யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா
Appearance
யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா | |
---|---|
பிறப்பு | 6 சனவரி 1766 Yaguarón |
இறப்பு | 20 செப்டெம்பர் 1840 (அகவை 74) அசுன்சியோன் |
படித்த இடங்கள் |
|
பணி | வழக்கறிஞர், அரசியல்வாதி |

முனைவர் யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா (Spanish: José Gaspar Rodríguez de Francia)(ஜனவரி 5, 1766 - செப்டம்பர் 20, 1840) பரகுவை நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், வழக்கறிஞரும், சுதந்திர பரகுவை நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் ஆவார்[1]. ஸ்பானியா பேரரசின் கட்டுப்பாடுகளிலும், பிரேசில் பேரரசின் கட்டுப்பாடுகளிலும், ஐக்கிய ரியோ திலா பிளாட்டா ஆட்சிப் பகுதிகளிலும் இருந்த பகுதிகளை எல்லாம் ஒன்றிணைத்து சுதந்திர பரகுவை நாட்டை உருவாக்குவதில் முன்னோடியாக இருந்த இவர் ஒரு கடுமையான சித்தாந்தவாதியாகவும் அறியப்படுகின்றார்.