பேச்சு:யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு மாற்றம்[தொகு]

José என்ற சொல்லை தமிழில் எப்படி பயன்படுத்துவது? மூல ஒலிப்பு ஹோசே என்பதாகவே இருக்கின்றது. ஆனால் José/Jose என்ற சொல்லிற்கு தமிழ் விவிலியத்தில் யோசே என்று வருகின்றது. ஆனால் அதன் ஈப்ரு மூலச் சொல் யாசாப் என்று வருகின்றது. அதனால் José என்பதை ஹோசே, யோசே, யாசாப் என நான்கு முறையில் தமிழில் எழுதும் நிலை ஏற்படுகின்றது. இதில் எதைப் பின்பற்றுவது என்பதில் குழப்பம் ஏற்படுகின்றது. மாற்றுக் கருத்திருந்தால் பதியுங்கள். இதில் ஏதேனும் ஒன்றை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம் என்பது எனது எண்ணம். ஒருமித்த கருத்தில்லை என்றால் ஹோசே என்றே விட்டுவிடுகின்றேன். --விண்ணன் (பேச்சு) 07:24, 26 ஆகத்து 2015 (UTC)

José என்று ஸ்பானிய மொழியில் பயன்படுத்தப்பட்டு வரும் சொல்லிற்கு இணையாக ஹோசே அல்லது யோசே என்பதை பயன்படுத்தலாம் என நான் நினைக்கின்றேன். விவிலியத்தில் பயின்று வரும் Jose என்ற ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ் விவிலியம் பயன்படுத்தும் யோசே என்பதையே பயன்படுத்தலாம் என நான் கருதுகின்றேன். இரண்டையும் தனித் தனியாக ஒலிபெயர்ப்பதே சிறப்பானதாக இருக்கும். நன்றிகள் ! --விண்ணன் (பேச்சு) 07:28, 26 ஆகத்து 2015 (UTC)

மேலதிகமாக ஹோசே, யோசே பற்றிய விவாதக் கருத்துக்களை இங்கு அறியலாம். --விண்ணன் (பேச்சு) 02:30, 28 ஆகத்து 2015 (UTC)