பேச்சு:சிறுகருவி

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்புத் தமிழ் இல்லை. --Natkeeran 05:23, 2 சனவரி 2011 (UTC)Reply[பதில் அளி]

இதனை தமிழில் கொக்கட்டை என்று சொல்லலாம். --இராச்குமார் (பேச்சு) 10:35, 29 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]
Gadget என்பது பொதுவாக கையடகக்கமான சிறு கருவியைக் குறித்தஹ்டு. ஆக்ஃசுபோர்டு அகரமுதலி, "Used as an indefinite or general name for: a comparatively small fitting, contrivance, or piece of mechanism." என்கிறது. பின்னர் மென்பொருள் குற்றுதவிக் கருவிகளுக்கும் இது நீட்டிக்கப்பெற்றது. எனவே குறுங்கருவி என்று சொல்லலாம். குறுஞ்செய்தி என்பது போல, குறுங்கருவி. கருவி என்பது பருப்பொருளாக இருக்க வேன்டும் என்று பொருள் இல்லை. ஒரு கருத்தைச் செயல்படுத்த உதவும் ஒன்றுக்குக் கருவி என்று பெயர். இதே போல உளி என்பதும் கருவியின் பொதுப்பெயர். (செதுக்கும் கருவிக்கு மட்டும் உளி என்று சிலர் பொருள்கொள்வர், அது சரியன்று). (இழைப்புளி, திருப்புளி, திருகுளி, என்று பல வகை உண்டு). சிறுகாலை (வைகறை) என்பது போல சிறுகருவி என்றும் சொல்லலாம். --செல்வா (பேச்சு) 23:18, 29 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]
குறுங்கருவி நன்றாகவுள்ளது. ஆனால் இக்கட்டுரையில் gadget என்பது ஒரு பெட்டிக்குள் நிரலாக்கப்பட்ட வலைப்பயன்பாடாகத் தெரிகிறதே! இதற்கு குறுங்கருவி என்பது பொருந்துமா? --இராச்குமார் (பேச்சு) 14:37, 30 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிறுகருவி&oldid=1151661" இருந்து மீள்விக்கப்பட்டது