உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சற்றம் இல்ல விதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேள்வி: இவ் விதிமுறையின் கீழ் நடைபெறும் கருத்தரங்கொன்றில் பேச்சாளரின் பெயர் பகிரங்கமாக அறிவிக்கபடலாமா? பதில்: ஆம், கருத்தரங்கில் சொல்லப்படுகின்ற விடயம் அப் பேச்சாளருக்குப் பிறிதொரு காலத்தில் ஆபத்தாக வந்துவிடப்போவதில்லை என்பதை உறுதிசெய்வது என்ற இவ் விதியின் ஆத்மவுள்ளடக்கத்தினைப் புரிந்துகொண்டிருப்பது மிகமுக்கியம். இப்புரிதலுடன், பேச்சாளரின் பெயர் கருத்தரங்கில் பிரஸ்தாபிக்கப்படலாம். உதாரணமாக ஒரு நிகழ்வில் கருத்துரை வழங்கவிருக்கும் பேச்சாளரின் பெயர் நிகழ்வின் பிரச்சார நோக்கத்திற்காகப் பகிரங்கமாக அறிவிக்கப்படலாம். அதன்பின்னர் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களின் சுருக்கமான தொகுப்புரை வழங்கப்படலாம். ஆனால் அச் சுருக்கத் தொகுப்புரை யார் என்ன சொன்னார்கள் என்ற விபரங்களை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ கொண்டிருக்கக்கூடாது.

கேள்வி: ஊடக அறிவிப்புக்கள் " சற்றம் இல்ல விதிமுறை" யின் கீழ் நடைபெற வேண்டும் என்று அறிவிக்கப்பட கருத்தரங்கின் செய்திஅறிக்கையினை face book, twitter போன்ற இணைய சமூக வலைபின்னல்களில் நான் வெளியிடலாமா? பதில்: face book, twitter போன்ற இணைய சமூக வலைபின்னல்களில் தாரளமாக செய்திஅறிக்கை வெளியிடப்படலாம். ஆனால் கருத்தரங்கில் சொல்லப்பட்ட விடயங்களைக் கொண்டிருக்கவேண்டுமே தவிர கருத்துரை வழங்கிய பேச்சாளர்களின் பெயர்களையோ அல்லது கலந்து கொண்டவர்களின் பெயர்களையோ அவ்வறிக்கை நேரடியாகவோ மறைமுகமாகவோ கொண்டிருக்கக்கூடாது.

கேள்வி: சற்றம் இல்ல விதி யாரால் எங்கே அதிகம் கடைப்பிடிக்கப்படுகின்றது? பதில்: சர்வதேச ரீதியாக இது எல்லாவகைக் கருத்தரங்குகளிலும் தனிமனிதர்களாலும் நிறுவனங்களாலும் கடைப்பிடிக்கப்பபடுகின்றது, அரச, நிர்வாக, சமூக, தொழில்துறைசார்ந்த , பல்கலைக்கழக, ஊடக, புத்திஜீவித மற்றும் பல அமைப்புக்களால் இவ்விதி பெருமளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. தகவல் தொழிநுட்ப மற்றும் கருத்துப் பரிவர்த்தனை உலகில் இவ்விதி மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகின்றது.

கேள்வி: பதிவுசெய்து பங்கேற்கும் பல கருத்தரங்குகளில் பங்குகொள்வோரின் பெயர்பட்டியல் கையளிக்கப்படுவதுண்டு. கருத்தரங்கில் பங்கேற்பவர்களின் பெயர்ப்பட்டியல் பொதுவில் வெளியிடப்படலாமா? பதில்: கருத்தரங்கில் பங்கேற்பவர்களுக்கிடையில் மட்டுமே மேற்படி பட்டியல் பரவலடையலாம். அதற்கப்பால் விநியோகிக்கப்படுவதில்லை.

கேள்வி: இவ் விதி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது? பதில்: சற்றம் இல்ல விதி என்பது ஒரு பண்பாகவே, எழுதாவிதியாகவே கடைபிடிக்கப்படுகின்றது. கருத்தரங்கில் பங்கேற்கும் தனிநபர் ஒருவர் இவ்விதியை மீறி நடந்தால் எதிர்காலத்தில் ஒழுங்குசெய்யப்படும் இது போன்ற கருத்தரங்கங்களுக்கு அவரை அழைக்காது விடலாம்.

கேள்வி: சற்றம் இல்ல விதி மாற்றப்படக்கூடாத ஒன்றாக இருந்து வருகின்றதா அல்லது காலத்திற்கு ஏற்ற வகையில் இது மாற்றப்பட்டிருகின்றதா? பதில்: சற்றம் இல்ல விதி முதலில் 1927ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1992, 2002 ஆகிய ஆண்டுகளில் மீள்வரைவு செய்யப்பட்டுள்ளது.

கேள்வி: பெரிய பிரித்தானியாவில் இருக்கும் சற்றம் இல்லத்தில் நடைபெறும் கருத்தரங்குகள், கூட்டங்கள் அனைத்திலும் இந்த விதி கடைபிடிக்கப்படுகின்றதா? பதில்: சற்றம் இல்லத்தில் நடைபெறும் அதிகமான கருத்தரங்குகள், கூட்டங்களில் இவ்விதி கடைப்பிடிக்கப்படுகின்றது. முக்கியமாக ஆய்வாளர்களின் சந்திப்பு மற்றும் அரசியல் ரீதியில் மிகவும் எளிதில் எரிச்சலூட்டக்கூடிய, மென்னுணர்வான, பிறர் மனதைக் காயப்படுத்தக்கூடிய விடயங்கள் பேசப்படும் கருத்தரங்குகள், கூட்டங்கள் போன்றவற்றில் இவ்விதி கடைப்பிடிக்கப்படுகின்றது.

கேள்வி: நடைபெறுகின்ற கருத்தரங்கு அல்லது கூட்டம் சற்றம் இல்ல விதிமுறையில் நடத்தப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே அதில் கலந்து கொள்ளும் தனிநபர் ஒருவர் இவ்விதியைக் கடைப்பிடிக்கப்பட வேண்டுமா? பதில்: கருத்தரங்கு, கூட்டம் போன்றவை சற்றம் இல்ல விதிமுறையில் நடத்தப்படுகின்றது என்று அறிவிக்கப்படின் அதில் கலந்து கொள்ளும் தனிநபர் ஒருவர் இவ்விதியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்படாமல் நடைபெறும் கருத்தரங்கு, கூட்டம் போன்றவற்றில் கலந்து கொள்ளும் ஒருவர் அவைபற்றிய ஒரு சுய மதிப்பீட்டில் இவ்விதியினைக் கடைப்பிடிப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சற்றம்_இல்ல_விதி&oldid=766374" இலிருந்து மீள்விக்கப்பட்டது