பேச்சு:சங்ககாலத் தமிழக நாணயவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png சங்ககாலத் தமிழக நாணயவியல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
COTWnew.png சங்ககாலத் தமிழக நாணயவியல் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

நாணவியல் என்பது நாணயங்களைப்பற்றிய ஒரு [துறை] படிப்பு. எனவே தலைப்பு குறித்து ஏதேனும் மாற்ற இயலுமா? --Parvathisri 12:59, 29 சனவரி 2012 (UTC)

என்னை பொறுத்தவரை நாணயவியல் என்பது நாணயங்கள் மூலம் அக்காலத்தில் நடந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வரலாற்று செய்திகளை நிறுவுதல், உறுதிசெய்தல், நாணயத்தில் இடம்பெற்ற குறிகளை கொண்டு அம்மக்களின் சமயம் ஆண்ட மன்னர்கள் பற்றி அறிதல் இதைத்தான் செய்வர். தமிழக நாணயவியல் என்றால் தமிழகத்தில் கிடைத்த நாண்யங்களை கொண்டு என்னென்ன வரலாறுகளை உறுதிப்படுத்த முடியும் என்பதே. அப்படித்தானே? இல்லை நான் கூறியதில் ஏதேனும் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும்.

மேலும் நாணயவியல் என்பது ஒரு துறை என்றாலும் அதில் இதைத்தானே செய்வர். கல்வெட்டியல் என்றால் கல்வெட்டுகளை கொண்டு அக்கால வரலாற்றை ஆராய்வது. நாணயவியல் என்றால் நாணயவியல் என்றால் நாணயங்கள் கொண்டு அக்கால வரலாற்றை ஆராய்வது. அப்படித்தானே. இல்லை வேறேதும் செய்வரா?--தென்காசி சுப்பிரமணியன் 13:20, 29 சனவரி 2012 (UTC)

தாங்கள் கூறுவது முற்றிலும் சரியே. நாணயவியலுக்கான விளக்கம்தான் இது.நாணயவியல் என்பது பல துறை சார்ந்தது. விரிவான பொருள் தரக் கூடியது. ஆனால் கட்டுரையில் நணயவியலின் வரலாறு குறிக்கப்படவில்லை. வரலாற்றை அறிய நாணயங்கள் எவ்வாறு துணை புரிகின்றன (குறிப்பாகத் தமிழக வரலாற்றை) என்ற கருத்தே உள்ளது.--Parvathisri 14:40, 29 சனவரி 2012 (UTC)

நிங்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது தமிழக வரலாற்றில் நாணயவியல் என்று கூறினால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

//ஆனால் கட்டுரையில் நணயவியலின் வரலாறு குறிக்கப்படவில்லை.//

நீங்கள் எதைக்கேட்கிறீர்கள். தமிழக நாணயவியலின் வரலாறா? பொதுவாக நாணயவியல் வரலாறு என்றால் நாணயவியல் கட்டுரையில் உள்ளது. தமிழக நாணயவியல் வரலாறு என்றால் நாணவியல் ஆராய்ச்சி தமிழக்த்தில் ஆரம்பித்த விதம் பற்றி கேட்குறீர்களா? அப்படியென்றால்,

  1. எனக்கு தெரிந்த வரையில் நாணயவியல் ஆராய்ச்சி செய்த தொல்பொருளியலாளர்கள் நடன காசிநாதன் போன்றோரை பற்றி குறிப்பிடலாம்.
  2. அவர்கள் எழுதிய நூல்கள் பற்றி குறிப்பிடலாம். மேற்கோள் பட்டியலில் உள்ளது அனைத்தும்.

வேறென்னென்ன சேர்க்கலாம்?--தென்காசி சுப்பிரமணியன் 15:34, 29 சனவரி 2012 (UTC)

நாணயவியல் வரலாற்றைக் கேட்கவில்லை.அதனைத் தனித் தலைப்புகளில் தரலாம். தமிழக வரலாற்றை அறிய உதவும் நாணயச் சான்றுகளைத் தான் தாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே தான் நாணயவியல் என்ற தலைப்பு பொருந்தாது என்றேன்.நாணயவியல் எனும் போது மிக அதிகக் கருத்துகளைச் சேர்க்க வேண்டியிருக்கும். மற்றவர்களின் கருத்தையும் கேட்போம் தென்காசி.

//தமிழக வரலாற்று நிறுவலில் நாணயவியல் பங்கு//-- இது கூட பொருத்தமாகத்தான் தோன்றுகிறது.--Parvathisri 17:27, 29 சனவரி 2012 (UTC)

I refer pandaya thamizhaka Naanayaviyal' or sanga kaala Nanayaviyal. because period in this article is similiar to sangam period. If you put thamizhaga Nanayaviyal coins printed even in 2012 AD also should be given.--Parthipendran 18:20, 1 பெப்ரவரி 2012 (UTC)+1--தென்காசி சுப்பிரமணியன் 18:23, 1 பெப்ரவரி 2012 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

இக்கட்டுரை தலைப்பை சங்ககால தமிழக நாணயவியல் என்று மாற்றலாமா? மற்றவர்களும் அதிகம் பங்களித்திருப்பதால் கேட்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் 12:10, 7 பெப்ரவரி 2012 (UTC)

தமிழக நாணயவியலுக்கான குறிப்புதவிகள்[தொகு]

  1. காசிநாதன், நடன., தமிழர் காசு இயல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003, (முதற்பதிப்பு 1999)
  2. பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.

அதில் மேற்கோள் இடப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் சென்னை நூலகத்தில் ரெபரன்சிற்காக வைத்திருப்பதாக கேள்வி. பண்டைய தமிழகம் புத்தகத்தில் குறுநில மன்னர்கள், மூவேந்தர் மற்றும் சாதவாகன மன்னர்களின் நாணயங்கல்,பற்றியும் இருந்தது அப்புத்தகம் தற்போது என்னிடம் இல்லையென்பதால் தற்போது அவற்றை பற்றி எழுத இயல்வில்லை--தென்காசி சுப்பிரமணியன் 09:53, 29 சனவரி 2012 (UTC)

கீழ் காணும் புத்தகத் தலைப்பினை விருபா தளத்தில் கண்டேன்:

  • சண்முகம், ப., சங்ககாலக் காசு இயல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003, முதற் பதிப்பு(2003).

--Nan 20:36, 11 பெப்ரவரி 2012 (UTC)

சங்ககாலம் மட்டும் எழுதவும்[தொகு]

முன்பு தமிழக நாணயவியல் என்றிருந்த தலைப்பு சில வாரங்களுக்கு முன் சங்ககாலத் தமிழக நாணயவியல் என்று மாற்றப்பட்டு விட்டது. அதனால் சங்ககாலம் தவிர்த்து மற்றவற்றை நீக்கி விட்டேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:07, 18 மார்ச் 2012 (UTC)