உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சிதம்பர புராணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதிப்பிற்குரியீர்

வணக்கம். எனக்கு ஐயம். சிதம்பர புராணம் திருமலை நாதர் அவர்களால் 1508 ஆம் ஆண்டு எழுதப்பட்டது என்று கூறியுள்ளீர்கள். ஆனால் சிதம்பர புராணம் பாயிரப் பகுதியில் நூல் செய்தோன் என்று பாடுகிறார். அதில் பரஞ்சோதி முனிவன் என்னும் அடியன் சிதம்பரபுராணம் சொல்லத் தொடங்கினேன் என்று குறிப்பிடுகிறார். இந்த பாடல் சிதம்பர புராணம் எழுதிய ஓலை சுவடியிலும் உள்ளது. இந்த ஓலைச் சுவடியையும் படித்திருக்கேன். நீங்கள் எங்கிருந்து இந்த தகவலை பெற்றீர்கள் என்பதை தெரியப் படுத்தவும்.

ஜெயவித்யா -

மு  அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் உள்ள கருத்தினை எழுதியுள்ளேன். இப்போது நான் கனடா வான்கூவர் நகரில் உள்ளேன். சென்னை திரும்ப இன்னும் மூன்று மாதங்கள் ஆகும். சென்ற பின்னர் சரி பார்க்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 11:28, 12 சூலை 2017 (UTC)[பதிலளி]
ஜெயவித்யா அவர்களின் நாகரிகமான உரையாடல் - பாராட்டுகள் --Sengai Podhuvan (பேச்சு) 02:16, 13 சூலை 2017 (UTC)[பதிலளி]
படிமம்:சிதம்பர புராணம்
சிதம்பர புராணம்

வேண்டுகோள்

[தொகு]

பாயிரப் பாடலை முழுவதுமாக இங்குப் பதிவேற்றுங்கள்.
தங்கள் கருத்து சரியாயின் நானே திருத்திவிடுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 02:20, 13 சூலை 2017 (UTC)--Sengai Podhuvan (பேச்சு) 02:20, 13 சூலை 2017 (UTC)[பதிலளி]

முற்றுமுணர் மெய்கண்ட சந்ததிக்கோர் தீபமென முதன்மை கொண்ட
கொற்றவன்றன் குடிமருவு குலவு முமா பதிசிவன் பொற்கோயிலுண்மை
சொற்ற புரானமுமிருக்கப் பின்னுமொரு வகையானுஞ் சொல்வான் புக்கே
மற்றவன்றன் றிருவடியின் வழி வந்தோர்க் கடியன்எனும் வழக்கான் மன்னோ.

இந்த பாடல் சிதம்பர புராணம் இது சைவ பரஞ்சோதி மாமுனிவர் அருளி செய்த மூலமும் துரை மங்கலம் சிவப்பிரகாச அய்யர் அவர்களால் பொழிப்புரை செய்து அருணாச்சல முதலியாரால் பார்வையிடப்பட்டு மாணிக்க முதலியார் அவர்களது மனோன்மணி விலாச அச்சுக் கூடத்திற் பதிப்பிக்க பட்ட நூலில் உள்ளது .

ஓலைச் சுவடியிலும் இப்பாடல் உள்ளது . இப்பாடலின் உரையில் பரஞ்சோதி முனி என்னும் அடியன் சிதம்பர புராணம் சொல்லத் தொடங்கினேன் என்று உள்ளது. இந்நூலின் கடைசியில்

அருமறையின் சிரத்தொளியாய் ஆனந்த நாட்டியஞ் செய்ய மரர்க் கன்பாய்
திருவருள் பெற்றுயர் சைவ புராணத்திற் சிதம்பரத்தின் றிகழுமேன்மை
பொருடெரிய தமிழ் விருத்த யாப்பதனான வரசங்கள் பொழிய மன்னும்
திருமலைநாதன் புதல்வன் பரஞ்சோதி மாமுனிவன் செப்பினானே

என்ற பாடல் உள்ளது. ஆனால் இப்பாடல் ஓலைச் சுவடியில் இல்லை. முனைவர். ந . ஜெயவித்யா

தற்பொழுது இதை தான் ஓலைச் சுவடியில் படித்து ஆராய்கிறேன் . இந்த ஓலைச்சுவடி ஜெர்மெனியில் உள்ளது. நான் தற்பொழுது ஜெர்மனியில் தான் அந்த ஓலைச் சுவடி படிக்கும் பணியினை செய்து கொண்டிருக்கிறேன். அதனால் தான் இந்த ஐயத்தை கேட்டேன். தவறாக என்ன வேண்டாம். தெரிந்து கொள்ள தான் கேட்டேன். நன்றி . முனைவர். ந . ஜெயவித்யா

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிதம்பர_புராணம்&oldid=2388477" இலிருந்து மீள்விக்கப்பட்டது