உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்திய/தமிழக அளவில் மிகப்பெரிய பள்ளி என்பதற்கு தகுந்த புற ஆதாரங்கள் வேண்டும் (செய்தித்தாள்கள்/அரசு அறிவிப்பு போன்றவை). >7000 மாணவிகள் என்பதை மட்டும் கொண்டு மிகப்பெரியது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இது போன்ற தகவல்களுக்கு ஆதாரம் இல்லாமல் ஊகத்தில் பேரில் விக்கியில் இடுவதில்லை என்பதால் தற்காலிகமாக அவ்வரியை நீக்கியுள்ளேன். புறச்சான்றுடன் அதை இணைக்கலாம்--சோடாபாட்டில்உரையாடுக 16:00, 7 மார்ச் 2011 (UTC)

மாணவர் தொகை அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பள்ளிக்கூடம் லக்னோவில் உள்ள மாநகர மொண்டசோரிப் பாடசாலை ஆகும். அங்கு 2008 ஆம் ஆண்டில் 32114 மாணவர்கள் இருந்ததாக கின்னஸ் உலக சாதனை நிறுவனம் பதிவு செய்துள்ளது. எனினும், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் பற்றித் தேடிப் பார்த்ததில் இதுவரை எதுவும் தட்டுப்படவில்லை.--பாஹிம் 04:31, 6 ஏப்ரல் 2011 (UTC)