பேச்சு:சில்லாலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதல் பங்குத்தந்தை[தொகு]

//சில்லையூரின் முதல் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய யோசப் வாஸ் அடிகளார் ஆவார்.//

என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆதாரம் ஏதும் உள்ளதா?--டெரன்ஸ் \பேச்சு 11:53, 15 ஜனவரி 2007 (UTC)

sillalai.com என்ற இணையத்தளத்தில் இருந்தே தகவலைப் பெற்றேன்.--Kanags 12:38, 15 ஜனவரி 2007 (UTC)
கனக்ஸ் நீங்கள் தகவல் பெற்றத் தளம் நடு நிலமையை மீறியே இந்த வசனத்தை சேர்த்துள்ளாகள். உங்களுக்கு தெரியுமோ தெரியாது... யோசப் வாஸ் அவர்கள் இந்தியாவின் கர்நாடாகத்தின் கோவாவில் இருந்து இலங்கைக்க் வந்த போது இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கத்தோலிக்கருக்கு வணக்கம் செய்யவிடாது ஒல்லாந்தர் தடை விதித்திருந்தனர். அவரது வருகையின் போது சில்லாலையில் ஏற்கனவே 'ஆலயம்' ஒன்று காணப்பட்டது. அதில் மூப்பர் ஒருவர் மூலம் அவர்கள் இரகசிய வழிபாடுகள் செய்து வந்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து யோசப் வாஸ் அடிகளை சில்லாலை அனுப்பியதற்கு காரணமே அங்கு கத்தோலிக்கர் பெருமளவில் இருந்தமையே ஆகும். (ஆலயம் ஒன்று இருந்தது+அதிக கத்தோலிக்கர் இருந்தனர்="ஏற்கனவே அங்கு பங்குத்தந்தை ஒருவர் இருந்தார்" ) பின் வரும் வசனத்தை சேர்க்கலாம் // யோசப் வாஸ் அடிகள் யாழ்ப்பாணத்தில் இருந்த போது சில்லாலையில் தங்கியிருந்தே தனது சமயப்பணிகளை செய்தார்.//

டெரென்ஸ், //சில்லையூரின் முதல் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய யோசப் வாஸ் அடிகளார் ஆவார்// என்ற வரிகளை இப்போதைக்கு எடுத்து விடுகிறேன்.--Kanags 14:13, 18 ஜனவரி 2007 (UTC)

அன்பின் டெரன்ஸ் அவர்கட்கு. உங்கள் தகவலுக்கு நன்றி. நீங்கள் கூறிய தகவலை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதை அறிய ஆவலாய் உள்ளேன். இதன் மூலம் நாம் வரலாற்று பின்னணியை அறிவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையுமென நான் நம்புகிறேன். சில்லாலையில் மூப்பர் ஒருவர் இருந்தார் என்பதற்கு எங்களிடம் சான்றுகள் இருக்கின்றன, ஆனால் பங்குத்தந்தை இருந்தமைக்கான சான்றுகள் எங்களிடமில்லை. உங்கள் தகவலை எதிர்பார்க்கிறோம். -- அலன் 08:42, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சில்லாலை&oldid=928158" இலிருந்து மீள்விக்கப்பட்டது