பேச்சு:பிராஹ்மி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது பிராமி என்றே பரவலாக இது வரை எழுதப்பட்டு வந்திருக்கிறது. இடையில் ஹ் தேவையில்லை. புதுசு புதுசா ஏன் கிரந்தத்தைப் புகுத்த வேண்டும்? இது வரை தமிழிலும் விக்கிப்பீடியாவிலும் கிரந்தம் விடுத்து எழுதப்பட்டு வந்த சொற்களிலும் கிரந்தத்தைப் புகுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கிரந்தத்தை நீக்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்க இயலாவிட்டாலும், கிரந்தத்தைப் புகுத்துவதைத் தவிர்க்கும் விதமாகவாவது ஏதேனும் வழிகாட்டுகள் தரலாம். கூகுளைத் தமிழாசானாகக் கருதுவது இல்லை என்றாலும் ஒரு தகவலுக்கு, பிராமி (1870 முடிவுகள்), பிராஹ்மி (9 முடிவுகள்)--ரவி 14:11, 23 மே 2008 (UTC)[பதிலளி]

ரவி, இந்த அடையாளம் காட்டாத பயனர் செய்துள்ள மாற்றங்கள் இரண்டொரு வழிகளில் சரியானதல்ல. பயனர் வினோத் உருவாக்கிய கட்டுரையை இவர் இப்படி மாற்றி அக்கட்டுரையின் வரலாற்றை மாற்றியுள்ளார். எந்தக் கலந்துரையாடலும் ஒப்புதலும், முறைபாடும் இல்லாமல் மாற்றியுள்ளார். இவருடைய பிற திருத்தங்களில் (சமசுகிருதம்) இருந்து இவர் வலிமையான சமசுகிருத சார்பு உடையவர் என்பது போலத் தெரிகின்றது. இந்த அடையாளம் தெரியாத பயனரை இப்படி வலிந்து மாற்ற வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன். தமிழ்மொழி விக்கிப்பீடியாவில், தமிழ்மொழியின் முறைமகளுக்கு முன்னுரிமை தருவது நேர்மையல்லவா? சமசுகிருதத்திற்குத் தனியாக ஒரு விக்கிப்பீடியா உள்ளது அங்கு அவர் தனக்கு வேண்டுமளவும் எல்லா சமசுகிருத ஒலிகளை இட்டும் எழுதலாமே. பிற இந்திய மொழிகளிலும் இப்படி எழுதலாம். தமிழ் மொழியின் முறைபாடுகள் சற்று வேறானவை. கிரந்த எழுத்துக்கள் அறவே வேண்டாம் என்று ஏதும் முடிவில்லை, ஆனால் அளவுக்கு அதிகமாக, ஏன் இப்படி வலிந்து எழுத வேண்டும்? இப்படிச் செய்வதால் கிரந்த எழுத்துக்கள் மீது பிறருக்கு எதிர்ப்புணர்வே எழும். தமிழ் மொழி பேசும் தமிழர்களைப் போல சமசுகிருதத்தைப் போற்றி, வளர்த்து எடுத்தவர்கள் வரலாற்றில் குறைவே. சமசுகிருததத்தில் எழுதிய மிகப்பெரிய எழுத்தாளர்களில் பலர் தமிழர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். எனவே வலிந்து தமிழில் இப்படிக் கிரந்த எழுத்துக்களைப் புகுத்தாதீர்கள் என வேண்டிக்கொள்கிறேன்.--செல்வா 14:57, 23 மே 2008 (UTC)[பதிலளி]

கட்டுரைகளை காப்பு செய்துள்ளேன்.பிராஹ்மி நிச்சயமாக வழக்கில் இல்லை, அதனால் தான் கட்டுரையை இயற்றும் போது வழிமாற்றுப்பக்கம் கூட நான் உருவக்கவில்லை. அநாமதேய பயனர், விக்கித்திட்டம் எழுத்துமுறைகளில் பங்களித்தால் நன்றாக இருக்கும் :)
தன்னிலை விளக்கம்:
அந்த ஐ.பி. முகவரி என்னுடையது இல்லை. என்னுடைய முகவரி 121.xxx.xxx.xxx தான். விடுமுறையில் இருக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன், ஜாவா நிரலில் இருந்து தப்பிக்க Tweaking செய்து தான் உள் நுழைந்துள்ளேன். அது நிச்சயமா நான் இல்ல. நான் நிச்சயமா இப்படி எல்லாம் பண்ண மாட்டேங்க :). கிரந்தத்தை பொருத்த வரையில் என்னுடைய கொள்கை மாத்தியமகம் தான். எந்த காலத்திலும் வலிந்து புகுத்த நான் நினைத்ததில்லை.இல்லையெனில் கட்டுரையை இயற்றும் போதே பிராஹ்மி என இயற்றியிருப்பேனே. தயவு செய்து தவறாக கருத வேண்டாம்.
இந்த சூழ்நிலையில் தன்னிலை விளக்கம் தேவையென பட்டது. அதான் தான் கூறினேன். நன்றி வினோத்ラージャン 15:22, 23 மே 2008 (UTC)[பதிலளி]
வினோத், என் முதல் கவலையே, இதனை எழுதிய அடையாளம் காட்டாத பயனரின் செயலால் உங்கள் பங்களிப்புகள் மறைக்கப்பட்டு உள்ளது என்பதே. நீங்கள் மேறுகூறிய கருத்துக்களை, யாருக்காக, எதற்காக கொடுத்துள்ளீர்கள் என்றும் எனக்கு விளங்கவில்லை! --செல்வா 15:31, 23 மே 2008 (UTC)[பதிலளி]
மிகப்பொதுவாகத்தான், இங்குள்ள அனைவருக்கும் என்னைபற்றி தெரிந்திருக்கும். வேறுபாடு கருத்தியலில் தானே தவிர என்றும் ஆ.வி.போல் தனிப்பட்ட மோதல்களோ கட்டுரையை நாசமாக்கும் செயலோ இது வரைக்கும் நிகழந்ததில்லை இனியும் நிகழாது என நம்புவோமாக. என்னுடைய விக்கி விடுமுறை எடுத்த சூழ்நிலையில் கருத்தாடலில் இதை கூற வேண்டும் என்று தோன்றியது. எனது முந்தைய கருத்தாடல்களையும் விடுமுறை எடுத்த சூழலையும் இந்த செயல்பாடுகளையும் இணைத்து எவரேனும் மூன்றாவது நபர் திடீரென்று பார்த்தால் நிச்சயம் தவறான எண்ணம் தோன்றும், அதை மறுப்பதற்கில்லை. ஆக இன்னும் சில காலம் கழித்து யாரும் என்னை தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாதில்லை என்ற சுயநிலம் தான் வேறொன்றும் இல்லை. எல்லாம் ஆங்கில விக்கிப்பிடியா நிகழ்வுகளை பார்த்து கதி கலங்கி தான் கொடுத்துள்ளேன் :) வினோத்ラージャン 15:44, 23 மே 2008 (UTC)[பதிலளி]

அநாமதேய பயனருக்கான எனது வேண்டுகோள்[தொகு]

அநாமதேய பயனரே, தாங்கள் முதலில் செய்த தொகுப்புகள் அறியாமையினால் செய்ததாக எடுத்துக்கொண்டாலும் இன்னொரு பயனர் தங்களது தொகுப்புகளை முன்நிலையாக்கிய நிலையில், பேச்சுப்பக்கத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதே முறையாகும் அதைவிடுத்து முன்நிலையாக்கப்பட்டது மீண்டும் முன்நிலையாக்குவது முறையாகாது. என்னுடைய கருத்துப்படி பிராஹ்மி ஹ் தேவையில்லை, அது பொது வழக்கும் இல்லை. கட்டுரையை ஆரம்பித்தவன் என்கிற முறையில் இதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கள் இந்த கட்டுரையை தொகுத்ததில் இருந்து தங்களுக்கு எழுத்துமுறையில் ஈடுபாடு உள்ளதென் நினைக்கிறேன். அவ்வாறெனில் தயை கூர்ந்து Wikipedia:விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் தங்களை பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் விடுமுறையில் இருப்பதால் திட்டத்தில் இன்னும் பிராமிய குடும்ப எழுத்துமுறைகள் குறித்து எழுதிய வேண்டியது மிஞ்சி உள்ளது. வார்ப்புரு:Brahmic என்னும் வார்ப்புருவில் இயற்றிய வேண்டி எஞ்சியுள்ள கட்டுரைகள் சிவப்பு இணைப்புகளாக உள்ளன, அவற்றை குறித்து கட்டுரை எழுதி உதவலாம்.

தயவு செய்து ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக்கொள்ளவும்.

தங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி வினோத்ラージャン 15:03, 23 மே 2008 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிராஹ்மி&oldid=322080" இலிருந்து மீள்விக்கப்பட்டது