பேச்சு:வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி
கணிக்கப்பட்ட குறுக்கு வெட்டு வரைவி வரிக் கண்ணோட்டம் (Computed tomography scan)
என்பதற்கு மாறாக வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி என்று குறிப்பிடலாம் என நினைக்கிறேன். மேலும் எக்ஸ் கதிர்கள் என்று பன்மையில் இருப்பது நன்றாக இருக்கும். இதனைத் தமிழில் புதிர்க் கதிர்கள் என்றும் கூறுவதுண்டு. புதிதாக இன்னதென்று அறியாமல் இருந்ததால், புது-->புதிர் (புரிய இடர் தருவது புதிர் - தீர்வு காண்பதில் இடரூட்டுவது புதிர்), புதிர்க் கதிர்கள் என்றனர். எக்ஸ் கதிர்கள் என்று இருப்பதில் எனக்கு மறுப்பு இல்லை. ஒரு கருத்துக்காகச் சொன்னேன். --செல்வா 23:13, 7 டிசம்பர் 2007 (UTC)
பேச்சு வழக்காக, வரியோட்டம் செய்தார்களா? குறுக்குவெட்டு வரியோட்டப் படம் எடுத்தார்களா? என்று கேட்கலாம். நீங்கள் குறுக்குவெட்டு வரியோட்ட படத்துக்கு இவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்றும் கேட்கலாம். பொதுமக்களுக்கு விளங்கும். --செல்வா 23:18, 7 டிசம்பர் 2007 (UTC)
- செல்வா, உங்கள் பரிந்துரை எளிமையாக உள்ளது, பொருளும் சரியாக உள்ளது. இப்பக்கத்தை நீங்கள் மேலே தந்துள்ள தலைப்பிற்கு நகர்த்துவதில் எனக்கு உடன்பாடே. -- Sundar \பேச்சு 04:20, 10 டிசம்பர் 2007 (UTC)
Start a discussion about வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி.