பேச்சு:நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg நேரம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

கடிகாரம் தமிழ்ச்சொல்லா? watch, clock இரண்டையும் வேறுபடுத்திச் சொல்வது எப்படி? சுவர்க்கடிகாரம் என்ற சொல் இருக்கிறது. சுவரில் இல்லாத கடிகாரங்களை எப்படிச் சொல்வது :) --ரவி 15:47, 4 மே 2008 (UTC)

watch, clock எங்கு வேறுபடுத்தி சொல்லவேண்டும். --Natkeeran 15:48, 4 மே 2008 (UTC)

கடிகாரம் தமிழ்ச்சொல் அல்ல. watch என்பதற்குக் கைக்கடிகாரம் என்ற வழக்கு உள்ளது. இலங்கையில் (யாழ்ப்பாணத்தில்?) clock என்பதற்கு மணிக்கூடு என்பதே பெரும்பான்மை வழக்கு. சுவர்மணிக்கூடு என்ற வழக்கு உண்டு. ஆனால் கைமணிக்கூடு என்று வழக்கு இருப்பதாகத் தெரியவில்லை. Clock Tower = மணிக்கூட்டுக் கோபுரம். மயூரநாதன் 17:01, 4 மே 2008 (UTC)

கடிகாரம், கடியாரம், கடிகை என்பன தமிழல்ல. ghaṭikā- ('க:டிகா) என்னும் சமசுகிருதச் சொல்லில் இருந்து பெற்றது. ஆனால் தமிழில் வழங்கும் ஒரு சொல்தான். கைக்கடியாரம் வழக்கில் இருந்த சொல். நான் பள்ளி இறுதியாண்டு தேர்வில் வெற்றி பெற்றதற்கு என் பாட்டி கைகடியாரம் வாங்கி அளித்தார்கள். இது அவர்கள் ஆண்ட சொல் என்று காட்டவே. சுவர்க்கடிகாரம், கைகடிகாரம் (இது மணிக்கட்டில் கட்டாமல் தனியாக மகாத்மா காந்தி அவர்கள் வைத்திருந்தது போல் இருந்ததற்கும் பயன்பட்ட சொல்) என்னும் சொற்கள் வழ்க்குதான். மணிக்கூடு, மணிக்கூண்டு என்பது கிளாக் டவர் என்பதற்குப் பயன்படுத்தினர். பொதுமக்கள் காண வசதியாக பொது இடத்தில் இப்படிக்கட்டி வைப்பது முன்னாளைய பழக்கம். இப்பொழுது அருகியோ அற்றோ விட்டது. நேரங்காட்டி, மணிகாட்டி என்றும் கூறலாம். ஆங்கிலத்தில் கிளாக் என்னும் சொல் 1371இல் இருந்து உள்ளது. அதன் பொருள் ஒலியெழுப்பும் மணி என்பதுதான். தமிழிலும், நேரத்தைக் குறிக்க மணி அடித்தார்கள். கப்பலிலும், நேரத்தை அறிவிக்க மணி அடித்தார்கள். ஆங்கிலத்தில் கிளாக் என்னும் சொல் முதலில் clokke என்னும் வடிவில் இருந்தது. அதன் பொருள் மணி என்பதுதான். இடைக்கால இலத்தீன் மொழியில் கெல்ட்டிக் (Celtic) மொழியில் இருந்து பெற்ற clocca என்னும் சொல் மணி என்னும் பொருளதே. எனவே மணி என்பது நேரத்தைக் குறிக்கும் சொல். மணிநேரம் என்பது இரண்டு மணியடிப்புக்கு இடையே உள்ள நேரம். இன்று ஓர் அவர் (hour) என்பதாகும். முன்னர் நாழி, நாழிகை என்பது ஒரு முகத்தல் அளவைப் படி போன்ற நாழிகை என்னும் கொள்கல அளவு நீர் வடியும் நேரம் என்று கொண்டனர். 60 நாழிகை ஒரு நாள். ஒரு நாழிகை 24 மணித்துளி (நிமிடம்). அப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட நாழிகைகள் கழிந்தபின் மணியடிப்பது வழக்கம். எனவே நொடி, மணித்துளி, மணி என்னும் முறைமை. மணித்துளி என்பதில் துளி என்பது சிறு துண்டு துகளி, துளி என்று பொருல் படுவது. நீரைக் கொண்டு நேரத்தை அளந்த காலத்திலும் பொருள் உள்ளது. அப்பொழுது அச்சொல் இருந்ததற்கான சான்றுகோள்கள் உள்ளனவா என்று அறியேன். எனவே மணிகாட்டி, நேரங்காட்டி, கைமணிகாட்டி, சுவர்மணிகாட்டி, எண்ணிம மணிகாட்டி என்று சொல்லலாம்.--செல்வா 18:39, 4 மே 2008 (UTC)

இக்கட்டுரையில் நேரம் குறித்த தகவல்களே அதிகமுள்ளன. காலம் என்பதிலிருந்து நேரம் எனும் இக்கட்டுரைக்கு வழிமாற்று செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் (வரும் காலம்) போன்றவைகளை விளக்கிச் சொல்லக் கூடிய காலம் எனும் கட்டுரை எழுதப்படாமல் போகலாம். இக்கட்டுரைக்கு காலம் என்பதிலான வழிமாற்று நீக்கப்பட வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:52, 4 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நேரம்&oldid=2373280" இருந்து மீள்விக்கப்பட்டது