பேச்சு:கியார்கு கேன்ட்டர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கியார்கு கேன்ட்டர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

"கியார்கு கேண்டர்" என்ற தலைப்பிற்கு நகர்த்தலாமா? மூன்று சுழி "ணகரம்" வருமா இல்லை இரண்டு சுழிதானா? -- Sundar \பேச்சு 05:15, 17 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

தமிழ் முறைப்படி கேண்ட்டர் என்று வரலாம். கேண்டர் என்று எழுதினால் Kay-Ndar என்றுதான் ஒலிக்க வேண்டும். Kay-Ntar என்று ஒலிக்க வேண்டுமெனில் கேண்ட்டர் என்று எழுத வேண்டும். தமிழ் மூன்றுசுழி ணகர ஒலி வேண்டாம் எனில் கேன்ட்டர் என்று எழுதினால் (Keyntar) என்ற ஒலிப்பு வரும் (இடையின னகரத்திற்குப் பின்னர் டகரம் தமிழில் வராது, ஆனால் இது வேற்று மொழிப் பெயர்ச்சொல் ஆகையால் அப்படி எழுதலாம். எளிதான எழுத்துப்பெயர்ப்பு (அதிகம் குழப்பம் தராதது): கேண்ட்டர் என்பதுதான். கேண்டர் என்பது தவிர்க்க வேண்டியது (வேற்று மொழிச் சொல்லை கூடிய ஒலித்துல்லியத்துடன் ஒலிக்க வேண்டுமெனில்). மற்றும், செருமன் மொழியில் ஜகரம் கிடையாது. எனவே ஜார்ஜ் என்று சொல்ல இயலாது. அடுத்ததாக, கேன்ட்டர் என்று சொல்வார்களா கான்ட்டர் என்று சொல்வார்களா என்றும் அறியேன் (கான்ட்டர் என்றுதான் செருமன் மொழி இயல்பின்படி ஒலித்தல் வேண்டும்) --செல்வா 11:47, 17 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
அப்படியானால் "கியார்கு கேண்ட்டர்" என்று கொள்வோமா? "காண்ட்டர்" என்பதிலும் எனக்கு உடன்பாடே. -- Sundar \பேச்சு 15:51, 17 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
ஆம், கேண்ட்டர் என்றே கொள்வது இப்போதைக்கு நல்லது. சுந்தர் நீங்கள் கட்டுரையைத் திருத்திக் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி--செல்வா 16:04, 17 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]