பேச்சு:நாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
COTWnew.png நாய் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
DNA-structure-and-bases.png நாய் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நாய் - குக்கர் என்பதுவும் தெலுங்கில் நாய்- குக்கா என்று அழைக்கப் படுவதும் ஒப்புநோக்கத்தக்கது. இத்தனை நாட்கள் குக்கா என்பதன் மூலம் அறியாதிருந்தேன்.--Sivakumar \பேச்சு 14:01, 26 நவம்பர் 2007 (UTC)

சிவா, உங்கள் குறிப்புகண்டு இதை மேலும் துழாவியபோது இது குரைத்தலுடன் தொடர்புடையது என்றும் தெந்திராவிட மொழிகளில் மட்டுமல்லாது வட திராவிட மொழியான பிராகூயிலும் கூட உண்டு என்று தெரிய வந்தது. அது மட்டுமல்ல உருசிய மொழியல்கூட இது ஒத்த பொருள் தருகிறது![1] -- Sundar \பேச்சு 05:30, 27 நவம்பர் 2007 (UTC)
சுந்தர், தங்களின் மேம்பட்ட தேடலுக்கு நன்றி. இது உருசிய மொழியிலும் இருப்பது வியப்புக்குரிய செய்திதான். இந்தி - குத்தா என்பதன் மூலத்தையும் நாம் ஆராயலாம் :) --Sivakumar \பேச்சு 07:31, 27 நவம்பர் 2007 (UTC)
பல மொழிகளிலும் இந்த ஒப்புமை உள்ளது. அதுவும் நாயின் குரைத்தல் ஒலியையே வேராகக் கொண்டுள்ளன.மேலும் பார்க்க kutya dog {either sex} /Hungarian--Sivakumar \பேச்சு 07:46, 27 நவம்பர் 2007 (UTC)

செல்வா, கட்டுரைகளில் தகுந்த இடங்களில் நீங்கள் இப்படி பழந்தமிழ்ச் சொற்களை தருவது மிகவும் உதவியாக இருக்கிறது. தமிழ் விக்கிபீடியாவில் உலாவுவதே ஒரு தொடர் தமிழ் கற்றலுக்கான வாய்ப்பாக இருப்பது, தமிழ் விக்கிபீடியான ஈர்ப்புக்கும் ஈடுபாட்டுக்கும் முக்கிய உந்துதல்.நன்றி.--ரவி 16:16, 27 நவம்பர் 2007 (UTC)

சிவகுமார் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. சுந்தர் மேற்கோள்களுக்கு நன்றி. ரவி, ஆமாம், இது போல கூடிய இடங்களில் பொருத்தமாகத் தொகுத்து வருவது நல்லது. ஒவ்வொரு சொல்லையும் பொருள் விளங்குமாறு விரித்து எங்காவது எழுத வேண்டும் என்றும் ஆவல் உள்ளது. தமிழில் தோல்நாய் (தோனாய்) என்று ஒரு வகை குறிக்கப்பெற்றுள்ளது. மெக்சிக்கோ தோல்நாய் அவ்வகையைச் சேர்ந்த நாய்தான். இன்னும் சடைநாய், வேட்டைநாய் வகைகள் என்று பல வகைகள் உள்ளன. அகராதிகளில் தொகுக்கப்பெற்ற இச்சொற்கள் எங்கெல்லாம் ஆளப்பட்டுள்ளன என்று கண்டு பதிவு செய்தலும் வேண்டும். --செல்வா 17:59, 27 நவம்பர் 2007 (UTC)

காப்பு நிலை[தொகு]

கொல்லைப்படுத்தப்பட்டவை என்றால் domesticate என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இது என்ன சொல் என்று எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. வாசிக்க வாசிக்க இதன் பொருள் அறிந்தேன் :-) (என் புரிதல் தவறு இருந்தால் திருத்தவும் -- கொல்லை-> வீட்டின் பின்புறம் இருப்பது, அதாவது வீட்டில் பழக்கப்படுத்தப்பட்டவை, கொல்லைப்படுத்தப்பட்டவை) இச்சொல் எவ்வாறு domesticate என்பதற்கு நிகராகும் என்று விளக்கினால் விளக்கத்தோடு இதை விக்சனரியில் இடலாம். வீட்டு விலங்கு அல்லது வளர்ப்பு விலங்கு என்பதே நான் புரிந்து கொண்டது.--குறும்பன் (பேச்சு) 17:32, 19 சூலை 2012 (UTC)

மேற்கோள்கள்[தொகு]

  1. Starostin, George; Sergei Starostin. "Dravidian etymology : List with all references". The Proto-Dravidian database. The Tower of Babel. பார்த்த நாள் 2007-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாய்&oldid=1214460" இருந்து மீள்விக்கப்பட்டது