பேச்சு:வெ. இராதாகிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆளுமை. பகிர்ந்தமைக்கு நன்றி செல்வா.--சிவக்குமார் \பேச்சு 20:36, 9 ஏப்ரல் 2012 (UTC)

நன்றி சிவக்குமார். நானும் இன்றுதான் அறிந்துகொன்டேன் சிவக்குமார்! ஒரிசா பாலு என்னும் நண்பர் இவரைப்பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். பின்னர் இந்து நாளிதழ் ஆங்கில விக்கியைப் பார்த்தேன். பின்னரே அறிந்துகொன்டேன்! இந்து நாளிதழில் வந்த கட்டுரை --செல்வா (பேச்சு) 20:52, 9 ஏப்ரல் 2012 (UTC)
வியக்கும் வகையில் இந்தி, மலையாள விக்கிகளில் ஓராண்டிற்கு முன்னரே இக்கட்டுரை தொடங்கப்பட்டிருக்கிறது! --சிவக்குமார் \பேச்சு 21:10, 9 ஏப்ரல் 2012 (UTC)

இராதா என்பது இராதை என்பவரைக் குறிக்குமானால் ஒற்று வராதே. வெ. இராதாகிருட்டிணன் என்று வழங்கலாமா?--நீச்சல்காரன் (பேச்சு) 01:08, 27 நவம்பர் 2013 (UTC)

நன்றி நீச்சல்காரன், இப்பொழுதுதான் உங்கள் குறிப்பைப்பார்த்தேன். இராதாக்கிருட்டிணன்-இராதாகிருட்டிணன் என இருவகையாகவும் எழுதலாம், ஆனால் ககர ஒற்று வராமல் இராதாகிருட்டிணன் என்று எழுதுவதே பெருமரபு. எனவே மாற்றியிருக்கின்றேன். நன்றி.--செல்வா (பேச்சு) 16:45, 22 மே 2014 (UTC)