பேச்சு:சுன் இ சியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவர் பெயரின் உச்செரிப்பு சுன் இ சியன் ஆ? அல்லது ஷியன் ஆ?--Avedeus 06:13, 30 ஆகஸ்ட் 2010 (UTC)

இவர் பெயரைத் தமிழில் ˜சுன் இ ˜சியன் என்று ஒலிபெயர்க்க வேண்டும். ஒலித்திரிபுக் குறிகள் வேண்டாம் எனில் சுன் இ சியன் என்று எழுதலாம். ˜சுன் = பேரன்; இ= சிறத்த, ஒப்பற்ற; ˜சியன் = அழிவில்லா அமரத்தன்மை. எனவே இவர் பெயர் ஒப்பற்ற அழிவில்லாமை உடைய பேரன் என்னும் பொருள் கொண்டது. --செல்வா 17:15, 1 ஜூன் 2008 (UTC)


நவீனம் சமஸ்கிரதமா???புதிய - new, நவீன - modern ???[தொகு]

புதிய - new, நவீன - modern ??? --Natkeeran 21:26, 1 ஜூன் 2008 (UTC)

நவீன என்றால் சமசுகிருதத்தில் புதிய என்று பொருள். Modern, contemporary என்பது தற்காலம். தற்கால வழக்கம் என்றால் modern practice என்று பொருள்படும். --செல்வா 23:32, 1 ஜூன் 2008 (UTC)

I've always heard his name written and pronounced according to the Cantonese pronunciation (Sun Yat-sen, சுன் யாட்-சென்).... I don't know how it's usually written in Tamil, just wondering why the Mandarin pronunciation was chosen for the article's title? "Sun Yi-xian" in Mandarin and "Sun Yat-sen" in Cantonese both mean the same thing and are represented with the same Chinese characters, but Mandarin and Cantonese are two different varieties of Chinese so the pronunciation is different. I'm not saying the title should be changed -- either pronunciation is valid -- but I'm just wondering why this one was chosen and not the other one. Werklorum 21:44, 1 ஜூன் 2008 (UTC)

பொதுவாக மண்டரினில் இருப்பது நல்லது என்று தோன்றியது, மேலும் அதுவே பெரும்பானமையான மொழியும் கூட. ஆனால் அதுவல்ல கரணியம் (காரணம்) என் பரிந்துரைக்கு. கான்ட்டொனீசு ஒலிப்பில் எப்படி சொல்வார்கள் என்று எனக்குத் தெரியாது. சுன் யாட் சென் என்று இருக்க வேண்டுமென்றாலும் எனக்கு ஒப்புதலே. இரண்டு ஒலிப்புகளையும் கட்டுரையில் சுட்டினாலும் நல்லது. மண்டரின் மொழியில் இவருடைய பெயர் தமிழில் கன்னியப்பன் என்னும் சொல்லை மிக ஒத்தது. கன்னி என்றால் அழியாதது என்னும் பொருள் ˜சியன் என்பதன் பொருளும் மண்டரினில் "அழியாதது, அமரத்தன்மை உடையது" என்று பொருள் தருவது. அப்பன் என்றால் உயர்ந்தவன் (தந்தை என்னும் பொருளும் இப்படி வந்ததே), அதாவது இ, ˜சுன் இ என்பதும் ஏறத்தாழ இதே பொருள் தருவது. ˜சுன் இ என்றால் உயர்ந்த பேரன் (அல்லது உயர்ந்த மகன், உயர்ந்த ஒருவன்) என்று பொருள் படும். ஆகவே கன்னியப்பன் என்னும் பெயர் தரும் பொருளே ˜சுன் இ ˜சியன் என்னும் பெயரும் தரும் பொருள் (ஏறத்தாழ).--செல்வா 23:32, 1 ஜூன் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுன்_இ_சியன்&oldid=585328" இருந்து மீள்விக்கப்பட்டது