உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மெய்ம்மயக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரைக்குச் சரியான தலைப்பு வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்று இருக்க வேண்டுமல்லவா? -- சுந்தர் \பேச்சு 12:51, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

கட்டுரையில் மெய்யொலிக்கூட்டம் என விளக்கப்படுவது ஈரொற்றுகள் கூட்டாக வரும் மயக்கங்கள் பற்றித்தான். அவை வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படுவதன் ஓர் உள் கொத்துதான். மேலதிகமாக ஒரு மெய்யொற்றுக்கு அடுத்து வேற்று மெய்யின் உயிர்மெய் சேர்ந்துவரும் மயக்கமும் வேற்றுநிலை மெய்மயக்கத்தில் உள்ளடங்கும்.

காட்டுகள்: தங்கம், பஞ்சு, பாண்டம், அந்த, கம்பு, நன்றி, வெட்கம், ...........

எனவே கூட்டொற்றுகள் மயக்கம் மட்டும் பற்றிய இக் கட்டுரைக்கு வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனவுள்ள பெயர் பொருந்தாது எனக் கருதுகிறேன். கா. சேது 06:25, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]

ஐ மற்றும் ஔ[தொகு]

அய்யம், அவ்வை என குறிப்பிட்டுள்ள சொற்கள் ஐயம், ஔவை எனவும் வழங்கக்கூடும். இவ்வாறு குறிப்பிட்டால் ய, ர, ழ ஆகிய மூன்றும் ஒரே இலக்கணத்தில் அடங்கும். இதில் உடன்பாடு இருந்தால் திருத்திவிடுங்கள். நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெய்ம்மயக்கம்&oldid=3692841" இலிருந்து மீள்விக்கப்பட்டது