உள்ளடக்கத்துக்குச் செல்

சற்றம் இல்ல விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருத்தரங்கம் ஒன்று அல்லது அந் நிகழ்வின் ஒரு பகுதி சற்றம் இல்ல விதி (Chatham House Rule) முறையில் நடைபெறுகின்றது என்று அறிவிக்கப்படின், அக் கருத்தரங்கில் பங்குகொள்ளும் ஒருவர் மேற்படி கருத்தரங்கில் கருத்துரை வழங்கும் பேச்சாளரினதோ அல்லது அக் கருத்தரங்கில் பங்குகொள்ளும் ஏனையவர்களினதோ பெயர், அவர் சார்ந்த அமைப்பு போன்ற தனிநபர் தகவல்கள் எவற்றையும் குறிப்பிடாமல் அக் கருத்தரங்கில் தாம் பெறும் கருத்துரைகளைச் சுதந்திரமாகப் பயன் படுத்தலாம்.

கருத்தரங்கொன்றில் பரிமாறப்படும் கருத்துக்கள் பற்றிய செய்தி அறிவிப்பில் சற்றம் இல்ல விதிமுறை கடைப்பிடிக்கப்படுவது மிகச் சாதாரணமானது. கருத்தரங்கொன்றில் வெளிப்படுத்தப்படுகின்ற செய்திகள், கருத்துக்கள், குறிப்புக்கள் போன்றவை ஊடகங்கள் மூலம் பரம்பலடையும்போது புகழ்பெற்ற இவ் விதி இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒருவர் தனது கருத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதை சற்றம் இல்ல விதிமுறை நோக்கமாகக் கொண்டதுடன் அவ்வாறான கருத்துப் பரிமாற்றத்தினை துணிச்சலாக முன்வைப்பதையும் சற்றம் இல்ல விதிமுறை ஊக்குவிக்கின்றது. இவ் விதி சுதந்திரமான, பகிரங்கமான கருத்துப் பரிமாற்றத்திற்கும் பேச்சாளரின் அடையாளங் காட்டமைக்கும் வழிசமைக்கின்றது.

நன்மைகள்[தொகு]

மனிதர்கள் தமது கருத்துக்களை வெளிப்படையாகக் கூறமுடிகிறது. தமது கருத்து வெளியுலகில் பகிரங்கமாகச் சொல்லப்படும் என்று பயங்கொண்டு அதைவிடச் சொல்லாதிருப்பதே மேல் என்று நினைப்பவர்கள் தாம் கருதுவதை வெளிப்படையாகப் பேசுவதற்கும் சற்றம் இல்ல விதிமுறை துணை செய்கின்றது. அன்றியும் அங்கீகாரத்திற்கோ அல்லது உறுதிப்படுத்தலுக்கோ அவசியமின்றி, பகிரப்பட்ட ஆலோசனைகள், கருத்துக்கள், பரிந்துரைகள் போன்றவை விரும்பியவர்களால் உடனடியாகவே எடுத்துக் கொள்ளப்படலாம்: மேலும் பரிசீலிக்கப்படலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சற்றம்_இல்ல_விதி&oldid=1361024" இலிருந்து மீள்விக்கப்பட்டது