பேச்சு:கிராம புத்துணர்வு இயக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை, அறிவிப்பு - தனிநபர் வல--Ravidreams 13:53, 23 நவம்பர் 2006 (UTC)ைமனைகள், வலைப்பதிவுகள் ஆகியவற்றுக்கே பொருந்தும். கலைக்களஞ்சியத்துக்கு அல்ல. ஜெயராமன், தயவுசெய்து, விக்கிபீடியாவின் பிற கட்டுரைகளை பார்த்தீர்களானால், இங்கு என்ன மாதிரியான கட்டுரைகளை சேர்க்கலாம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். நன்றி.--Ravidreams 13:06, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, இந்த கட்டுரை ஒரு மகத்தான திட்டத்தை பற்றி தெரிவிக்கிறது. இதனை மற்றவர் அறிந்து கொண்டால், மற்றவர்களும் இத்திட்டத்தை அவர்கள் கிராமத்திற்கு எடுத்து செல்வார்கள். விக்கிபீடியா, படித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், பாமரர்களுக்கும் பயன்படும் வகையில் கட்டுரைகளை பெற்றிருக்கட்டுமே! --ஜெயராமன் 13:33, 22 நவம்பர் 2006 (UTC)

மன்னிக்கவும் ஜெயராமன். இந்த திட்டம் பலனளிக்கவல்லது என்பது உண்மை தான். ஆனால், விக்கிபீடியா ஒரு கலைக்களஞ்சியமாதலால் அதன் வரைமுறைகளுக்கு உட்பட்டு கட்டுரைகளை எழுத வேண்டி இருக்கிறது. இதில் படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடில்லை. சிறுவர்கள், மாணவர்கள் என்று அனைவரையும் கருத்தில் கொண்டு தான் இங்கு கட்டுரைகள் உள்ளன. இது போன்ற கட்டுரைகள் அச்சு இதழ்களில் வருவது உண்மை தான். ஆனால், விக்கிபீடியாவில எழுதப்படும் செய்திக்கட்டுரைகளில் ஆவணப்படுத்த வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குகிறோம். அந்த வகையில் இக்கட்டுரை தகுதி பெறுவதாகத் தெரியவில்லை.--Ravidreams 13:43, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ஜெயராமன், ஒரு கட்டுரைக்கான நீக்கல் பரிந்துரை அறிவிப்பு இடப்படும்போது, அது குறித்த தகுந்த பேச்சுப் பக்க முடிவு எட்டப்படாமல் அவ்வறிவிப்பை நீக்குதல் வழக்கம் இல்லை. எனவே அவ்வறிவிப்பை மீண்டும் இட்டுள்ளேன். பிறரின் கருத்தையும் அறிந்து தகுந்த மாற்றங்களை செய்யலாம். சற்று காத்திருக்க வேண்டுகிறேன். நன்றி. --Ravidreams 13:48, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, தங்களின் ஈடுபாட்டை கண்டு வியக்கிறேன். உங்கள் வாதங்களை ஒப்புக்கொள்கிறேன். மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்டு பிறகு பரிசீலிக்கவும். --ஜெயராமன் 14:47, 22 நவம்பர் 2006 (UTC)

இக்கட்டுரையின் ஆரம்பத்தை முதலில் நான் தான் இட்டேன். இதில் உள்ள தகவல்கள், இந்த திட்டம் த.வி இருக்க வேண்டியதே. ஜெயராமன் அவர்கள் இட்டவற்றில் பல தகவல்கள் உள்ளன. நடை பொருத்தமில்லை. இடப்பட்ட தகவல்களை கொண்டும் விடயநோக்கில் மேம்படுத்தி எழுதலாம். --Natkeeran 15:13, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நற்கீரன், இந்தக் கட்டுரையை நீங்கள் தொடங்கினீர்கள் என்பதை நான் கவனிக்கவில்லை. இருந்தாலும் என் கருத்தில் மாற்றமில்லை. --Ravidreams 15:43, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

இதனை திருத்தி மேம்படுத்தி எழுதலாம் என்பது என்கருத்தாகும். 70 மில்லியன்? மக்களை நோக்காக கொண்ட செயற்திட்ட மொன்றுக்கு த.விக்கியில் இடமிருக்க வேண்டும்.--டெரன்ஸ் \பேச்சு 13:34, 23 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

முதலில் தமிழக கிராமங்களில் 70 மில்லியன் மக்கள் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறி. இக்கட்டுரை முழுவதும் பரப்புரையாகவே இருக்கிறது. கட்டுரையில் தரப்பட்டுள்ள எண்களை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை. இக்கட்டுரை முழுதும் இசா அறக்கட்டளை தளத்தில் இடுவதற்கே பொருத்தமானது. வலையிலோ பிற இடங்களிலோ இது குறித்து கிடைக்கும் தகவல்களும் இசா அறக்கட்டளையால் வழங்கப்பட்டதாகவே இருக்க வாய்ப்புண்டு. தனித்து இவற்றை உறுதிப்படுத்த இப்பொழுது வாய்ப்பில்லை. இசா யோகி குறித்து வரும் அனைத்து கருத்துக்களும் நீக்கப்பட வேண்டும். இத்திட்டத்தை விளக்க அவரைப்பற்றி விளக்கத் தேவை இல்லை. அவசியம் என கருதினால், அவரைப்பற்றிய தனிக்கட்டுரை தொடங்குவதை குறித்து சிந்தித்து அதற்கு இணைப்பு தரலாம். தமிழ்நாட்டில் இது போல் ஊருக்கு ஊர் ஒரு தொண்டு நிறுவனம் உண்டு. கவர்ச்சிகரமான திட்டங்களும் உண்டு. இவற்றின் உண்மையான பலன், தாக்கம், பரப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த ஆதாரம் இல்லாதவரை விக்கிபீடியாவில் இத்தகவலை இடுவது விக்கிபீடியாவின் நம்பகத்தன்மைக்கு உகந்ததல்ல. மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய அனைத்து தகவல்களுக்கும் விக்கிபீடியா ஒரே வழி அல்ல. எல்லாவற்றையும் ஒரே இடத்தில் குவிக்க நினைப்பது இணையத்தின் அடிப்படை தத்துவத்துக்கே முரணானது. இணையம் மிகப் பரந்தது. தனிப்பட்ட வலைமனையிலோ வலைப்பதிவிலோ தகவல் இட்டால், அதற்கு அவ்வலைமனை உரிமையாளர் தான் பொறுப்பு. விக்கிபீடியாவில் நாம் அனைவரும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். உறுதிப்படுத்த முடியாத ஒரு தகவலுக்கு எப்படி நாம் பொறுப்பேற்பது? இக்கட்டுரை தொடர வேண்டும் என்று கருதுபவர்கள் நம்பகமான தகவல் ஆதாரங்களை தர வேண்டுகிறேன்.--Ravidreams 13:53, 23 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

கட்டுரையின் 1,4,5,6 ஆகிய துணைப்பகுதிகள் முழுக்க நீக்கப்பட வேண்டும். இதர பகுதிகள் ஆதாரங்களுடன் திருத்தி எழுதப்பட வேண்டும். ஆதாரங்கள் இசா அறக்கட்டளையில் இருந்து வருவதை ஏற்க முடியாது. திட்டத்துக்கு பணம் தாருங்கள் என்று கேட்பதற்கும், ஒருவரை தனித்துப் புகழ்வதற்கும், அடுத்தவருக்கு எப்படி உதவ வேண்டும் என்று அறிவுரை வழங்குவதற்கும் விக்கிபீடியா ஒரு களமல்ல. வேறு பொருத்தமான களங்களில் செய்யலாம்.--Ravidreams 14:02, 23 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி,விக்கிபீடியா எப்படி தன்னார்வ தொண்டர்களின் உதவியொடு இயங்குகிறதோ, அதே பொல் தான் ஈசா அறக்கட்டளையும் இயங்குகிறது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். நன்கொடை, தனிமனிதர் பற்றிய விவரங்களை நான் தவிர்திருக்கலாம். நற்கீரனால் இடப்பட்ட இக்கட்டுரையை நான் விரிவாக்கினேன். மேலும் நற்கீரன் தற்பொது திருத்தியமைத்துள்ளார். இனி இந்த கட்டுரையை நீக்க வேண்டியதில்லை என கருதுகிறேன். --ஜெயராமன் 14:33, 23 நவம்பர் 2006 (UTC) I am going to edit severely. Remove bulk of the article as per ravi and hope fully? We will get some thing out of it.--டெரன்ஸ் \பேச்சு 14:54, 23 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

பின்வரும் மாறுதல் தேவை[தொகு]

ஆதாரம் தேவைப்படும் இடங்களை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். இதற்கான ஆதாரங்களாக இந்த அறக்கட்டளையின் வலைத்தளத்தை கொள்ள முடியாது. அது நடுநிலையாகாது. மதிப்பு வாய்ந்த சமூக ஆய்வு நிறுவனம் ஏதேனும் ஒன்று இத்திட்டத்தின் பெறுமதியை ஆய்ந்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியும்.

நீக்கப்பட வேண்டியவை:

இந்திய கிராமங்களில் புத்துணர்வு ஊட்டும் திட்டம்[தொகு]

கிராம புத்துணர்வு இயக்கம் என்பது இந்தியக் கலாச்சாரத்தின் அடித்தளமாய் விளங்கும் கிராமங்களில், புத்துணர்வினை ஏற்படுத்துவதாக, ஈஷா அறக்கட்டளையால் மேற்கொள்ளப்படும் செயல் திட்டமாகும். ஒருமித்த சிந்தனையுள்ள பல தனி மனிதர்களும், இயக்கங்களும், கிராம மக்களுடன் ஒன்றிணைந்து மிகநுட்பமாய் உருவாக்கப்பட்ட திட்டங்களை சிறு கிராமங்களிலும் செயல்படுத்துவதன் மூலமாக நம்பிக்கையற்ற பொருளாதார மற்றும் சமூகச் சூழலில் கிக்குண்ட மக்களின் வாழ்வில் ஒரு மகத்தான மாற்றத்தை ஏற்படுத்துதே இத்திட்டத்தின் நோக்கம்.

இந்தத்திட்டம் தன்னை உணர்ந்த ஞானியாகவும், யோகியாகவும், குருவாகவும் திகழும், சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களின் விருப்பத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும் உருவாகியிருக்கிறது. மூன்றுப் பிறவிகளாய்த் தன்னுள் வேர் கொண்ட ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தை வெளிப்படுத்தும் வாகனமாக ஈஷா யோகா – இறைநிலை யோகம் சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டு தற்போது தனித்தன்மை வாய்ந்த ஆன்மீக விஞ்ஞானமாக உலகமெங்கும் இலட்சக்கணக்கான மனிதர்களுக்குப் பயன்படுகின்றது. சத்குரு அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஈஷா அறக்கட்டளை எனும் சர்வதேசத் தொண்டு நிறுவனம் பொருள்நிலை இயல்புகளைக் கடந்த உள்நிலை உண்மைகளைக் கண்டுணரவும், வாழ்வின் நோக்கமான உச்சநிலை விழிப்புணர்வு எனும் ஞானத்தை அடையவும் வழிபாட்டியாக உள்ளது.

மேற்கிந்திய அளவுகோலு்ககு இணையாக பொருளாதார வளத்தை மேம்படுத்துவதைவிட, எண்ணற்ற யோகிகள் மற்றும் ஞானிகளின் ஞானவெளிப்பாட்டால் உருவான தனிச்சிறப்புமிக்க கலாச்சாரத்தை கிராம மக்கள் வாழ்வில் மீண்டும் நடைமுறைக்கு எடுத்துவருவதே மிகுந்த பயனைத்தரும் என்பது சத்குரு அவர்களின் உணர்வாகும். அர்பணிப்புணர்வுள்ள பல்லாயிரக்கணக்கான தன்னார்வ தொண்டர்களும், நன்கொடையாளர்களும், அவர்களுடைய பிரதிநிதிகளும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் உதவியுடன் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபடுகிறார்கள்.

(காரணம் - இத்திட்டத்தை விளக்க சத்குருவை பற்றி குறிப்பிடத் தேவை இல்லை (அதுவும் இவ்வளவு புகழ்ச்சியாக). இது விக்கிபீடியாவின் நடுநிலைக் கொள்கைக்கு முரணானது.)


இத்திட்டத்தில் நீங்களும் இணைந்து செயலாற்றுவதற்கான வாய்ப்புகள்[தொகு]

1 பிறந்தநாள் மற்றும் நினைவுநாட்கள் ஆகிய தினங்களில் இலவச மருத்துவச் சேவைக்கான நன்கொடை a. ஒரு நாள் நடமாடும் மருத்துவமனைக்கான மருந்து செலவு: ரூ. 1,500/- b. ஒரு மாதம் நடமாடும் மருத்துவமனைக்கான மருந்து செலவு : ரூ. 40,000/- c. ஒரு கிராமத்திற்கான ஒரு மாத மருந்து செலவு: ரூ. 4,500/- 2100 / 1000 மரக்கன்றுகள் நட்டு பராமரித்திட: ரூ. 3,600/- / 36,000/- 3. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுத் திடல்கள் அமைத்திட : ரூ. 5,000/- 4. கிராமப்புறக் குழந்தைகளுக்கான இலவச கம்ப்யூட்டர் வகுப்புகள் நடத்திட : ரூ. 8,000/- 5. கிராமப்புறங்களில் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்திட : ரூ. 3,000/- 6. சுமார் 240 கிராம மக்கள் பயனடைகிற யோக வகுப்புகள் நடத்திட: ரூ. 6,000/- 7. கிராமங்கள் தோறும் புத்துணர்வுக் கருவறை அமைத்திட : ரூ.2,00,000/- 8. கிராமங்கள் தோறும் மூலிகைத் தோட்டம் அமைத்திட: ரூ. 11,000/- நமது புண்ணிய பூமியில் வாழும் மக்களின் நலவாழ்வில் நாட்டமுடைய பிற அமைப்பினரையும், மக்கள் குழுவினரையும், தனி மனிதர்களையும், இந்த மகத்தான முயற்சிக்கு உறுதுணையாய்த் திகழவும், பங்கேற்றிடவும் அன்புடன் அழைக்கின்றோம்.

(காரணம் - எந்த அமைப்பும் விக்கிபீடியாவில் நன்கொடை அறிவிப்பு இடுவதை அனுமதிக்க முடியாது)

ஓர் வேண்டுகோள்[தொகு]

உலகின் செல்வ வளத்தையும், உலகிலிருந்து கிடைக்கக் கூடியவற்ளையும் பார்க்கும் பொழுது இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நமக்கத் தேவைப்படும் நிதி வெகு சொற்பமானதே. ஆனால் வாழ்க்கைக்கு எதிர்மறையான விஷயங்களுக்குக் கொடுக்கப்படும் தொகையைப்பார்த்தால், இது ஒரு விஷயமே அல்ல. இந்தியாவில் ஒரு நாளில் புகையிலைக்காகவும், மதுபானத்திற்காகவும், ஒரு சில ஏவுகணைகளுக்காகவும் செலவிடப்படும் நிதி நம்மிடம் கொடுக்கப்படுமேயானால், அதைக்கொண்டே அடுத்த 10 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை செயலாக்க நம்மால் முடியும்.

இதுவரை இது நிகழாமலிருப்பதன் காரணம், நம்மிடம் போதுமான வளங்கள் இல்லையென்பதால் அல்ல. ஒருபோதும் இதைப்பற்றி நாம் அக்கறையோடு இல்லை. யாரோ பாதிக்கப்படுகிறார்கள், இது நம்முடைய பாதிப்பு இல்லையென நாம் நினைக்கின்றோம். நமக்கு பாதிப்பு வரும் வரை, அதைப்பற்றி நாம் அந்த அக்கறையும் கொள்ளாமலிருக்கிறோம். நாம் ஏற்படுத்த விரும்புகின்ற கலாச்சார ஆன்மீகச்சூழல், தற்போது தன்பங்களைக் குறித்ததல்ல. அத்தனை துன்பங்களும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்பதே. குறைந்த பட்சம் அடுத்த தலைமுறைக்குள்ளாவது பாதிப்புகள் பாதியாகக் குறைக்கப்பட வேண்டும். நம்மால் அதனை நிகழ்த்திட முடியும். அதற்கான நுட்பங்களும், வழிமுறைகளும் நம்மிடம் உள்ளன. இதனை செயலாக்க வேண்டும். அவ்வளவுதான்.

இவையனைத்து்ம நிகழ பெருமளவு பொருளாதார உதவியும், விசாலமான இதயம் கொண்ட அர்பணிப்பு உணர்வுள்ள மனிதர்களின் வருனையும் செயலுமே தேவை. இது உய்கள் இதயத்திலிருந்து ம்டடுமே நிகழ முடியும். நீங்கள் செயல்திறன் மிக்கவர் என்றாலோ, விசாலமான இதயத்தோடோ, புத்திக்கூர்மை மிகுந்தவர் என்றாலோ அல்லது மிகுந்த நிதிவசதியுடனோ, எந்த வகையான மனிதர் என்றாலும் சரி, நீங்கள் தேவை. இவை அனைத்துமே, இது நிகழ்ந்திடத் தேவையாயிருக்கிறது. நீங்கள் மனிதநேயம் மிக்கவரெனில், இது உங்கள் திட்டம். - சத்குரு ஜகி வாசுதேவ்

(காரணம் - விக்கிபீடியாவில் அறிவுரை தேவை இல்லை)

மேலும் விபரங்களுக்கு[தொகு]

மேலும் விபரங்களுக்கு, ஈசா யோக மையத்தின் கிராம புத்துணர்வு இயக்கத்தின் இணையதளத்தை பாருங்கள். ஆதாரம் மற்றும் இணையதள முகவரி: http://www.ruralrejuvenation.org/

(காரணம் - ஏற்கனவே வெளி இணைப்பில் வலைத்தள முகவரி இருக்கிறது)

--Ravidreams 15:13, 23 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


மாற்றங்கள்[தொகு]

மாற்றங்களுக்கு நன்றி, டெரன்ஸ். தாற்காலிகமாக delete வார்ப்புருவை நீக்கி உள்ளேன். எனினும், விக்கிபீடியாவின் கட்டுரைப் பரப்பு குறித்த தொடர்ந்து உரையாடல்களை அடுத்து அவசியமானால் மறு ஆய்வு செய்யலாம். கட்டுரை உரை திருத்தப்பட வேண்டி உள்ளது. அதன் பிறகு துப்புரவு வார்ப்புருவை நீக்கி விடுகிறேன்--Ravidreams 15:19, 23 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


anytime :-()--டெரன்ஸ் \பேச்சு 15:26, 23 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

விக்கிபீடியா நடைக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது[தொகு]

இந்தக் கட்டுரையை விரிவாக்கி, விக்கிபீடியாவின் நடைக்கேற்ப எழுதியிருக்கிறேன். உங்கள் கருத்து ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். --Jayaram10g 12:01, 28 பெப்ரவரி 2007 (UTC)