பேச்சு:தடுப்பூசி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரையின் மிகப் பொருத்தமான தலைப்பு தடுப்பு மருந்தேற்றம் என்றே இருக்கலாம். காரணம் ஊசிகள் மட்டுமே தடுப்பு மருந்தில் இல்லை. எடுத்துக்காட்டாக போலியோ சொட்டு மருந்து. தடுப்பு மருந்தேற்றம் பொருத்தமாக இல்லையெனில், வேறு பொருத்தமான தலைப்பைத் தெரிவு செய்யலாம். தடுப்பூசித் தலைப்பில் ஒரு வழிமாற்றை விட்டுச் செல்லலாம். இந்தக் கட்டுரை தடுப்பு மருந்தேற்றம் கட்டுரைக்கு வழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. வழிமாற்றி இடப்பட்டிருந்த வார்ப்புரு தற்போது நீக்கப்பட்டு உள்ளடக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் கட்டுரை இணைப்பு வார்ப்புருவைத் தற்போதைக்கு இட்டுள்ளேன். மாற்றங்கள் தேவை. அத்துடன் இந்தக் கட்டுரையின் புதிய உள்ளடக்கத்தில் விக்கியாக்கமும் தேவைப்படுகிறது. பல சொற்றொடர்கள் புரியவில்லை. --கலை (பேச்சு) 08:16, 23 சூன் 2017 (UTC)[பதிலளி]

இல்லை. தடுப்பு மருந்தேற்றத்தின் ஒரு வகையே தடுப்பூசி. நீங்கள் சொல்வது போல் போலியோ போன்ற சொட்டு மருந்து முறையும் உண்டு, தடுப்பூசி முறையும் உண்டு. இரண்டும் வெவ்வேறு. ஆகையால், தடுப்பூசிக்கு தனியே பக்கம் வேண்டும் என கருதுகிறேன். Cyarenkatnikh (பேச்சு) 12:53, 4 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
Cyarenkatnikh! நீங்கள் கூறுவதுபோல் தடுப்பூசி, தடுப்பு மருந்தேற்றத்தின் ஒரு வகை என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். அதேவேளை இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்தின் பெரும்பகுதி தடுப்பூசிக்கான தனியான தகவல்களாக அல்லாமல், தடுப்பு மருந்தேற்றத்திற்கான பொதுவான தகவல்களையே கொண்டுள்ளது. எனவே அவற்றை மாற்றியமைத்து, தடுப்பூசி என்ற தனிப்பட்ட தலைப்புக்கான கட்டுரையாக்க உதவுங்கள். அத்துடன், அப்படி இதில் குறிப்பிடத்தக்க அளவு தகவல்கள் இருப்பின் தனிக்கட்டுரையாகவே வைத்திருக்கலாம். மேலும், இந்தக் கட்டுரையை எந்த ஆங்கிலக் கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கலாம் என்பதனையும் கூறுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 13:00, 27 சனவரி 2018 (UTC)[பதிலளி]
இன்றுதான் இந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்தேன். இந்தக் கட்டுரையிலுள்ள பல சொற்றொடர்கள் சரியாகப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இல்லை. பல அர்த்தமற்ற சொற்றொடர்களைக் கொண்டுள்ளன. தானியங்கி மொழிபெயர்ப்பாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். விக்கியாக்கமும் இல்லை. எனவே இந்தக் கட்டுரையை நீக்கலாம் என நினைக்கிறேன். --கலை (பேச்சு) 13:21, 29 சனவரி 2018 (UTC)[பதிலளி]

இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் பொருள்ளற்ற சொற்றொடர்களைக் கொண்டிருப்பதுடன், கலைக்களஞ்சிய நடையில் இல்லாமையால் உள்ளடக்கத்தை நீக்கி, மீண்டும் தடுப்பு மருந்தேற்றம் கட்டுரைக்கு வழிமாற்றம் செய்கிறேன். தடுப்பூசி என்பதற்குத் தனியாகக் கட்டுரையாக்க விரும்பின், அதற்கான சரியான தகவல்களை இணைத்து உருவாக்கலாம். நன்றி.--கலை (பேச்சு) 20:38, 5 பெப்ரவரி 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தடுப்பூசி&oldid=2480377" இலிருந்து மீள்விக்கப்பட்டது