பேச்சு:காம சாத்திரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காம சாத்திரம் என்பது பொருத்தமானது. சாத்திரம் என்பது பரவலாகப் பயன்படுத்தப்படுவதே. கோபி 08:38, 8 டிசம்பர் 2007 (UTC)

athashastra அர்த்தசாஸ்திரமாகவே அறியப்படும் நிலையில், kama shastra காம சாஸ்திரமாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. வினோத் 08:49, 8 டிசம்பர் 2007 (UTC)

அர்த்தசாத்திரத்தை நீங்கள் அர்த்தசாஸ்திரம் என்றா பயன்படுத்துகிறீர்கள்? :) சாஸ்திரம் என்பது சாத்திரம் என எழுதப்படுவது மிக இயல்பானது. கோபி 11:24, 8 டிசம்பர் 2007 (UTC)
சாத்திரம் என்பதை பொதுப்பயன்பாட்டில் நான் கண்டதில்லை. நான் படித்த பெரும்பாலான புத்தக்ங்கள் நாளேடுகளில் சாஸ்திரம் என்றே குறிப்பிட்டு பார்த்திருக்கிறேன். எ.டு. அர்த்தசாஸ்திரம். போன்றவை. வினோத் 11:35, 8 டிசம்பர் 2007 (UTC)
சாத்திரம் என்று செல்வது இலங்கையில் வழமை. மேலும், அது தமிழ் பலுக்கல் முறைக்கு இணையாக அமையும். பிற பயனர்களும் கருத்து தெரிவித்தால் நன்று. --Natkeeran 12:57, 8 டிசம்பர் 2007 (UTC)
தமிழகத்தில் சாஸ்திரம் என்ற சொல் இன்னும் ஆளுமையில் உள்ளது. வாஸ்து சாஸ்திரம் போன்ற சாஸ்திரம் சேர்ந்த சொற்கள் பொதுப்பயன்பாட்டில் உள்ளன. ஸ'வை நீக்கி இதை வாத்து சாத்திரம் என எழுத முடியுமா :-) என்ன?. எனவே பொது பயன்பாட்டைக் கருதி இதனை காம சாஸ்திரம் எனவே வைக்குமாறு வேண்டுகிறேன் வினோத் 13:05, 8 டிசம்பர் 2007 (UTC)
தமிழகத்தில் வழக்கம் என்றால், சாஸ்திரம் என்று எடுத்தாள்வதில் பிரச்சினை இல்லை. --Natkeeran 13:16, 8 டிசம்பர் 2007 (UTC)
Dont Take it Seriously, Just a Light Hearted Doubt. How would you actually Call வாஸ்து சாஸ்திரம் in Sri Lanka ? I Suppose you would say வாத்து சாத்திரம் :-)) ???? வினோத் 13:21, 8 டிசம்பர் 2007 (UTC)

தமிழகத்தில் வழக்கமே என்றாலும் தமிழுக்குப் பொருத்தமாகச் சாத்திரம் என்பது பயன்படுத்தப்படக்கூடியதாக இருக்கையில் சாஸ்திரம் பயன்படுத்தப்படுவது பொருத்தமல்ல. எல்லா இடங்களிலிலும் பொதுப் பயன்பாடு கருதுவதானால் த.வி.யில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் ஏராளம். பொதுப்பயன்பாடு என்பது எவ்வாறு வருகிறது? வெதுப்பகம், வெதுப்பி, குளிர்களி (Bakery, Bread, Ice cream) போன்ற சொற்கள் யாழ்ப்பாணத்தில் பொதுப்பழக்கத்தில் இருந்த காலங்கள் உள்ளன. பயன்படுத்தினால் பொதுப்பயன்பாடு வந்துசேரும். பொருத்தமா என்பது முக்கியமானது. கோபி 13:28, 8 டிசம்பர் 2007 (UTC)

வாஸ்து என்பதை தமிழ்ப்படுத்தி எழுதினால் வாசுத்து என்றே வரும். வாத்து என்றல்ல :) கோபி 13:28, 8 டிசம்பர்

2007 (UTC)

சாஸ்திரம் என்பது சாசுதிரம் ஆகாமால், சாத்திரம் ஆகும் போது, Analogyஆக வாஸ்து என்பது வாத்து என்றுதானே ஆக வேண்டும். அதை 'வாசுத்து' எனக்கொள்வது தவறு :-) வினோத் 13:35, 8 டிசம்பர் 2007 (UTC)
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியின் புகழ்பெற்ற வரிகளைக் கவனிக்கலாமே? என் அறிவுக்கு உட்பட்டு, சாத்திரம் என்று எழுதுவது தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்ட பொதுவழக்கே. பிற மொழிச் சொற்களை எப்படி ஒலிப்பு பிசகாமல் எழுதுவது என்றே பல உரையாடல்களிலும் நேரம் கழிவது சலிப்பாக இருக்கிறது :( முதலில் தமிழில் ஆக்கப்பட வேண்டிய கட்டுரைகளை ஒழுங்காக எழுதி முடிக்கவே இன்னும் பல ஆண்டுகள் ஆகும். அதற்குப் பிறகு நேரம் இருந்தால் பிற மொழி ஒலிப்பைப் பற்றிக் கவலைப்படலாம்--ரவி 15:26, 8 டிசம்பர் 2007 (UTC)
Guys, Its too boring to discuss the same topic again and again, and we are also not getting any where. I suppose I am the one, who starts topic like these(Atleast Lately...). Lemme not do that Again. So no more topic starters on these topics from my side henceforth. I Apologize for that . வினோத் 15:42, 8 டிசம்பர் 2007 (UTC)

வினோத், சாத்திரம் என்னும் சொல் தமிழகத்திலே பரவலாக ஆளப்படும் சொல். மகாகவி பாரதியாரின் புகழ் பெற்ற பாடல்களுள், "பாருக்குள்ளே நல்ல நாடு" என்பதும் ஒன்று. அதிலே


தீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்திலே உப காரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு
தருவதிலேஉயர் நாடு

இதுபோல நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகள் உண்டு. "சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா" என்னும் பரவலமான பாட்டில்,


சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடி
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி

என்று மூன்று முறை இரண்டு வரிகளில் பாடியுள்ளார். அதுமட்டுமல்ல, சாத்திரம் என்னும் சொல்லுக்கு எதுகையாக ஆத்திரம் என்னும் சொல்லையும் ஆண்டுள்ளார். சாத்திரம் என்பது தமிழில் ஆளப்படும் சொல்.

வாஸ்து சாஸ்த்ரம் பற்றி: விண்மீன் அசுவனியை அச்சுவினி (தமிழ் லெக்சிகன் அல்லது கழக தமிழ் அகராதியைப் பார்க்கவும்.) எழுதுவது போல வாசுத்து சாத்திரம் என்றோ அல்லது வாசித்து சாத்திரம் என்றோ எழுதலாம். "தமிழ் நூல்" என்பதை சமசுகிருதத்திலோ, ஆங்கிலத்திலோ எப்படி எழுதுவார்கள்? "புலி நூல்", "புளி நூல்" என்பதை எப்படி எழுதுவார்கள்? ஆங்கிலத்தில் "ஞானசம்பந்தன்" என்பதை எப்படி எழுதுவார்கள் (ஒலிப்பார்கள்?). மேலும் வாத்து சாத்திரம் என்று எழுதினாலும் பிழை இல்லை வாத்து என்னும் பறவை சாத்திரம் என்று குழம்ப நேர்ந்தால் அது இயற்கை - எப்படிப் புலி நூல், புளி நூல் வேறுபாடு காட்டவியலாதோ அப்படித்தான் தமிழிலும். வாஸ்து சாத்திரம் என்றும் எழுதலாம். ஸ்வாமி என்றுதான் எழுத வேண்டும் சுவாமி என்று எழுதலாகாது என்பது தமிழில் எழுதும் பொழுது தமிழ் மரபைப் பின்பற்றவேண்டும் என்பதை மதிக்காமை ஆகும். சீனிவாசன் என்பது பெருவழக்காக இருப்பது இதனை ஸ்ரீநிவாஸன் என்றுதான் எழுத வேண்டும் தமிழில் தனி எழுத்துக்கள் இதற்காக ஏற்க வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதில்லை. ஆங்கிலத்திலே paraiah, pundit முதலான சொற்களை ஏற்றுள்ளதால், அவர்கள் (ஆங்கில மொழியாளர்கள்) றகரத்தையும் ணகரத்தையும் ஏற்க புதிய எழுத்துக்களைக் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்னும் வாதம் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். சாஸ்திரம் என்பதைப் பின்னர் சாஸ்த்ரம் என்பர், பின்னர் ஷாஸ்த்ர என்பர். வடமொழி, அரபுமொழி, சீனமொழி பற்றிய சிறப்பு நூல்களில் (தமிழில்), பொருத்தமான ஒலித்திரிபுக் குறிகளுடன் மூலச் சொற்களை குறிக்கலாம். அது சிறப்பு நூல்களில் மட்டும். ஆங்கிலத்தில் எத்தனை எத்தனை உலக மொழிகளில் உள்ள மூல நூல்களைப் பற்றி எத்தனை விரிவாக எழுதி அலசுகிறார்கள் என்று பாருங்கள். இன்னும் சொல்லப்போனால், சமசுகிருதம் பற்றிய நூலறிவு ரோமன் எழுத்தில் எழுதி ஆங்கிலத்தில் எழுதியிருப்பதைக் கொண்டுதான் மிகப் பலரும் அறிகின்றனர்.அவர்கள் (பொது) மொழியில் இன்னும் 26 எழுத்துக்களே. தமிழில் எழுதும் பொழுது தமிழ் மரபை அறிந்து போற்ற வேண்டும். தமிழ் இன்றுள்ள மொழிகளில் மூத்த மொழிகளில் ஒன்று. அதனை மதிக்காமல் இழிவு படுத்துவது ஏற்கக்கூடியதில்லை. --செல்வா 15:44, 8 டிசம்பர் 2007 (UTC)

Guys, I Apologize for Starting Topics like these and wasting others' precious Time and Effort.(Most of Discusions lately, had been started by me:-( ) Thats it, I wont hence forth Speak anything Related to Grantham, for that any stuff. I think I have too much of a loud mouth too poke my nose to each and every issue and comment on it. I tend to forget that you guys 'are' this project, as a late entrant, me peeking into all the issues and stuff should have been avoided, which I didn't. May be you guys would have done well, if I have not Arrived Here. I think I am more of nuisance to you guys than much help. Anyways, from now onwards I will be a quiet Contributor(Which I Should have been!). Seriously, Guys Please be Frank(no formal replies please!), If you think I am causing Much Nuisance Around here, Tell me. I will correct my actions. வினோத் 16:31, 8 டிசம்பர் 2007 (UTC)

வினோத், நீங்கள் மிகக்குறுகிய காலத்தில் மிகவும் சிறப்பாக நீங்கள் பங்களித்து எல்லோருடைய மதிப்பையும் பெற்றிருக்கின்றீர்கள். நீங்கள் கேட்ட கேள்விகள் யாவுமே நல்ல கேள்விகள்தான். நாம் ஒவ்வொருவரும் நம் கருத்தைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல apologize ஏதும் சொல்லவே தேவை இல்லை. அருள்கூர்ந்து தவறாக நினைக்காதீர்கள். Your views are taken in with due respect and consideration. We 'are' not the project. We (inclusive we) all contribute to the project in various ways. நாம் எல்லோரும் கூட்டாக எழுப்பும் இந்த கலைக்களஞ்சியத்தில் அவ்வப்பொழுது மாற்றுக்கருத்துகள் எழுவது இயற்கைதானே. இந்த உரையாடல்களில் நம்மில் பலரும் பல கருத்துக்கள் கற்றுக்கொள்ள இருக்கும். உங்கள் வரவால், புத்தமதம், கிரந்த எழுத்துக்கள், பிராமி, தெலுங்கு மொழி என்று ஏராளமான தலைப்புகளில் புதிய செய்திகளும் கருத்துக்களும் கற்றுக்கொள்ள இயலும். கருத்துக்களை நேர்மையாக, வளர்முகமாக (எப்பொழுதுமே சீரியதாக ("சீரியஸ்" ஆக) இருக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் வாத்து சாத்திரம் கண்டு நான் மகிழ்ந்த நேரமும் உண்டு :) அத்தகைய கருத்துக்களைத் தயங்காமல் முன் வையுங்கள்). நிங்கள் உங்கள் இயல்பு போலவே எழுதுங்கள் உரையாடுங்கள். வளர்முகமாக எண்ணி செயலாற்றிப் பயன் பருக்கலாம். கூட்டுழைப்பு என்பதால் சில மாற்றங்களோடு பதிவாகும், அதனை நீங்கள் ஏற்பீர்கள் என்று நினைக்கிறேன். Frankly, I greatly respect your contributions and your energy and enthusiasm. I also enjoy your light-hearted banter. அதே கோணத்தில், அருள்கூர்ந்து என்னுடைய மறுமொழிகளையும் ஏதும் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நன்றி. --செல்வா 17:04, 8 டிசம்பர் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காம_சாத்திரம்&oldid=364791" இலிருந்து மீள்விக்கப்பட்டது