பேச்சு:கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பலக்கியக் கட்டுரைக்கு பாராட்டுக்கள். மத்தபடி ஒன்னும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணலை :)--ரவி 14:55, 21 டிசம்பர் 2005 (UTC)

இந்தக் கட்டுரை என்னுடைய நெடுநாள் கனவு என்றே சொல்லலாம். என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி உலகில் இது போன்றதொரு தற்படைப்பான (ஒரிஜினல்) நிறுவல் முறையை வேறொருவர் பயன்படுத்தியிருப்பார் என்று தோன்றவில்லை. இது பலக்கிய கட்டுரையானாலும், இதைப் புரிந்த கொள்ளத் தேவையான கணிதக் கருத்துருக்கள் (பலக்கியவையானாலும்) எண்ணிக்கையில் குறைவு. விரைவில் இக்கட்டுரையைப் புரிந்து கொள்ளத் தேவையான பின்புலக் கருத்துருக்களைச் சேர்க்கிறேன். தமிழில், குறைந்தது இணையத்தில், இந்தத் தலைப்பில் இதுவே முதல் ஆக்கமாகும். :-) -- Sundar \பேச்சு 08:04, 22 டிசம்பர் 2005 (UTC)


நல்ல முன்மாதிரி கணித க--72.140.138.83 11:59, 10 ஜூலை 2006 (UTC)ட்டுரை[தொகு]

உள்ளடக்கத்தை இன்னும் தெளிவாக படிக்கவில்லை. ஆனால், மேலோட்டமாக பார்த்ததில் நீங்கள் பயன்படுத்தியிருக்கும் சொற்கள், கட்டுரையை நகர்த்திய விதம் நல்ல முன்மாதிரி. கணித பின்புலம் தமிழ் விக்கிபீடியாவில் இன்னும் இல்லை. இது ஒரு சிறந்த எடுத்துகாட்டு. நன்றி. --Natkeeran 14:43, 22 டிசம்பர் 2005 (UTC)

கருத்துக்கு நன்றி. முழுக்க முழுக்க ஆங்கிலவழிக் கல்வி மட்டுமே பெற்றிருப்பதால் இக்கட்டுரை எழுதுவதற்கு தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் அகரமுதலியை பலமுறை நாட வேண்டியிருந்தது. விரைவில், தெளிவுபடுத்துதலும், பின்புலக் கருத்துரு ஏற்றமும் துவங்கலாம் என்று எண்ணியிருக்கிறேன். நீங்களும் இயன்றால் உதவலாம். -- Sundar \பேச்சு 06:44, 23 டிசம்பர் 2005 (UTC)
சுந்தர் மிக அருமையான ஆக்கம். மிகுந்த பாராட்டுக்கள்! எண்ணற்ற முடிவிலிகள் என்பது சரியா, எண்ணவியலா முடிவிலி(கள்) சரியா? எண்ணற்ற என்னும் பொழுது எண்ணிக்கையில் அளவற்றதான பல்வேறு முடிவிலிகள் என்பதாக பொருள் பட வாய்ப்புள்ளது. எண்ணவியலா முடிவிலி என்னும் பொழுது இந்த முடிவிலியானது எண்ணவியலா (எண்ணிக்கையிட முடியா) முடிவிலி எனப் பொருள் படும். கணக்கிட இயலா, வரையிலா என வேறு சொற்களும் முயன்று பார்க்கலாம். ஏனெனில், எண் என்னும் சொல் சிந்தி (மன்னுதல், கருதுதல்) என்னும் பொருளிலும் வருவதால், சிறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது (முதல் பார்வையில்). மீண்டும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!--C.R.Selvakumar 23:48, 29 ஜூன் 2006 (UTC)செல்வா
அதே போல கடைசி பத்தியில் எண்ணக்கூடிய முடிவிலிகள் என்பதை எண்ணவியலும் முடிவிலிகள் என்றோ, கணக்கிடக் கூடும் முடிவிலிகள், கணக்கிடவியலும் முடிவிலிகள் என்றோ எழுதுவது பொருந்துமா என்று எண்ணிப்பார்க்கலாம்.--C.R.Selvakumar 00:03, 30 ஜூன் 2006 (UTC)செல்வா
நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள எண்ணவியலா முடிவிலிகள் மற்று எண்ணவியலும் முடிவிலிகள் என்ற இரண்டுமே மிகப் பொருத்தமாக உள்ளது. அவ்வாறே பயன்படுத்தலாம். -- Sundar \பேச்சு 13:14, 6 ஜூலை 2006 (UTC)
சுந்தர் diagonal என்பதற்கு கோணல் கோடு என்பது பொருந்தும். குறுக்குக்கோடு என்பது horizontal line across. குறுக்கு, நெடுக்கு (vertical) என்பது வழக்கு. குறுக்கு வெட்டு என்பது cross-section. எனவே கோணல் கோட்டு வாதம் என்பது பொருந்தும் என தோன்றுகிறது. மேலும், சார்பின்மாறி என்னும் சொல்லாட்சியை நீங்கள் கட்டுரையில் விளக்கவில்லை என்று நினைக்கிறேன். இதை விளக்கவேண்டுவது அவசியம். இச்சொல் தேவையா என்பதும் விளங்கவில்லை. --C.R.Selvakumar 12:24, 6 ஜூலை 2006 (UTC)செல்வா
கோணல் கோடு என்பதே சரியாகப் படுகிறது. வாதம் என்ற சொல் வடமொழியெனக் கருதியதால் தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தொகுப்பிலிருந்து சார்பின்மாறி என்று பயன்படுத்தினேன். ஒரு கருத்தை ஏற்றோ அல்லது எதிர்த்தோ முன்வைக்கப்படுவது என்று பொருள்படும் என்று நினைத்தேன். சரியா? -- Sundar \பேச்சு 13:14, 6 ஜூலை 2006 (UTC)
பி.கு.: ஆம். இப்பொழுது நினைவிற்கு வருகிறது. என் பாட்டி-தாத்தா நெசவு செய்கையில் குறுக்கு நூல், நெடுக்கு நூல் எனப் பயன்படுத்தக் கேட்டிருக்கிறேன்.
இது முதல் பக்கத்தில் தெரியுமா உங்களுக்கு பகுதியில் வரும்முன்னர் இந்த தலைப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும். வாதம் என்பது வடமொழியா அல்லது தூய தமிழ்ச்சொல்லா? தமிழெனில் கேண்டரின் கோணல்கோடு வாதம் என்ற தலைப்பிற்கு நகர்த்தி விடலாமா? -- Sundar \பேச்சு 06:56, 10 ஜூலை 2006 (UTC)

வாதம் என்பது வடமொழிதான். வாடிக்கை, வர்த்தகம், வாணிபம் (வணிகம்), பயணம் போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் பிறமொழிச்சொற்கள்தாம். காரணம் என்பதும் வடமொழிச்சொல் வடிவு, கரணியம் என்பது தமிழ்ச்சொல். வடமொழிச்சொற்களையோ, அல்லது பிறமொழிச்சொற்களையோ, முற்றிலும் நீக்கவேண்டுமென்பதில்லை, நல்ல தமிழ்ச்சொற்கள் இருக்கும் பொழுது (அதுவும் பல நல்ல சொற்கள் இருக்கும் பொழுது, பிறமொழிச்சொற்கள் ஆளுவதை தவி்ர்க்கலாம் அல்லது குறைக்கலாம்). இதுவும், மொழித்தூய்மைக்காக அல்ல, பொழி நன்றாக கிளைத்துப் பெருகும் என்பதாலும், பிற தமிழ்ச்சொற்களுக்கு வலுவளித்து உறுதி செய்யும் என்பதாலும் நல்ல தமிழ்ச்சொற்கள் ஆளுவதை வரவேற்க வேண்டும் என்கிறேன். எடுத்துக்காட்டாக, தமிழில் கடலுக்கு, அரலை, அழுவம் (deep sea கலித்தொகையில்- தெண்கடல் அழுவத்து),, அலை, அளம், அளக்கர், (உப்பு பற்றி), ஆர்கலி, ஆழி, உரகடல் (கொந்தளிக்கும் கடல்), உவரி, ஏரிசா, ஓலம், கலி, குரவை, சுழி (திருமந்திரம் ஆண்ட சொல்), திரை, நரலை, முந்நீர், நீரதி, நெறிநீர், பரவை (பரந்துள்ளதால்), பாழி, புணரி, மகரி, வளைநீர், வேலாழி, வாரி என பல சொற்கள் இருந்தும், சமுத்திரம் என்று எழுதுகிறோம். எனவே சுந்தர் வாதம் என்று எழுதுவதில் தவறில்லை. வேறு சொல் வேண்டுமெனில், கோணல் கோடு நிறுவல் முறை என்று சொல்லலாம். எண்பித்தல் என்பது prove, proof என்பதற்குச் சிறந்த சொல், ஆனால் பரவலாக அறியப்படாத சொல். எண் என்றால் எளிமை. எண்பி என்றால் உண்மை உணரும் வகையில் எளிமையாய் கூறுதல். தேவநேயப்பாவானர் பல இடங்களில் இச்சொல்லை ஆண்டுள்ளார். எள் (எளிய) > எண் (எளிய). --72.140.138.83 11:59, 10 ஜூலை 2006 (UTC)செல்வா

நன்றி. கட்டுரையைக் "கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை" என்ற தலைப்பிற்கு மாற்றியுள்ளேன். -- Sundar \பேச்சு 12:31, 10 ஜூலை 2006 (UTC)