பேச்சு:பொறியியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொறியியல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


பொறியியல் பிரிட்டானிகா களஞ்சியாத்தில் கீழ்காணுமாறு வரையறுக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. ஆங்கில விகியினதைவிட எளிமையாக்கவும் பொருத்தமாகவும் இருப்பதாக தோன்றுகிறது.

Professional art of applying science to the optimum conversion of the resources of nature to the uses of humankind. Engineering is based principally on physics, chemistry, and mathematics and their extensions into materials science, solid and fluid mechanics, thermodynamics, transfer and rate processes, and systems analysis. A great body of special knowledge is associated with engineering; preparation for professional practice involves extensive training in the application of that knowledge. Engineers employ two types of natural resources, materials and energy. Materials acquire uses that reflect their properties: their strength, ease of fabrication, lightness, or durability; their ability to insulate or conduct; and their chemical, electrical, or acoustical properties. Important sources of energy include fossil fuels (coal, petroleum, gas), wind, sunlight, falling water, and nuclear fission. See also aerospace engineering, civil engineering, chemical engineering. genetic engineering, mechanical engineering, military engineering.

கீழ் கண்டவாற்று மொழிபெயர்த்திருக்கிறேன்.

பொறியியல் என்பது அறிவியலைப் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். இது இயற்பியல், கணிதம் வேதியியல் ஆகிய அறிவியற்துறைகளையும் அவற்றின் சிறப்புத் துறைகளான பொருள் அறிவியல்(materials science), தின்ம/திரவ மெக்கானிக்ஸ்(Solid/Fluid Mechanics), வெப்பவியக்கவியல் (Thermodynamics) போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர். பொரியாளர்கள் இரண்டுவிதமான இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆற்றல்; பொருட்கள்.

பொருட்களின் பயன்பாடு அவற்றின் தாங்கு திறன், முறைப்படுத்த உகந்ததாயிருத்தல், எடை குறைவாயிருத்தல், வெகுகாலம் சிதையாதிருத்தல், கடத்து திறன், வேதியியல், ஒலியியல், மின்னியல் பண்புகள் போன்ற பல தன்மைகளைப் பொருத்து இருக்கும்.

உங்கள் கருத்தை தெரிவியுங்கள் --Jaekay 07:35, 24 பெப்ரவரி 2008 (UTC)


Solid / Fluid Mechanics என்பதற்கு திண்ம / பாய்ம விசைப்பொறியியல், அல்லது திண்ம / பாய்ம எந்திரவியல் எனலாம். மயூரநாதன் 17:20, 24 பெப்ரவரி 2008 (UTC)
நன்றாக இருக்கின்றது. பொறியியல் அறிவியலை பயன்படுத்தி தொழில் நுட்பத்தை ஆக்கிறது. --Natkeeran 17:25, 24 பெப்ரவரி 2008 (UTC)

பெயர்க்காரணம் பற்றிய பேச்சு[தொகு]

பேச்சிற்குறித்தான சொற்றொடர்:

"Engineering" என்ற சொல் Engine என்பதிலிருந்து தோன்றியது என்ற கருத்தமைவில் இந்த மொழிபெயர்ப்பு உள்ளது. இது தவறான அனுமானம். "Ingeniosus" என்ற சொல்லிலிருந்தே "Engineering" தோன்றியது(அது போலவே, "engine" and "engineer" ). இருப்பினும் பரவலாகப் பயன்படுத்தப் படுவதால், பொறியியல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதமாகிவிட்டது.

தமிழ்ப் பெயர் பொறியியல் பற்றிய பெயர்க்காரணம் பற்றிய தவறான கருத்து நீக்கம். பொறியியல் என்பது engine என்பதில் இருந்து எழுந்ததல்ல. பொறிகள் ஆக்கம், இயக்கம் பற்றிய இயலைப் பற்றியதே.--செல்வா 18:57, 2 மார்ச் 2008 (UTC)

"பொறியியல்" என்ற சொல் பொறிகளைப் பற்றியதை மட்டும படிப்பதல்ல. அதைவிடப் பரந்தது. உதாரணமாக, கட்டிடம் பற்றிய படிப்பு Civil Engineeringல் வருகிறது. இதற்கும் பொறிகளுக்கும் நேரடித்தொடர்பில்லை. அதுபோலவே வேதிப்பொறியியல். "பொறியியல்" என்ற சொல்லின் மூலம்(root) அச்சொல்லின் பரந்ததன்மையை விளக்குவதாக இல்லை. அதன் காரணமாகவே அப்பெயரின் மொழிபெயர்ப்பில் உள்ள தவறைச் சுட்டவேண்டியதாயுள்ளது.--Jaekay 19:11, 2 மார்ச் 2008 (UTC)
பொறி என்ற சொல் பொதுவாக ஒன்றைப் "பிடித்தல்" (அறிவுத் திறத்தால்). அறிவியல் கோட்பாடுகளால், பயன்படுமாறு ஒன்றைப் பிடித்தல் (செய்தல், நிறுவுதல்) பொறியியல். அது வேதியியல் ஆனாலும், கட்டிடப் பொறியியல் ஆனாலும் பொருந்தும். நான் நீக்கிய பகுதி engine என்பதில் இருந்து engineer என்பதாக ஆக்கியதாக எழுதிய பகுதியை. கண், காது என்பதைப் பொறி என்பதும், ஒளியையும், ஒலியையும் தேர்ந்து "பிடிப்பதால்". கட்டிடம் எழுப்புவதும், புவியின் ஈர்ப்பு, பொருள்களின் இயல்புகள் பண்புகள், கட்டிடத்தின் தேவை முதலிய கருதி திறமுடன் "பிடிப்பது" (படைப்பது). பிள்ளையார் பிடிப்பது என்பது படைப்பது, ஆக்குவது. பிடிப்பது என்பது கொள்ளுமாறு வடிப்பதையும் குறிக்கும். நீங்கள் கூறும் "பொறிகள்" என்பனகூட திறமுடன், அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி செய்யப்பட்டவை. ஆங்கிலத்தில் device என்பதில் இருந்து பொது வினைச்சொல் devising எழுவதுபோல, தமிழிலும் பொறி என்னும் சொல் அறிவியல் கோட்பாடுகளால் இயக்கப்பாடுகளால் (அல்லது அறிவுத் திறத்தால்) பயன்படுமாறு ஒன்றைப் "பிடித்தல்" (செய்தல், படைத்தல்) என்பது பொதுப் பொருளில் பயன்படும். பொறி என்பதின் அடிப்படைக் கருத்துதான் முக்கியம், எலிப்பொறிகள் போல சில சிறிதாக இருக்கலாம், கோட்டை மதிலில் இருந்து எண்ணெய் கொட்டும் குரங்குப் பொறியாக இருக்கலாம், தானே அம்பு எறியும் ஒரு பொறியாக இருக்கலாம், நிலாவுக்கு ஏகும் ராக்கெட்டாகவும் இருக்கலாம். Buckminister Fuller என்னும் ஒப்பரிய அறிஞர் கூறுவதுபோல, கட்டடம் என்பதும் ஒருவகையாக சூழிடத்தை வடிவமைப்பதுதான், தமக்கு வேண்டிவாறு "பிடித்து" வைப்பதுதான்.--செல்வா 19:46, 2 மார்ச் 2008 (UTC)
கிரியா தற்கால தமிழ் அகராதியில் "பொறி" என்ற சொல்லிற்கு, "Inscribe", "Spark", "Sense Organ", "Trap" and "Devices" என்று பொருள் தரப்பட்டுள்ளது. இவையாவும் "Ingenious" என்ற ஆங்கில மூலச்சொல்லின் பொருளைத்தருவதாயில்லை. "Engine" அல்லது "Device" என்ற சொல்லின் மொழிபெயர்ப்பாகவே "பொறி", "பொறியியல்" என்ற சொல்லில் பயன்படுத்தப்படுகிறது. பொறியியல், அதுவும், சமகாலத்தில் பரந்துபட்ட துறை. இதனால்தான் இந்தசொல்லின் மொழிபெயர்ப்பின் பின்னனியை கூற வேண்டியுள்ளது. −முன்நிற்கும் கருத்து Jaekay (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
உங்கள் மறுமொழிக்கு நன்றி Jaekay. "க்ரியா" தற்கால அகராதி பற்பல குறைகள் உள்ள அகராதி. அதனைப் பார்ப்பதில் தவறில்லை, ஆனால் அதனை நம்பினால் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போன்றது. ஆயிரக்கணக்கான சொற்கள் விடுபட்டு இருப்பது மட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான பொருட்களும் விடுபட்டுள்ளன. பெரும் இலக்கணப்பிழைகளும் கொண்டது. கழகத் தமிழ் அகராதியில் பொறி என்பதற்கு 34 பொருட்கள் கொடுத்துள்ளார்கள். அவற்றுள் இரண்டாவதாகத் தரும் பொருள் அறிவு . Ingenious என்பது அதுதான். கழக அகராதி தரும் மற்றொரு பொருள் தந்திரம்.இதுவும் Ingenuity ஐக் குறிப்பது. பொறியிலி என்னும் சொல்லுக்கு அறிவிலி என்று பொருள் கொடுத்துள்ளது - அதே அகராதி. பொறி என்பது அறிவுத்திறத்தால் ஒன்றைப் "பிடித்தல்" என்று நான் கூறியது பொருந்தும் என்பதை உணரலாம். மேலே நீங்கள் குறிப்பிட்டதிலும், device என்பது devising என்னும் பொது வினையடியாக எழுந்தது என்று கொண்டால், "அறிவு", அறிவுத்திறன் உணர்த்தும் Ingenuityஐக் குறிக்கும். Devising என்பது அறிவுத்திறத்துடன் ஒன்றை அமைப்பது, கட்டுவது, செய்வது. பொறியாளர்களின் முதன்மையான பொறுப்பு அது. மேலும் நானே ஒரு பொறியியலாளன் தான் (அதற்காக நான் கூறுவதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறவில்லை.). --செல்வா 20:08, 4 மார்ச் 2008 (UTC)
செல்வா, மிக்க நன்றி. "பொறி" என்பதற்கு "தந்திரம்", "அறிவு" எனும் பொருள் இருக்கும் நிலையில் "பொறியியல்" துள்ளியமான சொல் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். உங்களுடைய விளக்கங்களுக்கு நன்றி. அடியேனும் பொறியியல் படித்தவன்தான். இதுகாரும் "Engine"தான் "பொறி" என்று மொழி பெயர்க்கப்பட்டு, அதிலிருந்தே பொறியியல் என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளதாக கருதி வந்தேன். பேராசிரியர் வா செ குழந்தைசாமி அவர்கள் தினமனியில்(அல்லது வேறுபத்திரிக்கையில்) வெகு காலங்களுக்கு முன்னர் இதைப்பற்றி எழுதிய ஒரு கட்டுரையை படித்ததாக ஞாபகம். வலையில் தேடினேன் கிடைக்கவில்லை. --Jaekay 10:12, 5 மார்ச் 2008 (UTC)
ஓ, நீங்களும் பொறியாளரா? பலே! engine என்பதை இயந்திரம் (அல்லது எந்திரம்) என்போம் அல்லவா. ஆனால் பொறி = device, contrivance என்பது ஆங்கிலச்சொல்லாகிய engineering என்பதற்கும் மூலமே. மேலும் பொருள் கொள்ளும் முறைமை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு முத்லைல் நிகழும், பின்னர் பொருள் சுட்டப்படும் பொருள் விரிவடைந்துவிடும். அது தவறல்ல. புகைவண்டி என்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அவ்வகை வண்டிகளில் ஒன்றை மின்புகைவண்டி என்று இன்று கூறினால் இன்னும் வேடிக்கையாக இருக்கும். தேவை ஏற்படின் மாற்றிக்கொள்ளலாம் (பழைய பெயரையும் பிறைக்குறிகளுக்குள் சுட்டிக் காட்டலாம்). --செல்வா 16:23, 6 மார்ச் 2008 (UTC)

பொறியியல் முறை[தொகு]

  • பிரச்சினை/தேவை மதிப்பீடு - Assessment
  • தேவைகளை அறிதல் - Requirments Collection and Analysis
  • மேல்நிலை வடிவமைப்பு - Conceptual or High Level Design
  • (திட்ட மேலாண்மை - பயன்-உழைப்பு பகுத்தறிதல் (Cost Benefit Analysis), பணி - காலதேவை அட்டவணை (WBS - Work Breakdown Schedule), பொறியிலாளர் மதிப்பீடு)
  • துல்லிய வடிவமைப்பு - Detail Design
  • நிறைவேற்றல் - Implementation
  • தன்னிலை பரிசோதனை - Testing - white box
  • பயனர் பரிசோதனை - Testing - user
  • செயற்படுநிலை பரிசோதனை - Testing - operational readiness
  • செயற்படுத்தல் - Deployment
  • பராமரிப்பு - Maintenance
  • ஆவணப்படுத்தல் - Documentation

--Natkeeran 19:25, 2 மார்ச் 2008 (UTC)

மொழிபெயர்க்க வேண்டிய பகுதிகள்[தொகு]

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல்[தொகு]

Engineers use their knowledge of science and mathematics, and appropriate experience, to find suitable solutions to a problem. Creating an appropriate mathematical model of a problem allows them to analyze it (perhaps, but exceptionally, definitively), and to test potential solutions. If multiple reasonable solutions exist, engineers evaluate the different design choices on their merits and choose the solution that best meets the requirements.

Engineers typically attempt to predict how well their designs will perform to their specifications prior to full-scale production. They use, among other things: prototypes, scale models, simulations, destructive tests, and stress tests. Testing ensures that products will perform as expected. Engineers as professionals take seriously their responsibility to produce designs that will perform as expected and will not cause unintended harm to the public at large. Engineers typically include a factor of safety in their designs to reduce the risk of unexpected failure.

கணனிகளின் பயன்பாடு[தொகு]

Computers, and design software, play an increasingly important role. Using Computer Aided Design (CAD) software, engineers are able to capture more information about their designs. The computer can automatically translate some models to instructions suitable for automatic machinery (e.g. CNC) to fabricate (part of) a design. The computer also allows increased reuse of previously developed designs by presenting an engineer with a library of predefined parts ready to be used in his own designs.

எனைய துறைகளுடனான தொடர்புகள்[தொகு]

Science attempts to explain newly observed and unexplained phenomena, often creating mathematical models of observed phenomena. Technology and engineering are attempts at practical application of knowledge (often from science). Scientists work on science; engineers work on technology. However, there is often an overlap between science and engineering. It is not uncommon for scientists to become involved in the practical application of their discoveries; thereby becoming, for the moment, engineers. Conversely, in the process of developing technology engineers sometimes find themselves exploring new phenomena, thus becoming, for the moment, scientists.

There are also close connections between the workings of engineers and artists; they are direct in some fields, eg architecture and industrial design, and indirect in all. Artistic and engineering creativity may be fundamentally connected.

Cost -- Quality | Dimensionless numbers | Electromagnetism governed by Maxwell's equations | Electrical circuit fundamentals | List of electronics topics | Engineering economics | Ethics | Liability | Measurement | Reverse engineering | Rheology | SI unit | Thermodynamics | Student Design Competition

See also: Fields of engineering (overview of engineering fields), Electronics related books

விரிவாக்கப்பட வேண்டிய விடயங்கள்[தொகு]

  • பொறியியல் கல்வி
  • பொறியியல் துறை ஏடுகள்
  • பொறியியல் வணிக நிறுவனங்கள்
  • பொறியியல் தொழில்சார் அமைப்புகள்

--Natkeeran 22:24, 2 மார்ச் 2008 (UTC)

குறிப்புகள்[தொகு]

பங்காளிகள்[தொகு]

  • வாடிக்கையாளர் - customer
  • பயனர் - user
  • மேலாண்மையாளர் ! - ஒருங்கிணைப்பாளர் - project manager/coordinator
  • பொறியியலாளர் - engineer/developer
  • நுட்பவியலாளர் - technician
  • நிர்வாகம் - administration

--Natkeeran 03:33, 26 மார்ச் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பொறியியல்&oldid=2914557" இலிருந்து மீள்விக்கப்பட்டது