பேச்சு:பிரெயில் எழுத்து முறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேள்வி[தொகு]

பார்வைச் சவால் உடையோருக்காக லூயி பிரெயில் உருவாக்கியதால், அவருடைய பெயரால் இது பிரெயில் எழுத்துமுறை என்று அழைக்கப்படுகிறது. ஒருவரின் பெயரால் அமைந்த இதை புடையெழுத்து என்று தமிழ்படுத்த வேண்டுமா? பிரெயில் எழுத்து (முறை) என்றே தலைப்பிடலாம்(மே) என்பது என் கருத்து. விவாதிக்கலாம். குறிப்பு: பிரெயில் என்கிற வழிமாற்று இருக்கிறது. --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 11:49, 14 சூலை 2014 (UTC)[பதிலளி]

ஆம், நீங்கள் கூறுவது சரியே. புடையெழுத்து என்பது தரையில்/கல்லில்/மரத்தில் அல்லது வேறு பொருளில் புடைப்பாக இருக்கும் எழுத்துகளைக் குறிக்கும். இந்த வகை எழுத்துகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பிரெயில் என்பதும் புடையெழுத்தின் ஒரு வகை தான். பிரெயில் முறையில் வெறும் புள்ளிகள் மட்டுமே இருப்பதால், இதற்கு புடையெழுத்து என்ற தலைப்பு பொருந்தாது. பிரெயில் என்று மாற்ற ஆதரிக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:59, 14 சூலை 2014 (UTC)[பதிலளி]