பேச்சு:சாம்பல் தலை வானம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

acrobatics என்பதற்கு கலிநடம் என்று ஒரு சொல் உண்டு. தமிழ் லெக்ஃசிகன் இதனைக் குறிப்பிடுகின்றது.


கலிநடம் kali-naṭam
, n. prob. கலி² +. Acrobatic performance; கழாய்க்கூத்து. (சிலப். 3, 12, உரை.)


கலி என்னும் சொல்லின் பல பொருள்களுள் ஒலி ->ஒலி மிக்கது, இரைச்சல் நிறைந்தது என்னும் பொருள் அடிப்படையானது. இதில் இருந்தே ஆர்கலி = கடல் போன்ற சொற்கள் உருவாயின. கல், கலித்தல் என்றால் ஒலி எழுப்புதல். ஆனால் இங்கே கலி என்பது விரைவாக, விரைதல் என்னும் பொருளும் கொள்ளும் (தமிழ் லெக்ஃசிகனில் பக் 781 ஐப் பார்க்கவும். To be quick, swift என்னும் பொருள் உண்டு); விரைந்து செல்லும் பொழுது ஒலி எழுப்புவதும் காரணமாக இருக்கலாம். கலி என்றால் வலுவான என்றும் பொருள் உண்டு. விரைந்து வீழ்ந்து எழுவதால், கலிநடம் என்பது பொருத்தமான பெயர். நல்ல சொல்லாட்சி பரிதிமதி.--செல்வா 19:00, 27 மே 2009 (UTC)