவாகவே வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் புயல்களும் ஏற்படுவதுண்டு. புயல் ஏற்படும்போது பெறப்படும் மழையே முக்கியத்துவம் பெற்று அண்மைய ஆண்டுகளில் மாநிலத்து சராசரி மழையளவை சராசரி நிலைக்கு கொண்டு வருகிறது. கட்டுரையை முழுமையாக வாசித்தால் உணர இயலும். உரை அவ்விதமே எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரை புயல்கள் குறித்தான கட்டுரையன்று.
5. புவி வெப்பமடைதல் உலகின் குறிப்பிடத்தக்க பிரச்சனை. அது குறித்து ஒவ்வொரு ஆண்டும் கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றாற் போல எழுதப்பட்டால் எதற்காக தடுக்க வேண்டும். பிழையான உதாரணமாக நான் உருவாக்கிய கட்டுரை அமையக் கூடாது என மற்ற பயனர்களும் நினைத்தால் அதன்படி நடந்திட நான் ஒப்புக்கொள்கிறேன்.
6. நான் உருவாக்கிய கட்டுரையில் ஏதேனும் பராமரிப்பு வார்ப்புரு இடப்பட்டால், அதனை நீக்கும் பழக்கம் எனக்கில்லை. கேள்வி எழுப்பியவர், எனது வாதங்களை ஏற்று ஒப்புக்கொண்டால் அவர் நீக்கட்டும். அல்லது மூன்றாவது பயனர் முடிவு செய்து, அவர் நீக்கட்டும். யாரையும் அழுத்தப்படுத்தவில்லை; விக்கியின் வரைமுறைகளுக்கு உட்பட்டு நியாயப்படி நடக்கட்டும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:43, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
en:2016 North Indian Ocean cyclone season என்ற கட்டுரைபோல் தலைப்பு உட்பட, உள்ளடக்கமும் எழுதப்பட வேண்டும். அல்லது அவ் ஆங்கிலக்கட்டுரையை தொடங்கி, இதனுடன் இணைக்க வார்ப்பு இட வேண்டுமானால், அதனைச் செய்கிறேன். பேச்சு:புதிய தலைமுறை ஆசிரியர் விருது பகுதியில் உள்ள கருத்தினையும் கருத்திற் கொள்ளவும். --~AntanO4task (பேச்சு) 06:05, 14 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]