பேச்சு:மாறுகால் மாறுகை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடக்கடவுளே! இதெல்லாம் உண்மை தானா..??? --மது 16:16, 21 மார்ச் 2007 (UTC)

போரியல் பகுப்பா??? :) அண்மைக் கால நிகழ்வு, வரலாற்றுக் குறிப்பு, படம் (???!!!) ஏதும் இணைத்தால் முதற்பக்கத்திலு உங்களுக்குத் தெரியுமா என்று போட்டு மிரட்டலாம் :)--ரவி 16:29, 21 மார்ச் 2007 (UTC)

இது வேறா? அப்படி முதற்பக்கத்தில் படம் போடுவதாக இருந்தால் முன்பே சொல்லி விடிங்கள்.. இந்த பக்கமே நான் வரவில்லை...!!! --மது 16:36, 21 மார்ச் 2007 (UTC)


ரவி, கனக்க :) போட்டு கனத்தை குறைக்க பார்க்கின்றீர்கள். இதன் முழுப் பின்னணி பாரியது. தமிழர்கள் வன்முறைப் பண்பாடு கொண்டவர்களா? அவர்களின் "போர்ச் சாதிகளின்" வீச்சு காலனித்துவ அரசுகளால் மழுங்கடிப்பட்டதா? இந்திய இராணுவத்தில் சீக்கிய இனத்தவரின், ராஜபுத்திரர்களின் ஆதிக்கம் அல்லது அதிக பங்களிப்பு தமிழர்கள் "மென்மையானவர்கள்" என்ற போக்கில் எழுந்ததா? இன்றைய இலங்கை இனப்பிரச்சினையில் தமிழர்களின் போர் வரலாறும் குணங்களும் மீள்ளுவாக்கம் செய்யப்பட்டதா? அது தேவையா? இப்படி... வன்முறை தூரத்தில் நின்று பார்க்கையில் கவர்ச்சியாய் இருக்கும், கிட்ட நிற்கையில் பயங்கரம். அதேவேளை, பேராட்டமே வேண்டாம், எம்மிடம் போராடி பாதுகாக்க வேண்டியது பெறவேண்டியது என்று எதுவுமில்லை என்பது அதைவிட ஒரு பயங்கர நிலை. (கடைசி வசனம் யாரோ சொன்னது, யார் என்று ஞாபகம் வரவில்லை.) --Natkeeran 16:46, 21 மார்ச் 2007 (UTC)

இக்கட்டுரை திருத்தப்பட வேண்டும்[தொகு]

  • இன்றும் புழக்கதில் இருக்கின்றதா? எங்கு? அப்ப சட்டம்? காவல்துறை?
  • அரிவாள் கலாச்சாரம் தமிழர்களின் பண்பாட்டுக் கூறா? நிறைய விளக்கம் தேவை.

துல்லியமான தகவல்கள் தரும் திருத்தங்கள் தேவை என்பது உண்மை தான். எனக்கென்னவோ இதைத் தமிழர்களின் வழக்கமாக மட்டும் எண்ணத் தோன்றவில்லை. இதே போன்ற வழக்கங்கள் வரலாற்றில் பல காலங்களில் பல இனக்குழுக்களில் இருந்திருக்கலாம். தேடிப் பார்க்க வேண்டும்--ரவி 17:47, 21 மார்ச் 2007 (UTC)

--Natkeeran 17:06, 21 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாறுகால்_மாறுகை&oldid=116484" இலிருந்து மீள்விக்கப்பட்டது