பேச்சு:தமிழர் மீன்பிடிப்புத் தொழில்நுட்பம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முறைகள் தமிழரால் மட்டுமன்றி சிங்களவர், மலையாளிகள், மாலைத்தீவினர் போன்றோராலும் பயன்படுத்தப்படுகின்றன.--பாஹிம் 05:19, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

அப்படிப் பயன்படுத்தப்பட வில்லை என்று இங்கு கூறப்படவில்லை. பார்க்க சீன கூள் வலை, விசைப்படகு --Natkeeran 05:28, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
மேலும் பார்க்க: * Traditional fishing practices followed by fisher folks of Tamil Nadu - (ஆங்கில மொழியில்)

அவர்களுக்கு அது தெரியாது. நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நான் தென்னிலங்கையில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் பயன்படுத்துவதைக் காட்டலாம். நீங்கள் கரைவலை என்று குறிப்பிட்டுள்ளதை நாங்கள் பெருவலை என்கிறோம். பெயர்கள் சற்று வேறுபட்டிருக்கின்றன. அவ்வளவுதான்.--பாஹிம் 05:37, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

இதில் விவாதிக்க விரும்பவில்லை. யார் முதலில் கண்டுபிடித்தது போன்றவை இவ்வாறான மரபு நுணுக்கங்களில் சிக்கலானது. தமிழர்களே பெரும்பாலும் கடல் சார்ந்து இருந்தால், தமிழர்களே கண்டுபிடித்தார்கள் என்று கூறலாம். கரைவலை என்பது தமிழ் சொல் ஆகும். --Natkeeran 05:41, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

விவாதமல்ல, நற்கீரன். தமிழர்களே கண்டு பிடித்ததாகச் சொல்வதற்கு ஆதாரம் வேண்டும். அத்துடன் தமிழரல்லாதோரும் இதனைப் பயன்படுத்துகின்றனரே. மேலும், கரைவலை என்பது போன்று பெருவலை என்பதும் தமிழ்ச் சொல்லே. சிங்களத்தில் மாதெல் என்கின்றனர். வெலிகமையில் இரண்டு இடங்களில் பெருவலை போடப்படுகிறது.--பாஹிம் 05:44, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தமிழர்கள் இங்குள்ள எல்லாவற்றையும் கண்டுபிடித்தாக இங்கு சொல்லவில்லை. தமிழ்க் கணிமை என்றால் அதில் நாம் கணினியைக் கண்டுபிடித்தோம் என்று அர்த்தம் இல்லை. --Natkeeran 05:46, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
மீன்பிடிக்கும் தொழில் நுட்பம் குறிப்பிட்ட நிலப்பரப்பை பொறுத்து ஒத்தத் தன்மைகளைக் கொண்டிருந்தாலும், அவற்றில் ஒவ்வொரு இனம்சார்ந்த வேறுபாடுகளையும் கொண்டிருக்கும். சில தனித்துவமான முறைகளையும் கொண்டிருக்கும். அந்த வகையில் தமிழர் கையாண்ட மீன் பிடி உத்திகள் தமிழர் மீன்பிடிப்புத் தொழில்நுட்பம் என்றே பொருள்படும். அதற்கு மற்றைய இனத்தவர் மீன்பிடிப்புத் தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கவில்லை என்பது பொருளல்ல. அவர்கள் சில மாறுப்பட்ட நுட்பங்களைக் கொண்டிருக்கலாம்; ஒத்ததன்மைகளை கொண்டும் இருக்கலாம். எனக்கு தெரிய வடக்கில் இன்னொரு மீன்பிடி முறையை நான் நேரில் கண்டுள்ளேன். ஒருவித கொடியை நச்சி (கொடியின் பெயரை மறந்துவிட்டேன்) அதன் சாற்றை பிழிந்தெடுத்து நீரில் ஊற்றிவிடுவர், அந்த சாறு பரவும் நீர்பரப்பில் உள்ள மீன்கள் எல்லாம் மயங்கி தள்ளாட ஆரம்பித்துவிடும். அதனை எளிதாக பிடித்து சேகரிப்பர். இவை அனேகமாக ஒரு நீர்பரப்பை மறித்தே செய்வர். இதுவும் ஒருவகை நுட்பம் தான். இவ்வாறான நுட்பங்கள் தாம் வாழும் சூழலுக்கு ஏற்ப கிடைக்கும் பொருற்களைக் கொண்டு உருவாகுபவை. இவ்வாறான நுட்பம் (அந்த கொடி) இல்லாத இடத்தில் அல்லது இவ்வாறு பயன்படுத்தும் முறை தெரியாதோர் சூழ்நிலையில் தோன்றியிருக்க முடியாது. --219.77.144.37 05:57, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
பாஹிம், எப்படி இக்கட்டுரையில் உள்ளவற்றே “தமிழர்களே கண்டுபிடித்தார்கள்” என்று சொல்வதாகக் கொள்கிறீர்கள். தமிழர் மட்டுமே கண்டுபிடித்த தொழில்நுட்பம், தமிழர்களே முதன் முதலில் கண்டுபிடித்த தொழில்நுட்பம் என்று கட்டுரையில் எங்கு உள்ளது?. கட்டுரை வெகு தெளிவாக “தமிழர் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை”ப் பற்றிக் கூறுகிறது. இக்கட்டுரை “தமிழர் மீன்பிடித் தொழில்நுட்பங்களை” பற்றியானது. இங்கு எதற்காக “சிங்களவர்” “முஸ்லிம்” தொழில்நுட்பம் பற்றி பேச வேண்டும்?. பொதுவான “மீனபிடித் தொழில்நுட்ப” கட்டுரையன்று. --சோடாபாட்டில்உரையாடுக 06:08, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

சோடாபாட்டில், //தமிழர்களே கண்டுபிடித்தார்கள் என்று கூறலாம்// என்ற மேலேயுள்ள நற்கீரனின் கூற்றைத்தான் நான் அப்படிக் குறிப்பிட்டேன்.--பாஹிம் 06:31, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தெளிவு படுத்தியமைக்கு நன்றி. தங்கள் கூற்று கட்டுரை பற்றியானதென்று எண்ணியிருந்தேன். --சோடாபாட்டில்உரையாடுக 06:37, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மீன்பிடிப்புத் தொழில்நுட்பம் என்பதைவிட மீன்பிடித் தொழிநுட்பம் என்றே வழங்கப்படுகிறது. இலங்கையில் தொழிநுட்பம் என்பதைத் தமிழகத்தில் தொழில்நுட்பம் என்கின்றனர்.--பாஹிம் 06:34, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]