பேச்சு:வால்வெள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg வால்வெள்ளி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

Comet என்பதை வால்நட்சத்திரம் என்றோ எரிநட்சத்திரம் என்றோதான் குறிப்ப்பிடுவர்(தமிழகம் பொருத்தமட்டில்). வால்வெள்ளி என்பது புதிதாக உள்ளது.(தமிழக அறிவியற் நூள்களில் என்ன கையாண்டிருக்கின்றனர் என்பதை நான் அறியேன்) எனவே பொதுவழக்கில் உள்ள ஒரு பெயரை கையாளலாம்.

வினோத், எரி விண்மீன், வால் நட்சத்திரம், வால் விண்மீன், வால் மீன் போன்ற பல சொற்களைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் குறிப்பிடுகிறது. பார்க்க - cosmet . தமிழ்நாட்டுப் பாடநூல் வழக்கை அறிய http://www.textbooksonline.tn.nic.in/ பார்த்தேன். 10, 11, 12ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் எதிலுமே வானியலைக் காணவில்லை. நாங்கள் படித்த போது 12ஆம் வகுப்புப் பாடமாக இருந்தது. விடிவெள்ளி என்பது போல் வால்வெள்ளி என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார். --ரவி 11:53, 30 நவம்பர் 2007 (UTC)
வால் விண்மீன் [1]என்றோ வால்மீன் [2]என்றோ முதன்மையான சொல்லாகக் கொடுப்பது சிறப்பு. விடி வெள்ளி என்பது வெள்ளி (Venus)யைக் குறிப்பது; அது ஒரு கோள். அந்த எடுத்துக்காட்டு சரியல்ல.--PARITHIMATHI (பேச்சு) 17:02, 8 மே 2017 (UTC)

மூன்றாவது பத்தியில் உள்ளது சூரிய ஒண்முகில் என்ற கலைச்சொல். அப்படி என்றால் என்ன? தெரிந்தால் கட்டுரை எழுதலாம்.--PARITHIMATHI (பேச்சு) 17:10, 8 மே 2017 (UTC)

மேற்கோள்கள்[தொகு]

  1. விக்சனரி https://ta.wiktionary.org/wiki/comet
  2. சப்தகொஷ் http://www.shabdkosh.com/ta/translate?e=comet&l=ta

நெபுலா எனும் தலைப்பில் ஒரு குறுங்கட்டுரை உள்ளது. நேரம் கிடைக்கும்போது அக்கட்டுரையைச் செப்பனிட்டு விரிவாக்கக் கருதியுள்ளேன், வானியல் பொருள்கள் உருவாக்கும் அடிப்ப்டையான வாயில் என்பதால் இக்கட்டுரை வானியலில் மிகவும் முதன்மையானதாகும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:29, 7 ஏப்ரல் 2018 (UTC)

வால்நட்சத்திரம், வால்விண்மீன் என்பது தமிழக வழக்கு. வால்வெள்ளி என்பது இலங்கை வழக்கு. வால்வெள்ளி ஒரு விண்மீன் அல்ல. எனவே இலங்கை வழக்கு பொருத்தமாக இருந்ததால் ஏற்கெனவே இலங்கையர் உருவாக்கிய தலைப்பை அப்படியே ஏற்றுக்கொண்டு அக்கட்டுரையைத் தொடர் பங்களிப்பாளர் போட்டியிலும் இப்போதும் விரிவாக்கியுள்ளேன். வெள்ளி என்பதுதான் கோள். விடிவெள்ளி என்பது அது விடியலில் தோன்றிக் காணமுடிவதால் விடிவெள்ளி என்ற மக்கள் வழக்கும் பேச்சு வழக்கும் உருவாகியது. வால்வெள்ளி கோளும் அல்ல. விண்மீனும் அல்ல. என்றாலும் அது தன் வளிமவீசலை நிறுத்திவிடும்போது சிறுகோளாக வல்லது. நன்கு ஒர்ந்து பார்க்கும்போது வால்வெள்ளி என்பது தமிழக வழக்கில் இல்லாவிட்டாலும் மிகப் பொருத்தமாக உள்ளது.

ஒண்முகில் என்பது வானில் விண்மீனையோ கோள்தொகுதியையோ உருவாக்க வல்ல ஒளிவீசும் வளிம முகில் ஆகும். ஒண்முகில்கள் உடுக்கண இடைவெளிகளில் அமையும் ஒரு வான் அமைவாகும். ஆங்கிலத்தில் இது Nebulum-ஒருமை, Nebulae-பன்மை என வழங்கும். சூரியக் குடும்பத்தில் அமையும் ஒளிரும் வளிம முகிலே சூரிய ஒண்முகில் ஆகும், வேறு விண்மீன் அமைப்புகளில் அமையும் ஒண்முகில் விண்மீன் ஒண்முகில் அல்லது உடுக்கண இடைவெளிகளில் அமைவது உடுக்கண இடைவெளி ஒண்முகில் ஆகும். ஒளிரும் வளிமத்தொகுதி என்பதால் இது ஒண்முகில் என முதலில் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியில் பயன்படுத்தப்பட்டு அவ்வழக்கு தொடங்கியது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:04, 7 ஏப்ரல் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வால்வெள்ளி&oldid=2511253" இருந்து மீள்விக்கப்பட்டது