பேச்சு:தமிழர் வானியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல ஆரம்பம். ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றேன். முடிந்தால் தகவல்களைச் சேர்ப்பேன். --Natkeeran 22:34, 18 பெப்ரவரி 2007 (UTC)

இங்கு வானவியல் என்பது வானியலைக் குறிக்கிறதா? அல்லது இரண்டும் வேறா?--Kanags 09:20, 19 பெப்ரவரி 2007 (UTC)

வானியல் என்றுதான் எல்லா இடங்களிலும் பயன்படுத்தியிருக்கிறோம். அப்படியே மாற்றிவிடுகிறேன். Mayooranathan 10:03, 19 பெப்ரவரி 2007 (UTC)

குறிப்புகள்[தொகு]

வானவூர்தியும் தமிழனும். பழந்தமிழர் இலக்கியஙகளில் வானவூர்தி பற்றிய குறிப்புகள் உள்ளன. வானவூர்தி ஓட்டுபவனை வலவன் என்ற சொல்லால் புறநானூறு குறிப்பிடுகிறது. ஓட்டுனர் இல்லாத வானவூர்தி இருந்தது என்பதை "வலவன் ஏவா வானவூர்தி"[புறம்,27:8] என்ற பாடல் வரி புலப்படுத்துகிறது சிலப்பதிகாரத்தில் கன்னகி- கோவலன் வானூர்தியில் ஏறிய தகவல் உள்ளது. மணிமேகலை வான்வழிப் பயணம் செய்தாரைக் காட்டுகிறது. சீவசிந்தாமணி மயிற்பொறி விமானம் பற்றியும் அதன் செயல்திறன் பற்றியும் சொல்கிறது.பெருஙதை என்ற காப்பியம் வானூர்தியின் வடிவம், அதனை இயக்கும் முறை போன்ற குறிப்புகளை தருகிறது.


தகவல்களுக்கு நன்றி. தமிழில் அறிவியல் தகவல்கள் மிக மேலோட்டமாகவே கிடைக்கின்றன. கடல் கடந்து காடாரம் வென்றான் தமிழர் என்று கூறுகிறோம், ஆனால் அந்தக் கப்பல்கள் கட்டப்பட்ட நுட்பம் பற்றிக் கூட நூல்கள் இல்லை. போர்க்கலை பற்றி தமிழில் ஒரு மரபு நூல் இல்லை. வானூர்தித் தொழில்நுட்பம் 150 ஆண்டுகளுக்கு உட்பட்டதே. எனவே வானூர்தி விட்டது போன்றவற்றை கற்பனை இலக்கியமாகவே கருதமுடியும். அப்படிக் கற்பனை இலக்கியத்தில் இருக்கிறது என்று குறித்துக் கொள்ளலாம். --Natkeeran 04:03, 3 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழர்_வானியல்&oldid=864200" இலிருந்து மீள்விக்கப்பட்டது