உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நத்தார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நத்தார் என்னும் கட்டுரை கிறித்தவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் கிறித்தவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நத்தார் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

வேண்டுகோள்

[தொகு]

டெரன்ஸ், தீபாவளியின் போது நிறையபேர் தீபாவளி கட்டுரைக்கு வந்தார்கள். அது போல் கிறிஸ்துமஸ் கட்டுரைக்கும் வர வாய்ப்புண்டு. இத்தோடு சேர்த்து ஆங்கிலப் புத்தாண்டு கட்டுரையையும் மேம்படுத்தித் தர வேண்டுகிறேன்--Ravidreams 14:14, 7 டிசம்பர் 2006 (UTC)

ஆம் செய்கிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 14:28, 7 டிசம்பர் 2006 (UTC)

ரவி எழுத்துப் பிழைகளையும் வடமொழி சொற்களையும் கலைந்து திருத்தி உதவியம்மைக்கு நன்றி. அழங்கரித்தல்///அலங்கரித்தல்? எது சரி?--டெரன்ஸ் \பேச்சு 10:01, 25 டிசம்பர் 2006 (UTC)

அலங்கரித்தல் --கோபி 10:16, 25 டிசம்பர் 2006 (UTC)

கிறிஸ்துமஸ் என்பது தமிழகத்தில் வழக்கிலுள்ளதா? கிறிஸ்மஸ் என்றே பயன்படுத்தலாமே! கிறிஸ்துமஸ், நத்தார் என்பவற்றை வழிமாற்றிகளாக உருவாக்கலாம். --கோபி 10:19, 25 டிசம்பர் 2006 (UTC)


கிறிஸ்மஸ் என்பது அப்படியே ஆங்கில பெயரை உச்சரிப்பது போல இருக்கிறது. (கிறிஸ்மஸ் ஆங்கில பிரியர்களின் வழக்கு) இணையத்தில் கூகில் தேடல் முடிவுகள்:

  1. கிறிஸ்துமஸ்=16,000
  2. கிறிஸ்மஸ்=732

இவற்றில் பல தமிழகத்தை சேர்ந்த தளங்களாகும்.எனவே இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் என்றே வழங்குகிறார்கள் போலும். எனவே கிறிஸ்மஸ் என்பதை முதன்மை படுத்த தேவையில்லை.--டெரன்ஸ் \பேச்சு 11:05, 25 டிசம்பர் 2006 (UTC)

christ என்பதை கிறிஸ்ட் அல்லது கிறிஸ்ற் என்று எழுதத் தயங்கியமையால் கிறிஸ்து என்று பயன்படுத்தப்பட்டது (ட், ற் என்பன தமிழில் சொல்லிறுதி எழுத்தாக வராமை காரணம் என்றே நினைக்கிறேன்) அதன் தொடர்ச்சியாக christmas என்பது கிறிஸ்துமஸ் ஆக்விட்டது. கிறிஸ்மஸ் என்பதே இயல்பான உச்சரிப்பு. அதனைக் கிறிஸ்துமஸ் என்று உச்சரிக்க வேண்டுமென்ற தேவை தமிழில் எவ்வகையிலும் இல்லை. நத்தார் அல்லது நத்தார் பண்டிகை என்பதே தமிழ் வடிவம். --கோபி 11:58, 25 டிசம்பர் 2006 (UTC)

கிறிஸ்து - கிறிஸ்துமஸ் என்று சொல்வது தான் சொற் தொடர்ச்சியுடன் இருக்கும். Christல் t தெளிவாகவும் christmasல் t அமைதியாகவும் ஒலிக்கிறது. தமிழில் எல்லா எழுத்துக்களையும் ஓசை குறைக்காமல் ஒலிப்பது தானே வழமை? தமிழ்நாட்டில் கிறிஸ்து, கிறிஸ்துமஸ் என்று சொல்வது பெரு வழக்கில் இருக்கிறது. ஆங்கில உச்சரிப்பை அப்படியே பின்பற்ற வேண்டும் என்றில்லை. பல தமிழ் விவிலியப் பெயர்கள் ஆங்கிலமல்லாத மூல மொழி உச்சரிப்பை ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் நத்தார் என்று சொன்னால் எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் கிறிஸ்தவர் அல்லாதவர்களுக்காவது புரியாது. --Ravidreams 12:09, 25 டிசம்பர் 2006 (UTC)

நத்தார் என்பது கிறிஸ்துமஸ் என்பதற்கான natal என்ற போர்த்துக்கேய மொழி பதத்தின் தமிழாக்கமாகும். இது இப்போது இலங்கையில் பயன்பாட்டில் இருந்தாலும் கிற்ஸ்துமஸ் என்பதே முத்ன்மையாக உள்ளது.--டெரன்ஸ் \பேச்சு 12:23, 25 டிசம்பர் 2006 (UTC)

முதன்மைப் பயன்பாடு தொடர்பில் நான் அறியேன். ஆனால் நத்தாருக்கு மழையில்லாட்டி செத்தாலும் மழையில்லை என்று ஒரு பழமொழியே உண்டு என்ற அளவுக்கு நீண்டகாலப் பயன்பாடு ஈழத்தில் உள்ளது. --கோபி 12:31, 25 டிசம்பர் 2006 (UTC)

கிறிஸ்துமஸ், கிறிஸ்மஸ், நத்தார், கிறிஸ்து பிறப்புவிழா

[தொகு]

இவ்விழா குறித்து பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். கிறித்தவர் நடுவே நிலவுகின்ற சொல்வழக்கைக் கீழே குறிப்பிடுகிறேன்.

1) நத்தார் குறித்து டெரன்ஸ் சொல்வது சரியே. இலத்தீன் மொழியில் பிறந்த நாள் dies natalis என்பதாகும். இயேசுவின் பிறந்த நாளைக் குறிக்க nativitas (ஆங்கிலம் = nativity) என்ற சொல்லும் வழக்கில் உண்டு. இச்சொல் போர்த்துகீசியம் வழியாக இலங்கையில் நுழைந்தபோது நத்தால் (நத்தார்) ஆயிற்று.
ஆனால், தமிழ்நாட்டில் கர்த்தர் பிறப்பு என்பது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

2) கிறிஸ்மஸ் என்னும் சொல் ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் தமிழகத்தில் பரவியது. அதையும் தமிழ்ப்படுத்தி கிறிஸ்துமஸ் என்றே கூறுவது பரவலான வழக்கம்.

3) அயல் சொற்களைக் கூடிய மட்டும் தவிர்க்கும் முயற்சியில் இன்று தமிழகக் கிறித்தவர் நடுவே கிறிஸ்து பிறப்புவிழா என்று கூறுவது வழக்கம்.

4) எனவே, விக்கியில் கிறிஸ்து பிறப்புவிழா என்று தலைமைக் கட்டுரை அமைத்துவிட்டு, நத்தார், கிறிஸ்துமஸ், கிறிஸ்மஸ் என்னும் சொற்களை அம்முதன்மைக் கட்டுரைக்குத் திருப்பிவிடுவது பொருத்தமாயிருக்கும் என்பது என் கருத்து. --பவுல்-Paul 23:58, 31 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

இக்கட்டுரைக்கு நத்தார் என்ற தலைப்பை முதன்மைப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.--பாஹிம் 12:31, 20 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

கிறிஸ்து பிறப்புவிழா 12 புனித நாட்கள்

[தொகு]
காண்க : Twelve Days of Christmas ஆங்கிலத்தில்
: Twelve Holy Days
டிசம்பர் 25 ல் தொடங்கி 12 புனித நாட்கள் கிறித்துமசுவிழாவாக கொண்டாடப்படுகிறதா? இக்கட்டுரையில் விளக்கப்பட வேண்டும் --ஸ்ரீதர் (பேச்சு) 04:19, 27 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஆம். பல கிறித்தவ திருச்சபைகளில் இந்த 12 நாட்களும் கிறிஸ்து பிறப்புக் காலம் என அழைக்கப்படுகின்றது --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:13, 28 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

கலைச்சொல் பட்டியல்

[தொகு]

பிறமொழிப் பெயர்களின் பட்டியல்

[தொகு]

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலப் பெயர்களின் பட்டியல். தமிழ் எழுத்துப்பெயர்ப்புகள் வெவ்வேறு விதமாக செய்யப்படலாம் என்பதைக் கருத்தில் கொள்க.

ஆங்கில பெயர் தமிழாக்கம்
Saturnalia சடுர்நெலியா
Cyprian சிப்ரியன்
Yule யூல்
Natalis Solis Invicti நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்டி
Sextus Julius Africanus செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ்
Origen ஒரிஜென்
Filocalus பிலொகலஸ்
pharaoh பார்வோன்
Valens வலென்ஸ்
Adrianople அட்ரினாபோல்
Edward Gibbon எட்வட் கிப்பன்
Antioch அந்தியோக்கியா
Constantinople கொன்சாந்தினோபில்
Gregory of Nazianzus கிரெகொரி நசியன்சுஸ்
John Chrysostom யோன் கிறிசொஸ்டொம்
Don Lorenzo Monaco டொன் லொரென்சோ மொனாகோ
Charlemagne சார்லிமேன்
William I of England இங்கிலாந்தின் முதலாவது வில்லியம்
St. Martin புனித மார்டின்
Emperor Augustus பேரரசன் அகுஸ்துஸ்
Charles Dickens சார்ல்ஸ் டிக்கின்ஸ்
New England புதிய இங்கிலாந்து
Washington Irving வாசிங்டன் இர்விங்
Carl Larsson கார்ல் லார்சன்
Lynch லின்ச்
Donnelly டொனெலி
Ganulin கனுலின்

கலைச்சொல் பட்டியல்

[தொகு]

கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்களின் பட்டியல்.

Vernal equinox வசந்தகால சம இராப்பகல் நாள்
Incarnation மனுவுருவாதல்
Sinner பாவி
Epiphany திருக்காட்சி விழா
prophet தீர்க்கதரிசி, இறைவாக்கினர்
Baptism திருமுழுக்கு
Magi ஞானி
Feast of the Annunciation மங்கள வார்த்தை அறிவிப்பின் திருநாள்
Advent திருவருகைக் காலம்
The Reformation சமய மறுசீரமைப்பு
Puritan தூய்மைவாத கிறிஸ்தவ மறுசீரமைப்பு

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா

[தொகு]

நத்தார் என்பது பெரும்பான்மையான தமிழர்களிடையே வழக்கத்தில் இல்லாத அயல்மொழிச் சொல்லாகும். எனவே பரவலாக அறியப்படும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா என்று தலைப்பை மாற்ற பரிந்துரைக்கிறேன். SharadSHRD7 (பேச்சு) 02:36, 5 மார்ச் 2022 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நத்தார்&oldid=3814037" இலிருந்து மீள்விக்கப்பட்டது