பேச்சு:மாநில நெடுஞ்சாலை 167 (தமிழ்நாடு)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிற மொழி விக்கிப்பீடியாக்களில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் என்று குறிப்பிடுவதில் பொருள் உள்ளது. ஆனால், தமிழ்விக்கிப்பீடியாவில் தமிழ்நாடு, இலங்கை சார்ந்த ஊர்களுக்கு இவ்வாறு குறிப்பிடுவது தேவையற்று நீட்டி முழக்குவதாக உள்ளது. இலங்கை, தமிழ்நாட்டில் ஒரே பெயரில் அமைந்துள்ள ஊர்களுக்கு மட்டும் இவ்வாறு தெளிவுபடுத்தலாமே?--இரவி 09:21, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

குறைந்த பட்சம் “தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்தில்” என்று சொல்ல வேண்டும். வெறுமனே மாவட்ட/ஊர்ப் பெயர் போதாது. எந்நாட்டுத் தமிழரானாலும் படிப்பவற்கு சட்டென்று எவ்விடம் என்று தெரியும்படி இருக்க வேண்டும். வெறும் ஊரோ மாவட்டமோ அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நாமே எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆங்கில விக்கியில் கண்டிப்பாக நீட்டி முழக்கச் (ஊர், மாநிலம், நாடு) சொல்லுவார்கள். நாம் இங்கு மாநிலம் அல்லது நாட்டினை நீட்ட வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 09:27, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

சரி. தமிழ்நாடு / இலங்கையில் உள்ள ஊர்களுக்கு மட்டும் இந்தியாவின் / இலங்கையின் என்று குறிப்பதை விட்டு விடலாமா?--இரவி 09:56, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]