பேச்சு:ஹாய்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Heidis Lehr- und Wanderjahre என்னும் பெயர் ஃகைடிசு. லேர் உண்ட் வாண்டெர்யாரெ என்பது போல ஒலிக்கும். முதல் மெய்யெழுத்து ஆ என அவ்வளவு நீளாது.--செல்வா 17:19, 9 ஏப்ரல் 2010 (UTC) அதே போல ஆசிரியரின் பெயர் Johanna Spyri என்பதை யோஃகான்னா ஸ்ப்பியிரி (அல்லது ஸ்ப்பைரி) என்பது போல ஒலிக்கும். இதனை யோஃகான்னா இசுப்பியரி என எழுதலாம். இடையே உயிரொலி பெய்து எழுதுவது தமிழ் இயல்புக்கு ஏற்றதாக அமைவது. இடாய்ச்சு மொழியில் j என்னும் எழுத்து ய என்று ஒலிக்கும் (ஆங்கிலத்தில் உள்ளது போல ஒலிக்காது ச' அல்ல)--செல்வா 17:27, 9 ஏப்ரல் 2010 (UTC)

தமிழில் இல்லாத ”ஃகா” , ”ச'” போன்ற இல்லாத எழுத்துகளை நுழைப்பது தப்பு. இது தமிழ் விக்கியா, அல்லது வேறொரு மொழியா? −முன்நிற்கும் கருத்து 86.3.119.35 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
ஃ என்னும் ஆய்த எழுத்தும், கை என்னும் எழுத்தும் இரண்டுமே தமிழ் எழுத்துகள்தாமே! அஃகாமை (= குறையாமை), அஃகேனம் (= ஆய்த எழுத்து, ஃ என்னும் எழுத்து), அஃதான்று ( = அதுவுமன்றி), அஃதை ( = திக்கற்றவர், சோழன் மகள் ஒருத்தியின் பெயர்), அஃறிணை ஆகிய பல சொற்கள் உள்ளனவே. எப்படி எஃகு, அஃகு என்னும் சொற்களில் தொண்டை காற்றொலி ககரம் தோன்றுகின்றதோ அதே போலத்தான் இதுவும். முற்றிலும் தமிழ் முறைப்படி எழுத வேண்டுமெனில் அஃகையிடிசு எனலாம். முதலில் ஆய்த எழுத்தில் தொடங்குவது வழக்கம் இல்லைதான், ஆனால் வேற்றுமொழிச் சொற்களுக்குத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே சற்று நெருக்கமான ஒலிப்புகளைக் காட்டலாம் என்பதே இங்கு நோக்கம். எனவே தமிழ் அஃகாமை என்று இருப்பதால் ஃகா உள்ளது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். F என்னும் ஒலிக்கு ஃப என்பது போல இதனையும் வேண்டுமென்றால் நினைத்துக்கொள்ளுங்கள். அல்லது தமிழில் அனுமன் அரி என்று எழுதுவது போல முதலில் காற்றொலி ககரம் வரும் இடங்களில் உயிரொலி மட்டும் இட்டு எழுதலாம். --செல்வா 21:36, 9 ஏப்ரல் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஹாய்டி&oldid=507676" இலிருந்து மீள்விக்கப்பட்டது