பேச்சு:மூலக்கூற்று உயிரியல் கலைச்சொற்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூலக்கூற்று உயிரியல் கலைச்சொற்கள் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

அன்பின் நண்பர்களே,

உங்கள் கருத்துகளை அறிய தாருங்கள். மேலும் இவ்விடத்தில் உள்ள பல சொற்கள் என்னால் உருவாக்கப்பட்டவை. ஆங்கிலத்தில் நான் அரை வேக்ககாடு. தாரளமாக நல்ல தமிழ் சொற்களை இட்டு மாற்றலாம் இல்லை பல ஆண்டுகளாக விக்கியில் இருக்கும் நம் நண்பர்கள் நமக்கு வழி காட்டுவார்கள் .

மூலக்கூற்று, உயிர் வேதியல், நுண்ணுயிர்யலில் மற்றும் அவற்றை காணும் நுட்பங்களை சிறுக சிறுக எழுத விரும்புகிறேன். நன்றி

--Munaivar. MakizNan 22:16, 19 ஜூலை 2009 (UTC)


தொடரிகள் என்றால் , அவிடத்தில் (promoter) இருந்து DNA transcription நடப்பதால் அந்த சொல்லை பயன்படுத்தலாம். promoter உயர்த்தி என அப்படியெ மாற்றுவதால் வேறு விதமான பொருள் தரும் என நான் நினைக்கிறேன்.

Splicing என்பது intron நீக்கபடுதல், அதாவது வெளிதள்ளபடுதல். அவைகள் நீக்கப்பட்டு exon இணைக்கப்படும். மரு என்றால் அச்சப்பட்டு ஓடுதல் என பொருள் (என நினைக்கிறேன்). அதனால் மருழ்ச்சி என்ற சொல் நன்ற்காக இருக்கும் என நினைக்கிறேன். வேறு வார்த்தை இருந்தால் பாவிக்கலாம். --Munaivar. MakizNan 23:40, 19 ஜூலை 2009 (UTC)