பேச்சு:மாட்டு வண்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோபி, இந்த விரிவாக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா ;)? ஆங்கில விக்கிபீடியா உள்ளிட்ட பிற விக்கிபீடியா கட்டுரைகளைக் காட்டிலும் தகவல் செறிவு மிக்கதாகவும் தனித்துவம் மிக்கதாகவும் இக்கட்டுரையை உருவாக்க முனைந்துள்ளேன். 6 ஆண்டுகள் ஒரு சரியான கிராமத்தில் வாழ்ந்த அனுபவத்தில் இது போன்ற கட்டுரைகளை எழுத முடிகிறது. ஊரை விட்டு வந்து ரொம்ப நாளாச்சு என்பதால், மாட்டு வண்டிகள் தொடர்பான சில நுட்பச் சொற்கள் (!) மறந்து விட்டன. அடுத்த முறை ஊருக்குப் போகும்போது, விதம் விதமான மாட்டு வண்டிகளை படம் பிடித்து பாகம் பிரித்து விளக்கி விரிவாக்கி விடுகிறேன் ! தற்போதைக்கு, வண்டி மாடுகளுக்கு எனத் தனிக் கட்டுரை வேண்டாம் என்பதால் அவை பற்றிய விவரங்களையும் இங்கு தந்துள்ளேன். மேற்படி விவரங்கள் அறியப்பெற்றால் உழவு மாடுகள் அல்லது வண்டி மாடுகள் என்ற தலைப்பில் தனிக்கட்டுரை தொடங்கலாம். மாமாங்கத்துக்கு ஒரு முறை தான் இப்படி கட்டுரை எழுத எனக்கு வருகிறது என்பதால் நானே சந்தோஷப்பட்டுக்கொள்ளும்படி இருக்கிறது :)--ரவி 20:01, 17 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

இலங்கையில் மாட்டுவண்டி[தொகு]

நிரோ, இலங்கையில் மாட்டுவண்டிகள் உள்ளன என்பதை தமிழீழத்தில் மாட்டு வண்டிகள் உள்ளன என்று மாற்றி உள்ளீர்கள். தமிழீழம் தவிர்த்த பிற சிறீலங்கா நிலப்பகுதிகளில் மாட்டு வண்டிகள் இல்லையா?--ரவி 16:48, 26 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

என்னைப் பெறுத்த வரையில் அப்பகுகளில் நான் வாழ்ந்தேன் அவ்வாறு மாட்டுவண்டிகளைக் கண்டதில்லை.ஈழப்பகுதிகளிலேயே கண்டுள்ளேன்.--சக்திவேல் நிரோஜன் 16:50, 26 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

ஆனால் குதிரை வண்டிகள் பெரும்பாலும் தெற்குப்பகுதியில் கண்டுள்ளேன்.இத்தைகைய காரணங்களினால் மாட்டு வண்டியிலிருந்தே குதிரை வண்டியும் தோற்றம் பெற்றிருக்க முடியுமென நான் நினைக்கின்றேன் இது என்னுடைய கூற்றே.ஆனாலும் பிற ஈழத் தமிழர் கருத்துக்களும் தேவைப்படுகின்றது.எனது சிறு வயதில் பார்த்த படியால் அவ்வாறு இலங்கையிலும் மாட்டுவண்டி இருந்திருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம்.--சக்திவேல் நிரோஜன் 16:53, 26 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

இலங்கையில் பரவலாக மாட்டுவண்டிப் பயன்பாடு உள்ளது. தமிழீழம் என்பது ஒரு நாடல்ல. ஆகையால் தமிழீழத்தில் மாட்டுவண்டிப் பாவனைபற்றிய குறிப்பு அவசியமற்றது. --கோபி 16:56, 26 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்க.--சக்திவேல் நிரோஜன் 16:58, 26 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

ஒருவேளை, தமிழீழத்தில் மாட்டு வண்டிகள் இருந்திருந்தால், இருந்தால் அதைப் பற்றிக் குறிப்பிடுவதில் தவறில்லை. அதற்குத் தமிழீழம் நாடாக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஆனால். தற்பொழுது சிறீலங்காவில் வாழும் பயனர்கள் நாடு முழுதும் மாட்டு வண்டிப் பயன்பாடு உள்ளதா, இருந்ததா என்று தெரியப்படுத்தலாம். மாட்டு வண்டிக்கும் குதிரை வண்டிக்கும் இங்கு தொடர்புப் படுத்த வேண்டாம். ஊருக்குத் தகுந்த மாதிரி இழுவை வண்டிகளில் கிடைக்கும் விலங்குகளை வைத்து இழுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். --ரவி 17:14, 26 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, எது தமிழீழம் என்பதை வரையறுப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கருத்திற் கொண்டே அவ்வாறு கூறினேன். ஆனால் தமிழீழம், சிறீலங்கா (ஸ்ரீ :-)) தொடர்பில் உங்களிடம் ஒரு நிலைப்பாடு இருப்பதாகத் தெரிகிறதே. --கோபி 17:55, 26 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

எனக்கும் ஒரு நிலைப்பாடும் இல்லை, கோபி ;)--ரவி 20:43, 26 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாட்டு_வண்டி&oldid=2633488" இலிருந்து மீள்விக்கப்பட்டது