பேச்சு:நேர் விலகு
Jump to navigation
Jump to search
கழல்- முன்காலத்தில் வீரர்கள் அணியும் காலணி என்று விக்சனரியில் பொருள் உள்ளது. இதுதவிர திருப்பம் என்பது திருப்புவதைக் குறிக்கும். ஆனால் பந்து நேர்ப்பக்கத்தில் (on side) இருந்து எதிர்ப்பக்கமாக (off side) விலகிச் செல்லும் (breaks away) என்பதால் நேர் விலகு (on break) என்று அழைக்கலாம். கால் விலகு (leg break) என்பதும் சரியானதே. ஆனால் அதைவிட நேர் விலகு எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருக்கும். எனவே நேர் விலகு என்று தலைப்பை மாற்றக் கோருகிறேன். (குறிப்பு: வீசுகளத்தில் மட்டையாடுபவருக்கு முன்னால் (நேராக) உள்ள ஆடுகளத்தின் பாதிப் பகுதி நேர்ப்பக்கம். அவருக்குப் பின்னால் (எதிராக) உள்ள மீதிப் பகுதி எதிர்ப்பக்கம்.) Selva15469 (பேச்சு) 01:16, 11 திசம்பர் 2019 (UTC)