பேச்சு:மின்னல் எப்.எம்
அன்புள்ள சகோதரர்கள் சோடாபாட்டில், கனகு, புன்னியாமீன், இரவி, மகிழ்நன், குறும்பன், மயூரநாதன், நற்கீரன் இன்னும் நம் அனைவருக்கும் வணக்கம். மின்னல் எப்.எம் கட்டுரை பற்றிய உங்களின் மதியுரைகளைக் கேட்க விருப்பம் கொள்கிறேன். அடுத்து ’மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்’ பற்றி என்னுடைய கவனம் போகிறது. அதற்கு முன் உங்களின் கருத்துகளைத் தெரியப் படுத்துங்கள். நன்றி. வாழ்க வளமுடன்.
மலேசியத் தமிழர்கள் பற்றிய கட்டுரைகள் அனைத்துமே மிகுந்த ஆர்வலைத் தூண்டுவனவாக அமைந்துள்ளன. குறிப்பாக மலேசியத் தமிழ்ப் பள்ளிகள், ஊடகங்கள், நபர்கள் ஆகியவை. அந்த வரிசையில் இந்தக் கட்டுரையும் படங்களும் சிறப்பாக உள்ளது. தமிழ்ச் சூழலில், குறிப்பாக இலங்கையிலும் புலம்பெயர் சூழலிலும் தமிழ் வானொலிகளின் பங்களிப்புக் கணிசமானது. அவை எமது வாழ்வியலின் பல பதிவுகளை பதிவுசெய்துள்ளன. அந்த வகையில் இந்த வானொலி பற்றிய கட்டுரை முக்கியம் பெறுகிறது. நன்றி. --Natkeeran 13:36, 27 சூன் 2011 (UTC)
- மலேசியா பற்றிய தங்கள் கட்டுரைகள் மிகச் சிறப்பாக உள்ளன. மின்னல் எப். எம் கட்டுரையைப் படித்த நேரத்தில் மின்னல் எப். எம் வானெலி நிலையத்துக்கு நான் சென்ற போது ஏற்பட்ட நினைவுகளை மீட்டுக் கொள்ள உதவியது. மின்னல் எப். எம். அறிவிப்பாளர்கள், ஊழியர்கள் விருந்தினரை வரவேற்பதில் உயர்ந்த உள்ளம் கொண்டோர். மலேசிய, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய கட்டுரையைத் தொடர்ந்தும் எழுதுங்கள் ஐயா. தங்கள் இலக்கிய, விக்கிப்பணி குறித்த தகவல்களை விரைவில் இலங்கை ஊடகங்களில் நான் எழுதுவேன்--P.M.Puniyameen 13:57, 27 சூன் 2011 (UTC)