பேச்சு:துண்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துவாய் ஈழத் தமிழா? சொல் மூலம் அறிய ஆவல். தமிழ்நாட்டில் துண்டு என்று தான் அழைக்கிறார்கள்--Ravidreams 19:58, 4 மார்ச் 2007 (UTC)

இது Towel என்பதிலிருந்து வந்தது என எண்ணுகிறேன். இந்தியக் கதைகளிலும் துவாலை என்று குறிப்பிடப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இலங்கையில் துவாய் என்பது பரவலான வழக்கில் உள்ளது. துண்டு என்றும் சொல்வது உண்டு. Mayooranathan 20:18, 4 மார்ச் 2007 (UTC)

Turkey towel போன்றவற்றை பூத்துவலை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், இது அருகி வரும் வழக்கு. துண்டு என்பது தான் தமிழகத்தில் பெருவழக்கு.--Ravidreams 20:40, 4 மார்ச் 2007 (UTC)

ரவி, துண்டாக்கப்பட்டவை எல்லாமே துண்டுதான் :-) ஊரில் கோவணத்தையும் துண்டு என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் :-) கொழும்பில் பொம்பிளைப் பிள்ளைகளைத் துண்டு என்கிறார்கள் பெடியன்கள் :-) எது எப்படியோ தமிழ் சொல் அல்ல என்றுதான் தோன்றுகிறது... துவாய், துவாலை என்பவற்றை வழிமாற்றிகளாக வைத்திருப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லைத்தான். ஆனால் piece என்பதற்கான தமிழ்ச் சொல் துண்டு என்பதையும் கவனத்திற் கொள்ளவும். எ.கா: இனிப்புத் துண்டு. --கோபி 13:25, 5 மார்ச் 2007 (UTC)

கோபி, ஏகப்பட்ட :) போட்டதால் உங்களை விட்டு விடுகிறேன் :) துண்டாக்கப்பட்டத் துணி துண்டு என்பது மிகத் தெளிவு. துண்டை வைத்து கோவணம் கட்டலாம். ஆனால், கோவணம் எல்லாம் துண்டாகாது :) பொது வழக்கு கருதி துண்டு என்பதையே முதன்மைப்படுத்தலாம்.--Ravidreams 13:27, 5 மார்ச் 2007 (UTC)

ரவி அப்படிச் செய்வதானால் உங்களுக்கு ஒரு நிபந்தனை. கோவணம் பற்றி ஒரு கட்டுரை எழுதிவிட்டுத் துண்டை முதன்மைப் படுத்துங்கள்:-) ஒரு கோவணம் கூடக் கிடைக்காத கலைக்களஞ்சியமாக இருக்கிறதே நம் த.வி :-) --கோபி 13:31, 5 மார்ச் 2007 (UTC)

முன்னரே சொல்லி இருந்தால் ஊரில் கோவணம் கட்டிய தாத்தாவை படம் எடுத்து வந்திருப்பேன் :). கட்டுரையை உருவாக்குகிறேன். --Ravidreams 13:35, 5 மார்ச் 2007 (UTC)

கோவணம் பற்றிய கட்டுரை தான் உருவாகி விட்டதே... இப்போது இக்கட்டுரைக்கு 'துண்டு' என்ற பெயரை முதன்மை படுத்தலாமா...? :) :) --மது 17:46, 30 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துண்டு&oldid=119503" இலிருந்து மீள்விக்கப்பட்டது