பேச்சு:தமிழ் அச்சிடல் வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் அச்சிடல் வரலாறு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மொழிமாற்ற உதவி[தொகு]

Catechism இணையான தமிழ் சொல் என்ன ? எனது புரிதலில் கிறித்தவ வினாவிடை என்று மொழிபெயர்த்துள்ளேன். இதனை சரிபார்த்துத் திருத்தவும்.--மணியன் 10:10, 8 பெப்ரவரி 2011 (UTC)

  • மணியன், தமிழ் அச்சிடல் வரலாற்றில் பல போர்த்துகீசிய சொற்களும் கிறித்தவம் சார்ந்த குறிப்புகளும் வருகின்றன. அவற்றின் தமிழாக்கத்தை அவ்வப்போது சீரமைக்க முன்வருகிறேன். இக்கட்டுரை தேவையான ஒன்றுதான். Catechism என்பது கிறித்தவ மரபில் "சமயப் போதனை ஏடு" என மொழிபெயர்க்க வேண்டியது. "வினாவிடை" என்பது ஒரு வடிவமே; வேறுவடிவங்கள்: கட்டுரை, விளக்கம், விரிவுரை, தெளிவுரை, பொழிப்புரை என்னும் பல. --பவுல்-Paul 21:08, 8 பெப்ரவரி 2011 (UTC)


A good reference[தொகு]

  • மேலே உள்ள நூல் மற்றும் இணைய ஆதாரங்கள் மிகப் பயனுள்ளவை. அவற்றிலிருந்து பல செய்திகளைத் தமிழ் விக்கியில் கொணர்வது நலம் பயக்கும். --பவுல்-Paul 18:25, 9 பெப்ரவரி 2011 (UTC)

1865 - Classified catalogue of Tamil printed books - முழுமையாக, அரிய தகவல்களுடன், சில பிழையானவை[தொகு]

1865 - Classified catalogue of Tamil printed books - முழுமையாக, அரிய தகவல்களுடன், சில பிழையானவை

1865 இல் - அதுவரை 1755 தமிழ் நூல்கள் அச்சிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சில அக்காலத்திலேயே அரிதாகக் கிடைத்த படியால், பல இப்போது பெற முடியாவை என நினைக்கிறேன். --Natkeeran 04:44, 10 பெப்ரவரி 2011 (UTC)

கிழக்கிந்தியக் கம்பனியின் தமிழர் அச்சகங்களுக்கான தடை: ஆதாரம் உளதா?[தொகு]

நட்கீரன், "கிறித்தவர் அல்லாத தமிழர்களால் தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதற்கோ, அல்லது அச்சங்களை நடத்துவதற்கோ" கிழக்கிந்திய கம்பனி தடை விதித்ததாக நான் எங்கும் வாசித்து அறிந்ததில்லை. போர்த்துகீசியம், ஆங்கிலம் போன்ற தம் மொழிகளை ஆதரிப்பதில் செலுத்திய கவனத்தைக் குடியேற்ற ஆதிக்கத்தினர் நம் நாட்டு மொழிகள் மட்டிலும் கலாச்சார வளர்ச்சியிலும் செலுத்தவில்லை என்பதை மறுக்க முடியாது (இங்கே விதிவிலக்குகளும் உண்டு!). நாட்டு மொழிகளை ஆதரித்தால் குடியேற்ற ஆதிக்கத்தை எதிர்த்து கருத்துத் தெரிவிப்பார்கள் என்று ஆதிக்கக்காரர்கள் அஞ்சியதும் உண்டு. ஆனால், கிறித்தவத் தமிழர் - கிறித்தவரல்லாத தமிழர் என்று வேறுபடுத்தி, அச்சுத்துறையில் சட்டம் இயற்றியதாகத் தெரியவில்லை. ஆங்கில விக்கியில் தமிழ் அச்சு வரலாறு பற்றிய கட்டுரையும் சமய அடிப்படையில் தமிழருக்கு உரிமை மறுக்கப்பட்டதாகக் கூறவில்லை. இருப்பினும், தாங்கள் வெளியிட்ட கருத்துக்கு ஆதாரங்கள் காட்டுவதாக இருந்தால் என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன்.

அச்சகம் நடத்துவதிலும் ஏட்டுச்சுவடிகளைக் கையெழுத்து முறையில் அல்லாமல் அச்சு முறையில் படி எடுப்பதிலும் நம் நாட்டவர் பிந்தியதற்கு நடைமுறைக் காரணங்களே முக்கியமாக அமைந்தன என்று வாசித்து அறிகிறேன். இந்திய மொழிகளில் (தமிழ் உட்பட) வார்ப்புருக்கள் வார்த்தெடுப்பது, காகிதம் தயாரிப்பது, அச்சுக் கோக்கும் அறிவும் திறமையும் கொண்டிருப்பது போன்ற சவால்கள் ஒருபுறம்; வாய்வழி கலாச்சாரத்திலிருந்து எழுத்துக் கலாச்சாரத்துக்கு மாறுவதில் மக்களிடையே நிலவிய சிக்கல்; சமுதாயத்தில் எல்லா மட்டத்திலும் சிறார் கல்வியும் முதியோர் கல்வியும் பரவலாக ஏற்படாத நிலை; ஏட்டுச் சுவடிகளில் எழுதும் பாணி தொடர்ந்த நிலைமை; நம் நாட்டுப் பண்டைய வரலாற்றையும் பண்பாட்டையும் நம்மவர் அக்கறையோடு பேணாத நிலை; எல்லாவற்றிற்கும் மேலாக ஆட்சி அதிகாரம் அயல் நாட்டாரிடம் இருந்த நிலை; - இவை எல்லாம் தமிழ் அச்சு வளராததற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். --பவுல்-Paul 05:58, 10 பெப்ரவரி 2011 (UTC)

நானும் பவுலுடன் ஒப்புகிறேன். தங்கள் தொழில்நுட்பத்தை பகிராமல் இருந்தார்கள் எனலாமே தவிர ஏதேனும் தடை விதித்ததாக சரிபார்க்ககூடிய ஆதாரம் இன்றி பதியக் கூடாது. 1800க்கு முந்தைய காலகட்டங்களில் கிழக்கிந்தியக் கம்பனிக்கு அடிபணியாத இந்தியா பரவலாக இருந்தது. ஆகவே அப்படி ஒரு தடை இருப்பினும் பிற பகுதிகளில் ஏனையோர் முனைந்திருக்கலாம். --மணியன் 06:47, 10 பெப்ரவரி 2011 (UTC)

தமிழில் இலக்கிய வரலாறு [1] நூலில் ...அடுத்த கட்டமாக அமைவது, அச்சுச் சாதனம், மத வேறுபாடின்றி எல்லோருக்கும் திறந்து விடப்பட்டமையுடன் நெருங்கிய தொடர்புடையது. இது 1835இல், சேர்சான்ஸ் மெற்காஃப் (Sir Charles Metcalfe) அது காலவரை அச்சுப் பயன்பாட்டிலிருந்து கட்டுப்பாடுகளை நீக்கிய பொழுது தொடங்கிற்று. .... ஆகவே, தமிழிலக்கிய பாரம்பரியத்தின் மீளுற்பத்தியில் 1835 நிச்சயமான ஒரு காலக்கோடாக அமைந்தது என்கிறார் சிவத்தம்பி. (பக்கம் 65) - கோபி 07:00, 10 பெப்ரவரி 2011 (UTC)

மதரீதியாக தடைகள் இருந்தனவா என்று தெரியவில்லை. ஆனால் 1799ல் ஆர்த்தர் வெல்லெஸ்லி Press Regulations கொண்டு வந்ததும், 1823ல் உரிமம் உள்ளவர் மட்டுமே அச்சகம் வைக்கலாம் என்று இறுக்கமான சட்டமியற்றப்பட்டதும் உண்மை.[2]. கோபி குறிப்பிட்டுள்ள படி மெட்கால்ஃபின் 1835 press act வந்த பிறகே இப்பிடிகள் தளர்த்தப்பட்டன. மிஷனரிகளுக்கும் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் இருந்த உறவு கொஞ்சம் விசித்திரமானது. மிஷனரிகளின் மதப்பணியால் பிரச்சனை ஏற்பட்டு வியாபரத்தை பாதித்து விடக்கூடாது என்பதற்காக 1813 வரை தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் மிஷனரிகளை நுழைய விடாமல் கம்பனி செய்திருந்தது. ஆனால் தனிப்பட்ட கம்பனி அதிகாரிகள் ஆங்காங்கே சமயப் பற்றால் இவ்விதியை மீறியதும் நடந்தது உள்ளது. எனவே 1799-1835ல் தடைகள் இருந்தன என்பது உண்மை. ஆனால் அதற்கு மதக்காரணம் இருந்ததா என்று தெரியவில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 07:08, 10 பெப்ரவரி 2011 (UTC)

இதனைப் படிக்கும் போது ஊடகக் கட்டுப்பாட்டுக்கு அரசியல் காரணங்களே முதன்மையாக இருந்தன என்று தெரிகிறது. --சோடாபாட்டில்உரையாடுக 07:14, 10 பெப்ரவரி 2011 (UTC)

மேலே நான் தந்த ஆதாரத்திலுள்ள சொற்கள் நூலாசிரியருடையவே. கூகிள் நூல்களினூடாகத் தேடுகையில் அரசியற் காரணங்களே முதன்மையென்பது தெரிகிறது. - கோபி 07:43, 10 பெப்ரவரி 2011 (UTC)
கோபியின் சான்றை கட்டுரையில் இணைத்து விட்டேன்.--மணியன் 10:14, 10 பெப்ரவரி 2011 (UTC)
எனது தகவலில் பிழைகள் இருக்கலாம். டானிசு கிழக்கிந்தியக் கம்பனி, பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியா, அல்லது இருவருமா என்பதில் தெளிவில்லை. பிரித்தானியர்கள் வெளியேறும் வரை சுதேசிகள் அச்சுகங்கள் வைக்க பல தடைகள் இருந்தன. கப்பல் ஓட்டுவது, உடை தயாரிப்பது போன்ற பிற துறைகளில் இருந்த தடைகளைப் போலவே. கிழக்கிந்தியக் கம்பனிக் காலத்தில் அவர்கள் சமய நோக்கில் அடக்குமுறை இருந்ததா என்பது நோக்கி உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆராய்ந்து தெளிவுபடுத்தி, ஆதாரங்களைச் சேர்க்க முயல்கிறேன். தவறான தகவல்களை நீக்கி விடலாம். --Natkeeran 17:26, 10 பெப்ரவரி 2011 (UTC)
தமிழர் ஒரு வாய்மொழிப் பண்பாட்டைக் கொண்டிருந்தது என்று கூறுவது தவறு. அக் காலத்தில் பெரும்பான்மை ஐரோப்பியர் கூட எழுத்தறிவு அற்றே இருந்தார்கள். விழுக்காடுகள் வேறுபடலாம். பிற காரணங்களை சரியானவையே. --Natkeeran 17:35, 10 பெப்ரவரி 2011 (UTC)

மேம்படுத்த சில பரிந்துரைகள்[தொகு]

அருமையான தகவல்களைக் கொண்ட கட்டுரை. இதைச் சற்று வேறு மாதிரி ஒழுங்குபடுத்தினால் கூடப் பொருத்தமாக இருக்குமா என்று எண்ணுகிறேன். இதை நூற்றாண்டு வாரியாக ஒழுங்குபடுத்தலாமா. எ.கா

  • 16 ஆம் நூற்றாண்டு
  • அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல்
  • 17 ஆம் நூற்றாண்டு
  • இராபர்ட் தெ நோபிலி
  • சீகன்பால்க்
  • 18 ஆம் நூற்றாண்டு
  • வீரமாமுனிவர்
  • பாண்டிச்சேரி மிசன் அச்சகம்
  • கிழக்கிந்தியக் கம்பனியின் தமிழர் அச்சகங்களுக்கான தடை
  • எல்லிசும் புனித ஜார்ஜ் கல்லூரி அச்சகமும்
  • செவிவழிக் கதைகள் தமிழில் அச்சிடல்
  • மதராஸ் பள்ளிப்புத்தக சமூகம்
  • வேப்பேரி அச்சகம்
  • ஆறுமுக நாவலர்
  • தமிழ் இலக்கிய அச்சுப் பதிப்பாக்கம்
  • இசுலாமிய பதிப்பாக்கங்கள்
  • 19 ஆம் நூற்றாண்டு
  • அயோத்திதாசர், பெளத்த வெளியீடுகள்
  • 20 ஆம் நூற்றாண்டு

--Natkeeran (பேச்சு) 00:49, 12 செப்டம்பர் 2013 (UTC)