பேச்சு:சிந்துவெளி நாகரிகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்துவெளி நாகரிகம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

I observed that across many articles in wikipedia the words நாகரீகம் and நாகரிகம் are changed interchangingly. But I remember reading in my tenth standard tamil book ;-) that நாகரிகம் is the right word. Contributors may take note while writing articles in future.--ரவி (பேச்சு) 11:35, 3 மே 2005 (UTC)[பதிலளி]

நாகரிகம் சரியான சொல். Mayooranathan 18:10, 3 மே 2005 (UTC)[பதிலளி]
ஆம். -- Sundar 04:21, 4 மே 2005 (UTC)[பதிலளி]


//இப்போதைய கருத்து என்னவென்றால், சி.ச.குறியீடுகள் ஒரு மொழியின் எழத்துரு அல்ல என்பதாகும். புகழ்பெற்ற இந்தாலஜிஸ்ட் விட்சல், ஸ்டீவ் பார்மர், ரிசார்ட் ஸ்ப்ரோட் என்ற மூவர் எழுதிய "சிந்துசமவெளி லிபியின் குலைவு- எழுதிபடித்த ஹரப்ப நாகரிகம் என்ற கட்டுக்கதை" என்ற கட்டு்ரையில்,

அ) சி.ச.நாட்களில் கையெத்துப் பிரதி இல்லை ஆ) 600 ஆண்டு புழக்கத்துப் பிறகும் சி.ச.குறியீடுகள் ஒரு மொழியை எழுதும் திசையில் செல்லவில்லை இ) சி.ச.குறியீடுகள் பேச்சையும் குறிப்பிடவில்லை, ஞாபகத்திற்கும் உதவியாகப் பயன்படவில்லை -ஆனால் சமூக, அரசியல் யுக்திகளைக் கொண்டிருக்கலாம்

என்று வாதாடப்பட்டிருக்கிறது//

i remove this section for now can some one varify the claims by 161.12.7.4 then we can add it back--டெரன்ஸ் \பேச்சு 15:32, 23 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


Trengarasu - please go here http://www.harappa.com/script/scriptres.html and go on to http://www.safarmer.com/downloads/ from where you can get this article and you can download the article by the three authors mentioned about the collapse of the 'literate Indus Valley'. I included this bit after research.- Vijay

இப்போதைய கருத்து என்னவென்றால் என்று ஸ்டீவ் பார்மர் முதலானோரின் கருத்தை ஏதோ முடிந்த முடிபுபோல் எழுதியிருப்பது சரியல்ல. பல்வேறு விதமான கருத்துக்களிடையே இதுவும் புதிதாக வந்துள்ள ஒரு கருத்துத் தான். பிரபல சிந்துவெளி எழுத்துக்கள் தொடர்பான ஆய்வாளரான அஸ்கோ பர்போலா உட்படப் பலர் மேற்படி முடிவின் பலவீனம் குறித்துச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். எனவே தற்போதைய சூழ்நிலையில் இதை ஒரு முடிந்த முடிபுபோல் எழுதுவது சாத்தியமில்லை. இத்தகைய ஒரு கருத்தும் நிலவுவது பற்றி ஏற்கெனவே கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், பாமர் முதலியோரின் கட்டுரையும் வெளியிணைப்புக்கள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. Mayooranathan 17:34, 23 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

மயூரநாதன், ஸ்டீவ் பார்மர்/விட்சல் கட்டுரை கடந்த 2 வருடஙளுக்குள் வந்தது. அதனால்தான் இப்போதைய கருத்து என்னவென்றால்' என்றெழிதினேன். அதை யாரும் மறுப்பு சொல்ல வில்லை மேலும் சிச குறியீடுகளை யாரும் இன்று வரை அடையாளம் காணவில்லை. பர்போலாஇன் கருத்து ஒரு ஸ்பெகுலேஷனே - அதாவது ஒரு புனைக்கருத்தே. - விஜய்

சிந்து வெளிக் குறியீடுகளைப் பொறுத்தவரை இது வரை வெளி வந்துள்ள எல்லா ஆய்வுகளிலுமே ஸ்பெகுலேஷன் இருக்கத்தான் செய்கின்றது. பாமர் முதலானவர்களுடைய ஆய்வும் இதற்கு விதி விலக்கு அல்ல. சிந்து வெளிக் குறியீடுகளை எவரும் அடையாளம் காணவில்லை என்பதற்காகப் பாமர் முதலியோரின் கருத்துச் சரியென்று பொருள்படாது. சிந்து வெளிக் குறியீடுகளை அடையாளம் காண முடியாமைக்குப் பல காரணங்கள் உள்ளன இது பற்றி ஏராளமானவர்கள் எழுதியுள்ளார்கள். இணையத்திலும் பல கட்டுரைகள் உள்ளன. இதற்கு யாரும் மறுப்புச் சொல்லவில்லை என்பதும் சரியல்ல. இங்கே பார்க்கவும். Mayooranathan 05:59, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
நான் விட்சல்/பார்மர் கருத்துதான் சரி என்ற அளவில் எழுதவில்லை. அது கடைசியாக வந்த ஆய்வு; மேலும் விட்சல் தற்கால இந்தாலஜிஸ்ட்களின் முதன்மையானவர் என்று «றியப்படுகிரார்; அதனால் அவர் ஆய்வுக்கு ஒரு அதிகாரம் உண்டு. அதனால்தான் படிக்கும் மக்களுக்கு, இந்த ஆய்வும் தெரியப் படுத்த வேண்டும். - விஜய்

"அண்மைக் காலத்தில், வட இந்திய ஆய்வாளர்கள் பலர், சிந்துவெளி மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழியே என நிறுவ முயன்று வருகிறார்கள்."

இப்படி மொழுக்காக "வட இந்திய ஆய்வாளர்கள் பலர்" , "இந்தோ-ஐரோப்பிய மொழியே" என எழுதினால், அது சாயல் அற்ற எடை ஆகாது. எல்லா "வட இந்திய ஆய்வாளர்கள்" உம் அப்படி சொல்கிரார்களா , இல்லையே. ஒரு சிலரே அப்படி எழுதுகிரார்கள். சிச மொழி சமஸ்கிருதத்திற்கு தொடர்பானது என்பதை சில தென் இந்திய ஆய்வாளர்களும் சொல்கிரார்கள் - உதாரணம் ராஜாராம், கல்யாணராமன். மேலும் சிச-சமஸ்கிருத விசிரிகள் ""இந்தோ-ஐரோப்பிய மொழி" என்ற சொல்லை உபயோகிப்பதில்லை. அதனால், சாய்வற்ற எடைபோடுதலை கருதி, இந்த பாராவை அகற்ற வேண்டும்.

"அண்மைக் காலத்தில், வட இந்திய ஆய்வாளர்கள் பலர், சிந்துவெளி மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழியே என நிறுவ முயன்று வருகிறார்கள்.. சிறப்பாக, இந்து தேசியவாதிகள் பலர் இதன் மீது தீவிர கருத்துக்களைக் கொண்டிருப்பதனால், இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், அரசியல் பின்னணி கொண்டவையாகவும், உணர்வு சார்ந்தவைவையாகவும் மாறிவருகின்றன "

விஜய், விட்சல் போன்றவர்கள் புகழ்பெற்ற இந்தியவியலாளர்களாக இருக்கலாம். சிந்து வெளி எழுத்துக்கள் பற்றிய அவர்களுடைய அறிவுபற்றி நான் முன்னர் தந்துள்ள இணைப்பினூடாகச் சென்று அக் கட்டுரையில் பார்க்கவும். (பக்கம் 8). இணையத்துக்குச் சென்று இந்துத்துவ தளங்களைப் பார்க்கவும் ஒரு முறையான ஆய்வாக இருக்கவேண்டிய விடயத்தை எவ்வாறு அரசியல் ஆக்குகிறார்கள் என்று அறியமுடியும். ஆங்கில விக்கிபீடியாவில்கூட நல்ல கட்டுரைகளாக இருந்தவற்றைக் கூடக் குழப்பி விட்டுள்ளார்கள். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல பலரும் இதே கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஒருவேளை வட இந்திய ஆய்வாளர்கள் என்று குறிப்பிடாமல் விட்டிருக்கலாம். ஆனால் அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் உண்மையே. பிழைகளை எடுத்துக்காட்டாமல் விடுவது நடுநிலைமை ஆகாது. Mayooranathan 14:43, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]